Published:Updated:

கொரோனா வீட்டுக்குள் வருவதைத் தடுக்க... நீங்கள் செய்ய வேண்டியவை!

தனி அறை முதல் கைக்குட்டைவரை... கொரோனாவுக்கு எதிராக வீட்டுக்குள் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கொரோனா வைரஸ்

கொரோனா நோய்த் தொற்று அதிகரித்துக்கொண்டே வருகின்றது. மக்கள் மத்தியில் இந்த நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாததால்தான் நோய்த் தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

மக்கள் கொரோனாவிடமிருந்து தங்கள் குடும்பத்தைத் தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தக் கட்டுரையில் நாம் விரிவாகப் பார்க்கலாம்.

2
கொரோனா வைரஸ் தற்காப்பு

வீட்டில் பெரியவர்களின் உடல்நலனில் கூடுதல் கவனம் கொள்ள வேண்டும்.

தரவுகளின்படி பார்க்கையில் கொரோனா நோய்க்குப் பலியானவர்களில் 80%-க்கும் மேலானோர் வயதில் மூத்தவர்கள் என்பது தெரிகிறது. எனவே குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களின் உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியம். அவர்களின் உடல் நிலையைத் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

3
கொரோனா வைரஸ் தற்காப்பு

வசிக்கும் வீட்டின் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும்

கொரோனா எதிரொலி - திருப்பதியில் முன்பதிவு செய்யப்பட்ட ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் ரத்து! #Tirupati

கொரோனா நோய்க்கிருமி, வீட்டில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். எனவே வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் மிக அவசியம். இந்த நோய்க்கிருமி கதவுப் பிடிகள் மற்றும் வீட்டில் அடிக்கடி நாம் பயன்படுத்தும் பொருள்களிலிருந்து மற்றவருக்குப் பரவும். எனவே, அவற்றை கிருமி நாசினிகள் பயன்படுத்தி அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

4
ஹேண்ட் சானிடைசர்

கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

வெளியிலிருந்து வீட்டிற்குள் வரும்போது நிச்சயமாகக் கைகால்களை நன்றாக சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். இதன் மூலம் வெளியில் இருந்து வீட்டிற்கு வரும் நோய்த்தொற்றைத் தடுக்கலாம். மேலும் குறைந்தபட்சம் 20 நொடிகள் கைகளை நன்கு கழுவ வேண்டும். முக்கியமாக விரல் இடுக்குகளைச் சுத்தம் செய்தல் அவசியம். சோப்பு போடுவதும் நல்லதுதான். ஆனால், அதைவிட ஆல்கஹால் கொண்டு தயாரிக்கப்படும் கிருமி நாசினிகளைப் பயன்படுத்துவது இன்னும் நல்லது.

5
கொரோனா ( pixabay )

நோய்வாய்ப்பட்டவரை வீட்டில் தனி அறை கொடுத்து தனிமைப்படுத்த வேண்டும்.

குடும்பத்தில் நெருங்கிய உறவினருக்குத் நோய்த்தொற்று இருப்பது தெரிந்தால் அவரிடமிருந்து விலகி நிற்பது நல்லது. நோய் பாதிப்பு உடைய நபரை நன்கு சுத்தம் செய்யப்பட்ட சுகாதாரமான தனி அறையில் தங்கவைப்பது நல்லது. முதலில் அவரை தனிமைப்படுத்திவிட்டு பின் அடுத்த கட்ட மருத்துவ உதவிகளை நாடலாம். அந்த அறையில் அவருக்கென தனி கழிவறை இருப்பது சிறப்பு.

6
கொரோனா வைரஸ் தற்காப்பு

வேலைக்குச் செல்பவர்கள் வீட்டில் இருந்தே வேலைபார்க்க முயலவும்.

பெரும்பாலும் நிறுவனங்களில் பணிபுரிவோர் பல பகுதிகளில் இருந்து வந்தவர்களாக இருப்பார்கள். எனவே, அங்கு அவர்களோடு இணைந்து பணியாற்றும்போது ஒருவேளை அவர்களுக்கு நோய்த் தொற்று இருந்தால் அது மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எனவே, வேலைக்குச் செல்வோர் முடிந்தவரை வீட்டில் இருந்தே தங்கள் அலுவலகப் பணிகளை மேற்கொள்ள முயலவும்

7
கைக்குட்டை

வீட்டிற்குள் இருக்கும்போதும் கைக்குட்டை அவசியம்.

`தும்மல் கொரோனாவின் அறிகுறியா?!' - சாதாரண சளிக் காய்ச்சலுக்கும் கொரோனாவுக்கும் உள்ள வேறுபாடுகள்

வீட்டிற்குள் இருந்தாலுமேகூட ஒருவர் இருமும்போது கைக்குட்டை கொண்டுதான் இரும வேண்டும். ஏனென்றால் இருமலின்போது நீர்த்துளிகள் மூலம் பரவும் கிருமி அருகில் உள்ள பொருள்களில் படிந்து மற்றவர்களுக்குப் பாதிப்பை உண்டாக்குகிறது. எனவே வீட்டிற்குள் இருமும்போதும் தும்மும் போதும் கண்டிப்பாக கைகுட்டைகள் பயன்படுத்த வேண்டும்.

8
தூய்மை

வீட்டின் உட்புறத் தூய்மையை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

வீட்டின் உட்புறத்தை அடிக்கடி தரை சுத்தம் செய்யும் மருந்துகள் கொண்டு சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும். வீட்டின் உட்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வதன் மூலம் நோய்க் கிருமிகளை எளிதில் அழித்து பரவலைத் தடுக்கலாம்.

9
கொரோனா

கொரோனா நோயின் தாக்கமும் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், இப்போதே மக்கள் பலரும் கொரோனாவுக்குப் பயந்து வீட்டுக்குள் முடங்கி இருக்கின்றனர். வெளியில் சென்றால் கொரோனா நோய் தாக்கிவிடும் என்று பயம்கொள்ளும் அவர்களுக்கு, வீட்டுக்குள் இருந்தாலும் கொரோனா தேடி வந்து தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பது தெரிவதில்லை.

'வீட்டை சுத்தமாக வைத்துக்கொண்டு முகக் கவசங்கள் அணிந்துகொண்டு இருக்கும்போது எப்படி தாக்கும்?' என்ற கேள்வி உங்கள் மனதில் எழும். நம்மை வீடுதேடி வருபவர்கள் வாயிலாக இந்த நோய் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

அடுத்ததாக, வீட்டுக்குள் தனிமைப்படுத்திக்கொள்வதன் முக்கிய நடவடிக்கை, உணவுப் பொருள்கள் இருப்பை உறுதிசெய்து கொள்வது. ஆனால் இந்த நேரத்தில் சமையல் பொருள்கள் வாங்கக்கூட வெளியில் செல்லாமல் மக்கள் இணையதளங்களின் வாயிலாக உணவுப் பொருள்களை ஆர்டர் செய்து பெற்று சாப்பிட்டு வருகின்றனர். உணவு வெளியில் இருந்து வருவதால், அது சுகாதாரமான முறையில் சமைக்கப்பட்டதா என்பது நமக்குத் தெரிய வாய்ப்பில்லை.

கொரோனா தடுப்பு

மேலும் அதை டெலிவரி செய்யும் நபரால் கூட நமக்கு நோய்த்தொற்றிக்கொள்ள வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. அதனால் முடிந்தவரை குடும்பத்தின் உடல் நலம் கருதி வெளியில் இருந்து உணவு வாங்கி உண்ணுவதை அவசியம் தவிர்க்க வேண்டும். வீட்டிலேயே சுத்தமான, சுகாதாரமான முறையில் சமைத்து உண்பதற்கு முயல வேண்டும்.

பரவல் மிதமாக இருக்கும் இந்தச் சூழலிலேயே தேவைப்படும் பொருள்கள் அனைத்தையும் ஸ்டாக் செய்துகொள்ளவும்.
அடுத்த கட்டுரைக்கு