Published:Updated:

`பள்ளிகளில் கட்டாய தடுப்பூசி கூடாது!' - தமிழக அரசின் செயலை விமர்சிக்கும் செயற்பாட்டாளர்கள்

Covid Vaccination
News
Covid Vaccination ( AP Photo/Altaf Qadri )

``தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பம் தெரிவிக்கும் மாணவர்களின் மருத்துவ வரலாறும் முழுமையாகத் தெரிந்துகொண்ட பிறகே தடுப்பூசி செலுத்த வேண்டும்."

15-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதனையடுத்து பள்ளி மாணவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கிவைத்தார். சுமார் 33.20 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடத் திட்டமிடப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்நிலையில், `பள்ளிக்கூடங்கள் தடுப்பூசி பரிசோதனைக்கூடமாக மாறவேண்டாம்!' என்று தமிழக சுகாதாரத்துறைக்கு மனு அனுப்பி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதாக ஆயுஷ் மருத்துவர் நலச்சங்கம், புதிய தலைமுறை மக்கள் கட்சி, அகில இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி மற்றும் மாணவர் மற்றும் பொதுமக்களின் உரிமைகள், சுகாதார பாதுகாப்பு சங்கம் அறிவித்தது.

இது தொடர்பாக மாணவர் மற்றும் பொதுமக்களின் உரிமைகள், சுகாதார பாதுகாப்பு சங்கத்தின் உறுப்பினர் தங்கராஜிடம் பேசினோம். ``ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டும் , பெற்றோரின் பூரண ஒப்புதல் பெற்ற பின்னருமே , தன்னார்வலர்களின் அடிப்படையில் மாணவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த வேண்டும். மேலும் , தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பம் தெரிவிக்கும் மாணவர்களின் மருத்துவ வரலாற்றையும் முழுமையாகத் தெரிந்துகொண்ட பிறகே தடுப்பூசி செலுத்த வேண்டும்.

தங்கராஜ்
தங்கராஜ்

இவை தவிர, தடுப்பூசி செலுத்திக்கொண்ட அரை மணி நேரத்திற்கு மாணவர்களை தடுப்பூசி முகாமில் கண்காணிப்பில் வைத்திருத்தல் அவசியம். இது 15-18 வயதுக்குட்பட்ட மாணவர்களின் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், அதீத கவனத்துடன் இருத்தல் அவசியம். இதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்த எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை" என்று தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொதுமக்களுக்கும் கட்டாயமாக்கக்கூடாது!

கோவிட்-19 தடுப்பூசியை பொதுமக்களுக்கு கட்டாயமாக்கக் கூடாது என்று பலர் வலியுறுத்தி வருகின்றனர். பொது இடங்களில் புழங்குவதற்கும், ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்குவதற்கும், நூறு நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்வதற்கும் கட்டாயமாக கோவிட் தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும் என்று சில மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் இது மனித உரிமைகளுக்கு எதிரான செயல் என்றும் இயற்கை வழி வாழ்வியலாளர்கள் மற்றும் மக்கள் அறிவியல் மையம் ஆகிய அமைப்புகளின் சார்பில் சீர்காழியில் அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டது.

A health worker administers the vaccine
A health worker administers the vaccine
AP Photo/Mahesh Kumar A

அதற்கு காவல்துறையினர் அனுமதியளிக்காததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலமாகச் சென்று, ஆர்ப்பாட்ட தலைப்பைப் பேசினார்கள். அப்போது, ``அரசியல் சாசனத்துக்கு விரோதமாக, கட்டாயமாக தடுப்பூசி போடவேண்டும் என்ற மத்திய மாநில அரசுகள் தங்களின் முயற்சிகளை ஒருவார காலத்துக்குள் கைவிட வேண்டும். இல்லையென்றால் ஜனவரி மாதத்தில் சென்னையில் பெரிய அளவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்” என்று அறிவித்துவிட்டு கலைந்து சென்றனர்.