Published:Updated:

`உங்க டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்கோ இல்லையோ, நஞ்சு இருக்கு!'- அதிரவைத்த சித்த மருத்துவர்

டூத் பேஸ்ட்
டூத் பேஸ்ட் ( Pixabay )

அன்றாடக் குளியலுக்கு நாம் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பூ ஆகியவை சருமத்தின் வழியாக நம் உடலுக்குள் சென்று பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.

டூத் பேஸ்ட், சோப்பு, ஷாம்பூ போன்றவற்றை நாள்தோறும் பயன்படுத்திவருகிறோம். அப்படி அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் பாதுகாப்பானவையா என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறோமா..?

குடிநீரிலும் காற்றிலும்கூட நச்சுகள் கலந்துவிட்ட இந்தக் காலத்தில், ரசாயனங்களால் தயாரிக்கப்படும் அவற்றில் மட்டும் நச்சுகள் இல்லாமல் இருக்குமா? நாம் அன்றாடம் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டில் பல வகையான நச்சுப்பொருள்கள் இருக்கின்றன என்கிறார், சித்த மருத்துவர் செல்வ சண்முகம்.

Tooth
Tooth
Freepik
Vikatan

சென்னையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த சித்த நவீன மருத்துவ விழிப்புணர்வுக் கருத்தரங்கத்தில் பேசிய மருத்துவர் செல்வ சண்முகம், "நாம் உபயோகிக்கும் டூத் பேஸ்ட்டுகளில் 16 வகையான நச்சுப்பொருள்கள் உள்ளன. பேஸ்ட்டால் பல்லைத் தேய்த்துவிட்டு நுரையைத் துப்பிவிடுவதால், எந்தப் பாதிப்பும் இல்லை என்று நினைக்கக்கூடாது. நாக்கின் கீழிருக்கும் ரத்தக்குழாய்கள், பேஸ்ட்டில் உள்ள நச்சுக்களை உடனே கிரகிக்கும் திறன் கொண்டவை. அந்த நச்சுகள் உடலில் ஆங்காங்கே படிந்து, நாள்பட்ட நோய்களை ஏற்படுத்தக்கூடும். நம் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியையும் ஹார்மோன் உற்பத்தியையும்கூட அவை பாதிக்கும்.

அதேபோல், அன்றாடக் குளியலுக்கு நாம் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பூ ஆகியவை சருமத்தின் வழியாக நம் உடலுக்குள் சென்று பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். அதனால் பல் துலக்கவும் குளிக்கவும் மூலிகைப் பொருள்களையே உபயோகிக்க வேண்டும்.

மருத்துவர் செல்வ சண்முகம்
மருத்துவர் செல்வ சண்முகம்

டூத் பேஸ்ட்டுக்குப் பதிலாக கிராம்புத்தூள் 5 கிராம், கல் உப்புத்தூள் அல்லது படிகாரம் 5 கிராம் ஆகியவற்றை 100 கிராம் திரிபலா சூரணத்துடன் சேர்த்து, காலை மாலை இரு வேளையும் பல் துலக்கலாம். இந்தப் பொடியை நாள்தோறும் உபயோகித்து வர, பற்களின் நலன் பாதுகாக்கப்படும். சீயக்காய், காய்ந்த நெல்லிக்காய், வெந்தயம், பாசிப்பயறு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்த பொடியை ஷாம்புக்கு பதில் வாரம் இருமுறை தலைக்குத் தேய்த்து குளிக்கலாம்.

பல ரசாயனக் கலவையுடன் தயாரிக்கப்படும் சோப்புக்குப் பதிலாக, நலங்கு மாவைப் பயன்படுத்தலாம். பாசிப்பயறு, வெட்டிவேர், கார்போக அரிசி, சந்தனத்தூள், பூலாங்கிழங்கு, விலாமிச்சை வேர் ஆகியவற்றை சேர்த்துப் பொடியாக்கி, தினமும் குளியல்பொடியாகப் பயன்படுத்தலாம்.

Soap
Soap
Freepik

இந்தக் கலவையில், பிற பொருள்களைவிட பாசிப்பயறு அதிக அளவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இந்தப் பொருள்கள் அனைத்தும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கின்றன. இந்தப் பொடியைத் தயாரிக்க இயலாதவர்கள், 100 கிராம் பாசிப்பயறு, காய்ந்த எலுமிச்சம்பழத் தோலில் எடுக்கப்பட்ட பொடி 10 கிராம் சேர்த்து, சோப்புக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு