லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: வெஜிட்டேரியன் Vs வெயிட் லாஸ்

எடைக்குறைப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
எடைக்குறைப்பு

டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

வேறு யாரும் உங்களை நம்பாவிட்டாலும் சரி, உங்களுக்கு உங்கள்மீது நம்பிக்கை இருக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் வெற்றியாளராகிறீர்கள்.
- வீனஸ் வில்லியம்ஸ்

ந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ஐசிஎம்ஆர்) தகவலின்படி, இந்தியாவில் பருமன் பாதிப்பு அதிகரித்து வருகிறது, அதிலும் `சென்ட்ரல் ஒபிசிட்டி' எனப்படும் வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் பருமன் சேர்வது ஆபத்தான அறிகுறி, இதயநோய்களுக்கான பிரதான காரணியும்கூட என்கிறது. அதிக உடல் எடை மற்றும் பருமன் பாதிப்புகளால் ஆண்களைவிட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: வெஜிட்டேரியன் Vs வெயிட் லாஸ்

பருமனுக்கான காரணங்கள் பல. என்னுடைய அனுபவத்தில் நான் பார்த்த, பார்த்துக்கொண்டிருக்கிற காரணங்களில் பிரதானமானவை, ஆரோக்கியமில்லாத உணவுப்பழக்கம், உடற்பயிற்சியற்ற வாழ்க்கைமுறை, தவறான உணவுத் தேர்வு, வசதியான உணவுகளைச் சாப்பிடுவது, அடிக்கடி வெளியிடங்களில் சாப்பிடுவது... இவையெல்லாம் இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் என்ற நிலையை ஏற்படுத்தும். பருமனாக உள்ளவர்கள் சராசரி வயதினரைவிட அதிக அளவில் நீரிழிவாளர்களாக மாறுவதன் பின்னணி இதுதான். ஆரோக்கியமான எடையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையே இது உணர்த்துகிறது.

எடைக்குறைப்பு என்று யோசிக்கும்போதே ‘நான் சைவம். அதனால் எடைக்குறைப்பு என்பது எனக்கு மிகவும் சிக்கலான விஷயமாக இருக்கும்’ என்ற எண்ணம் பலருக்கு ஏற்படுவதையும் பார்க்கிறேன். அந்த எண்ணம் இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள். அசைவ உணவுப்பழக்கம் உள்ளவர்களைப் போலவே சைவ உணவுக்காரர்களுக்கும் எடைக்குறைப்பு முயற்சி எளிதில் சாத்தியமே. முறையாகப் பின்பற்றும்பட்சத்தில் சைவ உணவுக்காரர்களுக்கு அது இன்னும் சுலபமும்கூட.

சைவ உணவுக்காரர்களில் பல வகை உண்டு.

 Ovo வெஜிட்டேரியன் - தாவர உணவுகளோடு முட்டை மட்டும் சாப்பிடுபவர்கள்.

 Lacto வெஜிட்டேரியன் - தாவர உணவுகளோடு, பால் பொருள்கள் சாப்பிடுபவர்கள்.

 Vegan - தாவர உணவுகளை மட்டும் உண்பவர்கள் (பால் உணவுகளைக்கூடத் தவிர்த்துவிடுவார்கள்).

 Pescaterian – தாவர உணவுகளோடு மீன் மட்டும் சாப்பிடுபவர்கள்.

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: வெஜிட்டேரியன் Vs வெயிட் லாஸ்
எடைக்குறைப்பு ஏ டு இஸட்: வெஜிட்டேரியன் Vs வெயிட் லாஸ்

மிகக் குறைந்த அளவே பதப்படுத்தப்படுவதால் தாவர உணவுகள் சிறந்தவை. அவற்றில் முழுமையான, சிறந்த ஊட்டச்சத்துகள் கிடைக்கும். ஆரோக்கியமான கொழுப்பும் இருக்கும். பல வண்ணங்களில் கிடைக்கும் தாவர உணவுகள் அன்றாட ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் பைட்டோகெமிக்கல் தேவைக்கு உத்தரவாதம் அளிப்பவை. இவை உடலுக்குள் ஏற்படும் ஸ்ட்ரெஸ்ஸை விரட்ட அவசியமானவை.எடைக்குறைப்புக்கு அடிப்படைத் தேவையான நார்ச்சத்து, தாவர உணவுகளில் உண்டு. காய்கறி மற்றும் பழங்களில் நீர்ச்சத்தும் அதிகம் என்பதால் அவை உடலின் நீர்த்தேவை குறையாமல் பார்த்துக்கொள்ளவும் உதவுபவை. சைவ உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது அவற்றில் உப்பு, பிரிசர்வேட்டிவ் அளவைக் குறைப்பதன் மூலம் ரத்த அழுத்த அளவு இயல்பு நிலைக்குத் திரும்பும்.

சைவ உணவில் இத்தனை நன்மைகள் இருப்பதெல்லாம் சரிதான். ஆனால் புரதம்?

இந்தக் கேள்வி பலருக்கும் உண்டு.ஏனென்றால், சைவ உணவில் போதுமான புரதம் கிடைப்பதில்லை என்ற பரவலான கருத்து உண்டு. நம்புங்கள்... சைவ உணவுகளும் புரதச்சத்து கொண்டவையே.

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: வெஜிட்டேரியன் Vs வெயிட் லாஸ்

எடைக்குறைப்புக்குப் புரதமும் தேவை.

என்னைச் சந்திக்க வரும் சைவ உணவுக்காரர்கள் பலரும், ‘புரோட்டீனுக்கு பருப்புதான் எடுத்துக்க வேண்டியிருக்கு. பருப்பு சாப்பிட்டா வாயுத் தொந்தரவு வருது. அப்புறம் புரோட்டீனுக்கு என்ன செய்யறது’ என்று கேட்பார்கள்.

சமைப்பதற்கு முன்பாகவே பருப்பை ஊறவைப்பது, முளைகட்டுவது, புளிக்க வைப்பது, ஆவியில் வேகவைப்பது போன்றவற்றின் மூலம் இந்தப் பிரச்னையை சமாளித்துவிடலாம். இதற்குப் பிறகும் வாயுத் தொந்தரவு நீடித்தால் குறிப்பிட்ட அந்தப் பருப்பைத் தவிர்த்துவிடுங்கள். பருப்பில் மட்டும்தான் புரதம் இருக்கிறது என நினைத்துக்கொள்ள வேண்டாம். பனீர், தயிர், சோயா, டோஃபு என்ற சோயா பனீர், சோயா சங்க்ஸ், உலர்ந்த சோயா பீன் பருப்பு, நட்ஸ், நட்ஸிலிருந்து பெறப்படும் வெண்ணெய், தயிர், பால், விதைகள், பச்சைப் பட்டாணி, கீன்வா, காளான்... இப்படி இன்னும் எத்தனையோ உணவுகளில் புரதம் உண்டு. இவ்வளவு ஏன்? பால் உணவுகள்கூட எடுத்துக்கொள்ளாத வீகன் உணவுக்காரர்களுக்கும் பிரவுன் ரைஸ், பட்டாணி போன்றவற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படும் புரோட்டீன் சப்ளிமென்ட்டுகள் கிடைக்கின்றன.

சைவ உணவுப்பழக்கமுள்ளோர் எடைக்குறைப்புக்கான முயற்சிகளைத் தொடங்கும்போது சில விஷயங்களை கவனத்தில்கொள்ள வேண்டும்.

அவை அடுத்த இதழில்...