Published:Updated:

லாக்டௌனில் குறையும் தாம்பத்ய ஆர்வம்... விடை காண வேண்டிய 7 கேள்விகள்! #ExpertOpinion

தாம்பத்ய ஆர்வம் குறைக்கும் லாக்டௌன் நாள்கள்
தாம்பத்ய ஆர்வம் குறைக்கும் லாக்டௌன் நாள்கள்

வீட்டில் கணவன், மனைவி எப்போதும் ஒன்றாகவே இருப்பது சலிப்பை ஏற்படுத்தவே செய்யும். இதுபோன்ற நேரங்களில் தனிநபர் சுதந்திரத்துக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்.

லாக்டௌன் நாள்கள் தொடங்கிய புதிதில் அனைத்துமே சந்தோஷமாகக் கழிந்தது. குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பது, தினம் விதவிதமாய் சமையல் செய்து ஸ்டேட்டஸ் போடுவது என்று புதுமணத் தம்பதியரைப் போன்று கொண்டாடிக் கொண்டிருந்தோம். ஆனால், நாள்கள் செல்லச் செல்ல ஒருவித சலிப்பும் எரிச்சலுணர்வும் குடிகொள்ளத் தொடங்கிவிட்டன. பல்வேறு உடல்நல மற்றும் உளவியல் சிக்கல்களும் ஏற்பட்டுள்ளன.

பாலியல் மருத்துவர் கார்த்திக் குணசேகரன்
பாலியல் மருத்துவர் கார்த்திக் குணசேகரன்

தம்பதியரின் தாம்பத்ய வாழ்க்கையிலும் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. ஒருபுறம் திட்டமிடப்படாத கர்ப்பங்கள் அதிகரித்திருக்கின்றன. மற்றொரு புறம் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபாடு குறைய ஆரம்பித்திருக்கிறது. லாக்டௌன் நாள்களில் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபாடின்மை ஏற்பட்டால் அதிலிருந்து மீள்வதற்கான வழிகளைப் பரிந்துரைக்கிறார் பாலியல் மருத்துவர் கார்த்திக் குணசேகரன்.

லாக்டௌனின் ஆரம்ப நாள்களில் தாம்பத்ய வாழ்க்கையும் இனிமையாக இருந்திருக்கும். தற்போது அதில் தொய்வு ஏற்படக் காரணம் என்ன?

couple
couple

நாம் ஓர் இனிப்பை விரும்பிச் சாப்பிடுகிறோம் என்றால் அதை தினமும் சாப்பிட்டுக்கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் சலிப்புத்தட்ட ஆரம்பித்துவிடும். அதைப்போன்றதுதான் வாழ்க்கையும். தனித்தனியாக அவர்களுக்கென்ற உலகில் இயங்கிக் கொண்டிருந்தவர்கள், திடீரென்று ஒரே இடத்திலேயே தொடர்ந்து இருக்க நேரும்போது சலிப்பு ஏற்படும். வழக்கமாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தவர்கள், தற்போது இரண்டு, மூன்று மணி நேரம் தொடர்ந்து பேசுவதுபோல் நிலைமை ஏற்பட்டால், ஒரு கட்டத்தில் வாக்குவாதத்தில் போய் முடியும். அதனால்தான் லாக்டௌன் நாள்களில் குடும்ப வன்முறை அதிகரித்து வருகிறது.

தாம்பத்யமும் இதேபோன்றுதான். வாரத்துக்கு இரண்டு, மூன்று நாள்கள் என்றால் அது சுவாரஸ்யத்தை அதிகரிக்கும். தற்போது இணையர் எப்போதும் கூடவே இருப்பதால் அதில் ஈடுபாடு குறையவே செய்யும். இதை மிகவும் இயல்பான விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

பணிச்சூழலால் ஏற்பட்டுள்ள அழுத்தம், நிச்சயமற்ற தன்மை போன்றவையும் தாம்பத்யத்தை பாதிக்குமா?

கணவன், மனைவி இருவரில் யாருக்கு என்ன பிடிக்கிறது என்பதைக் கண்டறிந்து தாம்பத்யத்தில் ஈடுபடுவது மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
பாலியர் மருத்துவர் கார்த்திக் குணசேகரன்

இது லாக்டௌனுக்கு முன்பாகவே இருக்கும் பிரச்னைதான். வேலைப்பளு, வேலையால் ஏற்படும் அழுத்தம் போன்ற காரணங்களால் பலர் தாம்பத்யத்தில் ஈடுபாடு காட்டமாட்டார்கள். அதே நிலைதான் தற்போது வேறு வகையாக ஏற்பட்டிருக்கிறது. ஆனால், ஒப்பிட்டுப் பார்க்கும்போது முந்தைய காலத்தைவிட தாம்பத்யத்தில் ஈடுபாடு காட்டுவோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. கர்ப்பம் தரிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் அதனால்தான். வாழ்க்கையில் அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவது சகஜமே. பிரச்னைகளைப் புரிந்துகொண்டு அவற்றுக்கான தீர்வுகளை நோக்கிச் சென்றுவிட வேண்டும். தாம்பத்யத்துக்கும் இது பொருந்தும்.

