Published:Updated:

`பேசுவதில் சிரமமா... கொரோனாவாக இருக்கலாம்!’ - எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

பேசுவதில் சிரமம் ஏற்படுவதைத் தொடர்ந்து சில நேரங்களில் அதனுடன் பேச்சை இழப்பது அல்லது உடலின் இயக்கம் பாதிக்கப்படுவது போன்ற நிலையும் ஏற்படலாம்.

கொரோனா வைரஸ் நோயின் பிரதான அறிகுறிகளாகத் தொடர் இருமல் மற்றும் காய்ச்சல் உள்ளிட்டவை வரையறுக்கப் பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கு பேசுவதில் சிரமம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளதால், தற்போது அதையும் அந்நோயின் அகுறியாக அறிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.

அறிகுறி
அறிகுறி

இது தொடர்பாகத் தகவல் வெளியிட்டுள்ள உலக சுகாதார நிறுவனம்,``கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களுக்கு மிதமானது முதல் தீவிரமான சுவாசப் பிரச்னைகள்வரை ஏற்படுகின்றன. எந்த மருத்துவமும் இல்லாமல் அவை குணமாகின்றன. ஆனால், தீவிரமான அறிகுறிகளாக மூச்சுத்திணறல், நெஞ்சில் வலி அல்லது அழுத்தம், பேச்சு இழப்பு அல்லது இயங்க முடியாமல் போவது ஆகியவையும் ஏற்படுகின்றன.

‘கொரோனா வைரஸை அழிக்க வீதிகளில் கிருமிநாசினிகளைத் தெளிப்பதால் பயனில்லை!’ - உலக சுகாதார நிறுவனம்

பேசுவதில் சிரமம் ஏற்படுவதைத் தொடர்ந்து சில நேரங்களில் அதனுடன் பேச்சை இழப்பது அல்லது உடலின் இயக்கம் பாதிக்கப்படுவது போன்ற நிலையும் ஏற்படலாம். எனவே, மேல் குறிப்பிட்டுள்ள தீவிர அறிகுறிகள் இருக்கும்பட்சத்தில் அவற்றை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவ உதவியைப் பெற வேண்டும்.

உலக சுகாதார அமைப்பு - WHO
உலக சுகாதார அமைப்பு - WHO

பேச்சு இழப்பு ஏற்படுவது எப்போதும் கொரோனா வைரஸ் நோய்க்கான அறிகுறியாக இருக்காது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். சில உளவியல் பிரச்னைகள், செவித்திறன் இழப்பு மற்றும் பிரச்னை, சில நச்சுகள் உடலில் செல்வது ஆகியவற்றாலும் பேச்சு இழப்பு ஏற்படலாம்" என்று தெரிவித்துள்ளது.

`கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்... பிரதமர் மோடியின் செல்வாக்கு உயர்வு!’- அமெரிக்க ஊடகம் புகழாரம்

இந்நிலையில், கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் சிலருக்கு மனநலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் மெல்பர்ன் நகரில் உள்ள ஆரிஜென் அண்ட் லா ட்ரோப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இது கண்டறியப்பட்டது.

Representational Image
Representational Image

இது தொடர்பாகப் பேசியுள்ள ஆராய்ச்சியாளர் டாக்டர் எல்லி ப்ரௌன், ``கோவிட்-19 நோய் அனைவருக்கும் மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. ஏற்கெனவே மனநல உதவி தேவைப்படுவோரை இந்த நோய் அதிகம் பாதிக்கிறது. இதனால் சில கொரோனா நோயாளிகள் காதில் குரல் கேட்பது போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்துவார்கள். கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும்போது மனநலத்தையும் மேம்படுத்த மருத்துவர்கள் முயற்சியெடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு