Published:Updated:

மூச்சுக்காற்றில் கோவிட்-19 பரிசோதனை, 91.2% துல்லியமுள்ள கருவி.. முதன்முறையாக அமெரிக்காவில் அனுமதி!

கோவிட்-19

இந்தத் சோதனையின் முடிவுகள் மிகவும் துல்லியமானவை என்று கூறப்படுகிறது. 91.2% துல்லியத்துடன் தொற்றை கண்டறிய முடியும் என FDA தெரிவித்துள்ளது. இது மாதிரிகளைப் பரிசோதிப்பதற்கு 3 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது; ஒரு நாளைக்கு 160 மாதிரிகளைப் பரிசோதிக்க முடியும்.

மூச்சுக்காற்றில் கோவிட்-19 பரிசோதனை, 91.2% துல்லியமுள்ள கருவி.. முதன்முறையாக அமெரிக்காவில் அனுமதி!

இந்தத் சோதனையின் முடிவுகள் மிகவும் துல்லியமானவை என்று கூறப்படுகிறது. 91.2% துல்லியத்துடன் தொற்றை கண்டறிய முடியும் என FDA தெரிவித்துள்ளது. இது மாதிரிகளைப் பரிசோதிப்பதற்கு 3 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது; ஒரு நாளைக்கு 160 மாதிரிகளைப் பரிசோதிக்க முடியும்.

Published:Updated:
கோவிட்-19

ஒருவரின் மூச்சுக்காற்றை வைத்து அவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறியும் பரிசோதனை முறைக்கு அமெரிக்காவில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மூச்சுக்காற்றின் மாதிரிகளை வைத்து தொற்றை உறுதிசெய்யும் அந்தக் கருவிக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் (FDA) ஒப்புதல் வழங்கியுள்ளது. ஏற்கெனவே கோவிட் 19 தொற்றைக் கண்டறிய பல கருவிகள் இருந்தாலும் Covid-19 Breathalyzer எனும் இந்தக் கருவிக்கு தனிச்சிறப்பு உண்டு என்றே வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

 Covid
Covid
AP Photo / Channi Anand

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மூச்சுக்காற்றை வைத்து தொற்றைக் கண்டறியுமாறு உருவாக்கப்பட்ட முதல் கருவி இதுதான். மூச்சுக்காற்றில் உள்ள வாயுக்களின் அளவை வைத்து அதில் கொரோனா வைரஸ் உள்ளதா என்பதைக் கண்டறியும் வகையில் இந்தக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவிட் -19 தொற்று மட்டுமல்லாமல் மற்ற நோய்களுக்கும் இதுபோன்ற சோதனை கருவிகளை வடிவமைக்க இந்தக் கருவி முன்மாதிரியாக அமையும் என்ற கருத்தும் உள்ளது.

இந்தக் கருவி குறித்து கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் கிரிஸ்டினா டேவிஸ் கூறுகையில்,"இந்தத் தொழில்நுட்பம் மூச்சுக்காற்றை வைத்து நோய்களைக் கண்டறிவதற்கு உறுதுணையாக அமையும். இது நிச்சயமாக ஒரு மைல்கல்லாகும்" என்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தக் கருவி ஒரு பெரிய பெட்டி வடிவில் உள்ளது. இது மாதிரிகளைப் பரிசோதிப்பதற்கு 3 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது. இந்தக் கருவியின் மூலம் ஒரு நாளைக்கு 160 மாதிரிகளைப் பரிசோதிக்க முடியும். மக்களின் பொதுப் பயன்பாட்டுக்காக ஒரு வாரத்துக்கு 100 கருவிகள் என்ற அளவில் அதனைத் தயாரிக்கும் Inspect IR வேகமாக கருவிகளை உற்பத்தி செய்து வருகிறது.

covid 3-rd wave and children
covid 3-rd wave and children

இந்தத் சோதனையின் முடிவுகள் மிகவும் துல்லியமானவை என்று கூறப்படுகிறது. 91.2% துல்லியத்துடன் தொற்றைக் கண்டறிய முடியும் என FDA தெரிவித்துள்ளது. ஆனால் இதை உறுதிப்படுத்த இன்னும் கால அவகாசமும் கூடுதல் ஆய்வும் தேவை என்பது சில வல்லுநர்களின் கருத்து. இந்தப் பரிசோதனைக் கருவிக்கான விலையும் சரியாக நிர்ணயம் செய்யப்படவில்லை. எனவே இது மக்களின் பொதுப் பயன்பாட்டுக்கு வருவதற்கு சற்று கூடுதல் காலம் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism