சாதாரண கூந்தல்
வாரத்தில் மூன்று முறை கூந்தலை அலசி, கண்டிஷனர் உபயோகியுங்கள்.
வைட்டமின் மற்றும் தாதுச்சத்துகள் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் ஒருவேளை முழுமையான உணவாக மாற்றிக்கொள்ளுங்கள்.
நிறைய தண்ணீர் அருந்துங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஎண்ணெய்ப் பசையான கூந்தல்
வெதுவெதுப்பான நீரில் கூந்தலை அலசுங்கள்.
மைல்டான, ஹெர்பல் ஷாம்பூ பயன்படுத்துங்கள்.
கண்டிஷனர் உபயோகிக்க மறக்காதீர்கள். ஷாம்பூ வுடன் சேர்ந்த கண்டிஷனர் தவிர்த்து ஷாம்பூவையும் கண்டிஷனரையும் தனித்தனியே பயன்படுத்துங்கள்.
கொழுப்பு அதிகமுள்ள உணவுகளைத் தவிருங்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
வறண்ட கூந்தல்
லேசாக சூடுசெய்த எண்ணெயால் கூந்தலை மசாஜ் செய்து சிறிது நேரம் ஊறிய பிறகே கூந்தலை அலசவும். அப்படி ஆயில் மசாஜ் செய்யும்போது சீப்பால் கூந்தலை நுனிவரை வாரிவிடவும். உடைந்த நுனிகளுக்கு இது ஊட்டம் தரும்.
சாதாரண கண்டிஷனர் தவிர்த்து இன்டென்சிவ் கண்டிஷனர் எனக் கேட்டு வாங்கிப் பயன்படுத்துங்கள்.
துத்தநாகச்சத்து அதிகமுள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.