Published:Updated:

Tick-borne: `60 பேர் பாதிப்பு; 7 பேர் உயிரிழப்பு!’ - சீனாவில் பரவும் புதிய வைரஸ்

Virus
Virus ( Bgr.com )

கொரோனா போலவே இந்த வைரஸ் தொற்றும் பாதிப்புள்ள ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவக்கூடும் என்றும் நோயாளிகளின் ரத்தம் அல்லது சளி வழியாக இது மற்றவர்களுக்குப் பரவும் என்றும் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் தொடங்கி உலகம் முழுதும் உலா வந்துகொண்டிருக்கும் கொரோனாவின் கோரப்பிடியே இன்னும் தளர்ந்தபாடில்லை. அதற்குள் வரிசைகட்டி வந்தன ஹண்டா, G4 வைரஸ் என்ற புதிய நோய்க்கிருமிகள். இவை கொரோனா அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் பயத்தை அதிகமாகவே ஏற்படுத்தின. இந்த வரிசையில் தற்போது நம்மை மிரட்ட வந்திருக்கிறது சீனாவில் பரவி வரும் 'Tick-borne வைரஸ்.'

virus
virus
Unsplash

சீனாவில், ஜியாங்சு மாகாணத் தலைநகரான நாஞ்சிங்கைச் சேர்ந்த ஒரு பெண் தனக்குக் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தது தெரியவந்ததும் கொரோனாவாக இருக்குமோ என்ற பயத்தில் மருத்துவமனைக்குச் சென்றார். ஆனால், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. சிகிச்சையில் அவரது உடலின் உள்ளே லுகோசைட், ரத்த பிளேட்லெட்கள் குறைவதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இதனிடையே ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு, அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

`சமாதிகள் எழுப்பப்படாத சுடுகாடு!' - அணுகுண்டால் அழிந்த ஹிரோஷிமா, நாகசாகி #Hiroshima75

அவருக்கு என்ன நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கும் என்பது குறித்து மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் மேற்கொண்ட சோதனையில் அது ஒரு புது வைரஸ் தொற்று என்று தெரியவந்துள்ளது. அந்த வைரஸுக்கு 'Tick-borne வைரஸ்' என்று பெயரிட்டுள்ளனர்.

 hospital
hospital

இதுவரை, சீனாவில் இந்த வைரஸ் தொற்று காரணமாக ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். 60 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். Tick-borne வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள், இந்த நோய்த்தொற்று மனிதர்களுக்கு உண்ணி மூலம் பரவியிருக்கலாம். கொரோனா போலவே இந்த வைரஸ் தொற்றும் பாதிப்புள்ள ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவக்கூடும் என்றும் நோயாளிகளின் ரத்தம் அல்லது சளி வழியாக இது மற்றவர்களுக்குப் பரவும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்தே பல்வேறு வகையான வைரஸ்களுடன் போராடி வரும் நமக்கு Tick-borne வைரஸ் மேலும் ஒரு சவாலா..? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நாகர்கோவில் சிறார் வதை: சீரான உடல் நலம்! - சிறையில் அடைக்கப்பட்ட நாஞ்சில் முருகேசன்
அடுத்த கட்டுரைக்கு