``லாக்டௌன் தளர்வின் பாசிட்டிவ் நெகட்டிவ் பக்கங்கள்!" - விளக்கும் வைராலஜிஸ்ட் #ExpertOpinion

24 மணி நேரமும் கணவன், மனைவி ஒரே இடத்திலிருப்பது தாம்பத்ய ஆர்வத்தைக் குறைக்குமா?

couple
couple

வீட்டில் கணவன், மனைவி எப்போதும் ஒன்றாகவே இருப்பது சலிப்பை ஏற்படுத்தவே செய்யும். இதுபோன்ற நேரங்களில் தனிநபர் சுதந்திரத்துக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். மற்றவர் சுதந்திரத்தில் தலையிடும்போதுதான் சலிப்பும் எரிச்சலும் ஏற்படும். பகல் நேரங்களில் கணவன் மனைவி இருவரும் தனித்தனியே தங்களுக்குப் பிடித்தமான காரியங்களில் ஈடுபடலாம். இருவரும் வீட்டிலிருந்தே வேலை செய்பவர்கள் என்றால் தனித்தனி அறைகளில் இருந்து வேலை பார்க்கலாம்.

தாம்பத்யத்துக்கான சூழலை எப்படி மேம்படுத்துவது?

Bedroom atmosphere
Bedroom atmosphere

இருவரும் வேலைக்குச் செல்லும் நாள்களில் தாம்பத்யத்தில் பரிட்சார்த்த முயற்சிகளில் ஈடுபடுவதற்கெல்லாம் நேரம் கிடைத்திருக்காது. லாக்டௌன் நாள்களில் இதற்கான நேரமும் வாய்ப்புகளும் அதிகமிருக்கும். கேண்டில் லைட் டின்னர், பிடித்த இசை, நடனம், பிடித்த உடைகளை அணிவது, படுக்கையறையை சற்று அழகுபடுத்துவது என தம்பதியருக்குப் பிடித்தமான ரொமான்டிக் விஷயங்களில் ஈடுபடலாம். உறவின்போது புதிய நிலைகளை (Positions) முயன்று பார்க்கலாம்.

வீட்டில்தானே இருக்கிறோம் என்று சிலர் சுயசுத்தத்தில் ஈடுபாடு காட்டமாட்டார்கள். இதுவும் தாம்பத்ய ஆர்வத்தைக் குறைக்குமா?

Makeup
Makeup

வீட்டில் இருக்கும்போது எப்போதுமே மேக்அப்புடன் இருப்பதும் அழகாக ஆடை உடுத்திக்கொள்வதும் சாத்தியமில்லைதான். ஆனால், சுத்தமாக இருக்க வேண்டும் என்பது இணையின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பாக இருக்கும். அதனால் வீட்டிலிருக்கிறோம் என்பதற்காக குளிக்காமல் இருப்பது, ஒரே உடையை பல நாள்கள் அணிவது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும். எப்போதும் குளித்து சுத்தமாக இருப்பது தாம்பத்யத்துக்கும் அவசியம்.

லாக்டௌன் நாள்களில் சந்தோஷமான தாம்பத்யத்துக்கு உதவும் ஆலோசனைகள் என்னென்ன?

Happy sexual life
Happy sexual life
லாக்டௌன்: நினைப்பதும் Vs நடப்பதும் #MyVikatan

சில நேரங்களில் திட்டமிட்டு ஈடுபடும் தாம்பத்யம் மகிழ்ச்சியைக் கொடுக்கும். சில நேரங்களில் இயற்கையான தூண்டல் ஏற்பட்டு ஈடுபடும் தாம்பத்யம் பிடிக்கும். யார் யாருக்கு என்ன பிடிக்கிறது என்பதைக் கண்டறிவதற்கு இந்த நாள்களில் அதிகநேரம் கிடைக்கும். கணவன், மனைவி இருவரில் யாருக்கு என்ன பிடிக்கிறது என்பதைக் கண்டறிந்து தாம்பத்யத்தில் ஈடுபடுவது மகிழ்ச்சியை அதிகரிக்கும். சுய இன்பம், அடல்ட்ஸ் ஒன்லி படங்கள் பார்ப்பது, வீட்டுக்குள்ளேயே புதிய இடங்களில் தாம்பத்யத்தில் ஈடுபடுவது போன்றவையும் இதற்கு உதவும்.

லாக்டௌன் நாள்களில் சுயஇன்பம் தாம்பத்ய ஆர்வத்தைக் குறைக்குமா?

couple
couple

முறையான உடலுறவு மூலமாக மட்டும்தான் செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில்லை. பொதுவாகவே 70 முதல் 80 சதவிகிதப் பெண்கள் தாம்பத்யத்தின்போது உச்சநிலையை அடைவதில்லை. புதிய வகையில் தாம்பத்யதில் ஈடுபட விரும்புவோர் கணவன், மனைவி இருவரும் இணைந்து சுயஇன்பத்திலும் ஈடுபடுவது தவறில்லை. இருவருக்கும் அதில் உடன்பாடு இருக்கும் பட்சத்தில் இதெல்லாம் ஓகேதான். கணவன், மனைவி இருவருக்கும் சந்தோஷம் கிடைக்கிறதென்றால் இதில் தவறு கிடையாது.

அடுத்த கட்டுரைக்கு