Published:Updated:

வீடே மருத்துவமனை... உணவே மருந்து... கொரோனாவுடன் வாழ்வதற்கு தயாராகுங்கள்!

Corona (Representational Image)
Corona (Representational Image)

இனி ஒவ்வொருவரின் வீடும் ஒரு குட்டி மருத்துவமனையாக வேண்டும். நாம் எடுத்துக்கொள்ளும் உணவே நமக்கு ஏற்படும் நோய்களைத் தடுக்கவல்ல மருந்தாக இருக்க வேண்டும்.

ஒற்றை இலக்கங்களில் கொரோனா தொற்று பரவிக்கொண்டிருந்த காலத்தில் எல்லாம் முழு ஊரடங்கில் இருந்தோம். ஆனால், தினம்தினம் நூற்றுக்கணக்கான பேருக்குத் தொற்று ஏற்பட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் லாக்டௌன் தளர்த்தப்பட்டு வருகிறது! காரணம் வேறொன்றுமில்லை.

corona
corona

கொரோனாவிலிருந்து தப்பிக்க `கொரோனாவுடனேயே வாழப் பழகுவோம்' என்ற கான்செப்ட்தான்! ஏற்கெனவே பல வைரஸ், பாக்டீரியா போன்ற நோய்க்கிருமிகளின் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கும் நமக்கு கொரோனா பத்தோடு பதினொன்றுதான். இருந்தாலும் கோவிட்-19 சற்று வீரியம் மிகுந்தது. இன்னும் இதற்குத் தடுப்பு மருந்து உருவாக்கப்படவில்லை என்பதும் முக்கியமான விஷயம்.

காற்றில் பரவியிருக்கும் வைரஸ் கண்களைத் தாக்கலாம்! - கண் மருத்துவர் கூறும் தீர்வு

`கொரோனாவுடனேயே வாழப் பழகுவோம்' என்ற டாஸ்க் நமக்கு ஈஸியாக `வீடே மருத்துவமனை... உணவே மருந்து' என்ற மற்றொரு டாஸ்க்கையும் கையிலெடுக்க வேண்டும். ஆம்! இனி ஒவ்வொருவரின் வீடும் ஒரு குட்டி மருத்துவமனையாக வேண்டும். நாம் எடுத்துக்கொள்ளும் உணவே நமக்கு ஏற்படும் நோய்களைத் தடுக்கவல்ல மருந்தாக இருக்க வேண்டும்.

ஒவ்வொருவரின் வீடும் மருத்துவமனையாக ஆலோசனைகள் தருகிறார், பொது மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

* ``கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் பொதுவாக வயதானவர்களுக்கும், நீரிழிவுநோய், இதயக் கோளாறு, சிறுநீரக பாதிப்பு, சுவாசப் பிரச்னைகள் போன்ற மற்ற உடல்நலக் கோளாறுகள் இருப்பவர்களுக்குமே அதிகம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே, இதுபோன்ற உடல்நலப் பிரச்னைகள் உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் இருக்கும் வீடுகள் ஒரு மருத்துவமனையைப்போல் மாற வேண்டியது அவசியம்.

பொது மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
பொது மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

* மருத்துவமனைகளில் கடைப்பிடிப்பதுபோல் வீட்டுக்கு உள்ளேயும் மாஸ்க் அணிவது, ஒருவர் மற்றொருவரிடமிருந்து 6 அடிகளாவது விலகி இருப்பதுபோன்ற பாதுகாப்பு முறைகளைச் சிறிது காலத்துக்குப் பின்பற்றலாம். கழிவறையைச் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம்.

"கொரோனா அச்சம்; மருத்துவர்களின் ஆன்லைன் பரிந்துரைகள்!"- டெலிமெடிசின் சாதகமும் பாதகமும் #FightCovid19

* சாதாரண காய்ச்சல், தலைவலி, சளி போன்ற சிறிய உடல்நலக் குறைபாடுகளுக்கும் மருத்துவமனை செல்லாமல், போனில் வீடியோ அல்லது ஆடியோவில் பேசி மருத்துவ ஆலோசனைகள் பெறும் `டெலிமெடிசின்' முறையைப் பின்பற்றலாம். இப்போது எல்லா மருத்துவர்களும் டெலிமெடிசினில் ஆலோசனை கூறத் தொடங்கிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கோவிட்-19 தொற்று அறிகுறிகளையும் மனதில்வைத்து, தேவைப்பட்டால் மருத்துவ ஆலோசனைக்குச் செல்ல வேண்டியது குறிப்பிடத்தக்கது.

டெலிமெடிசின்
டெலிமெடிசின்

* சர்க்கரை நோயாளர்கள் வீட்டிலேயே குளுக்கோமீட்டர் (Glucometer) கருவிகொண்டு, வாரத்துக்கு இருமுறை டெஸ்ட் செய்துகொள்ளலாம். ரிசல்ட்டை போனில் மருத்துவரிடம் சொல்லி ஆலோசனை பெறலாம். ரத்த அழுத்தத்தை வீட்டிலேயே பரிசோதிக்கவும் கருவி இருக்கிறது. ரத்த அழுத்தம் எல்லா நேரத்திலும் அதிகரிக்காது. அப்படி அதிகரித்தால் மயக்கம், தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். அப்போது மருத்துவரிடம் செல்லலாம்.

* அடிக்கடி மெடிக்கல் ஷாப் செல்லாமல், மாத்திரைகளை ஒன்றிரண்டு மாதங்களுக்கு வாங்கிக்கொள்ளவும். வீட்டில் ஒரு மருத்துவ முதலுதவிப் பெட்டி அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

Tablets
Tablets

வீட்டிலேயே செய்துகொள்ளக்கூடிய கைவைத்தியங்கள் பற்றிச் சொல்கிறார், சித்த மருத்துவர் விக்ரம் குமார்.

``காய்ச்சல், தலைவலி போன்ற கொரோனாவுக்கான அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனையும், அதற்கு முன்னரே தனிமைப்படுத்திக்கொள்வதும் அவசியம். மருத்துவர்களின் பரிந்துரையின் பெயரில் கபசுரக் குடிநீர், நிலவேம்புக் கஷாயம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

* சாதாரண சளி, காய்ச்சலுக்கு வீட்டிலேயே ஆவிபிடித்தல், வெந்நீர் ஒத்தடம் எனச் செய்துகொள்ளலாம். ஒருவேளை உங்களுக்கு ஏற்பட்டது சாதாரண சளி, காய்ச்சலாக இருந்தால் இவற்றிலேயே குணமாகிவிடும். வாரம் இருமுறை 15 நிமிடங்கள் வெந்நீரில் ஆவிபிடிக்கலாம்.

சித்த மருத்துவர் விக்ரம் குமார்
சித்த மருத்துவர் விக்ரம் குமார்

வாய்ப்பிருப்பவர்கள் திருநீற்றுப் பச்சிலை, நொச்சி போன்றவற்றை அதில் சேர்த்துக்கொள்ளலாம். மஞ்சள், வேப்பிலை, மாவிலை கலந்த தண்ணீரைப் பயன்படுத்தி வீட்டைச் சுத்தம் செய்யலாம். இது சிறந்த கிருமிநாசினி. நோய்க்கிருமித் தொற்று ஏற்படுவதை ஓரளவு கட்டுப்படுத்த உதவும்.

சிறியவர்கள் முதல் நீரிழிவு நோயாளிகள் வரை... நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக் கொள்வது எப்படி?

* நோய்களை எதிர்த்துப் போராடுவதில் நம் உணவு முறைக்கு முக்கியப் பங்குண்டு. தினமும் பாலில் மஞ்சள்தூள் கலந்து குடிப்பது உடலில் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கச் செய்யும். மழைக்காலத் தொடக்கத்தில் மிளகுக் கஷாயம், தூதுவளை சட்னி போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

Food
Food
Pixabay

* சீரகம், ஓமம் செரிமானக் கோளாறுகளை நீக்கும். வெந்தயம் வயிற்றுவலிக்குச் சிறந்த மருந்து. உடலில் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்க கீரைகள், காய்கறி, பழங்களை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. இந்தத் தடுப்பு மருந்துகள், மருத்துவமனை செல்லும் சூழலிலிருந்து நம்மைத் தற்காக்கும்.''

அடுத்த கட்டுரைக்கு