Published:Updated:

வைரத்துக்கு இணையான வலிமை, எலும்புகளுக்கு புஷ்டி தரும் பிரண்டை!| மூலிகை ரகசியம் - 10

பிரண்டை

உங்களின் எலும்புகளுக்கு புஷ்டி கொடுக்கும் முக்கிய நண்பன் பிரண்டை. உருட் பிரண்டை, முப்பிரண்டை, ஓலைப் பிரண்டை, இனிப்புப் பிரண்டை, புளிப்புப் பிரண்டை என பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு பிரண்டையைப் பற்றியும் தெரிந்து கொள்ள, ஒருநாள் மூலிகை சுற்றுலா செல்வோமா!

வைரத்துக்கு இணையான வலிமை, எலும்புகளுக்கு புஷ்டி தரும் பிரண்டை!| மூலிகை ரகசியம் - 10

உங்களின் எலும்புகளுக்கு புஷ்டி கொடுக்கும் முக்கிய நண்பன் பிரண்டை. உருட் பிரண்டை, முப்பிரண்டை, ஓலைப் பிரண்டை, இனிப்புப் பிரண்டை, புளிப்புப் பிரண்டை என பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு பிரண்டையைப் பற்றியும் தெரிந்து கொள்ள, ஒருநாள் மூலிகை சுற்றுலா செல்வோமா!

Published:Updated:
பிரண்டை

பார்க்க ரயில் பெட்டிகளைப் போல தோற்றமுடைய ஒரு மூலிகையைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகளைத் தெரிந்துக் கொள்ளப் போகிறோம். சதைப்பற்றுடன் காணப்படும் மூலிகையான பிரண்டை, தன்னிடம் உள்ள பற்றுக்கம்பிகளின் உதவியுடன் கொடியாக மேலேறி பார்ப்பவர்களைப் பரவசமூட்டும்.

பிரண்டை!
பிரண்டை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரண்டையின் வகைகள்:

நான்கு கோணங்களை உடைய சதுர வடிவ பிரண்டையை பெரும்பாலும் எல்லா இடங்களிலும் பார்க்க முடியும். உருட் பிரண்டை, முப்பிரண்டை, ஓலைப் பிரண்டை, இனிப்புப் பிரண்டை, புளிப்புப் பிரண்டை என மேலும் பல வகைகள் உள்ளன.

ஒவ்வொரு பிரண்டையைப் பற்றியும் தெரிந்துக் கொள்வோம். உங்களின் எலும்புகளுக்கு புஷ்டி கொடுக்கும் முக்கிய நண்பன் பிரண்டை. மனுஷன் உடல் முழுவதும் கால்சியம் தான் வச்சிருக்காரு பாத்துகோங்க… அட நம்ம பிரண்டையை சொன்னேன் நண்பர்களே!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பசியை அதிகரிக்கும்:

`பசியே எடுக்க மாட்டேங்குது…' என அங்கலாய்க்கிறீர்களா! கவலையைத் தூக்கி எறியுங்கள். பிரண்டை இருக்குமபோது, பசி எடுப்பதை பற்றி எல்லாம் கவலைப்படத் தேவையில்லை.

பிரண்டைத் துவையல் எனும் அட்டகாசமான மருத்துவச் சமையல், உங்கள் தட்டில் அடிக்கடி இடம் பிடித்தால் இடையூறில்லா பசி உணர்வு சாத்தியம். நன்றாக ஓடி ஆடி விளையாடி முடித்த பிறகு, நல்லதொரு பசி உண்டாகும் இல்லையா, அதற்கு இணையான பசியை, பிரண்டைத் துவையல் நிச்சயம் வழங்கும்! அதற்காக ஓடி ஆடி ஆட்டம் போடுவதை நிறுத்திவிடாதீர்கள்! பிரண்டைத் துவையலின் தயாரிப்பு ரகசியத்தை அறிவோமா?

பிரண்டை
பிரண்டை

பசி உண்டாக்கும் பிரண்டைத் துவையல்:

பிரண்டைத் தண்டில் நிறைய நார் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். அந்த நாரினை நீக்கிவிட்டு, லேசாக நெய் விட்டு வதக்கி உப்பு, புளி சேர்த்து துவையல் போல செய்து கொள்ள வேண்டும். இந்த பிரண்டைத் துவையலை வாரம் ஒரு முறையாவது இட்லி அல்லது தோசைக்கு தொட்டு சாப்பிடுங்கள். பிரண்டைத் துவையலோடு கொஞ்சம் நல்லெண்ணெய் சேர்க்க மறக்காதீர்கள்! புதுமையான பிரண்டைத் துவையல், சுவையால் உங்களை கட்டிப்போடும்.

பிரண்டைத் துவையலை அவ்வப்போது சாப்பிட, செரிமானத் திறன் அதிகரித்து, நல்ல பசியுண்டாகும். மேலும் உங்கள் குடலில் நீண்ட நாள்களாக ஜாலியாக வாழ்ந்து கொண்டிருக்கும் பூச்சிகளையும் அழிக்கும் இந்த பிரண்டைத் துவையல்! இவ்வளவு பலன் நிறைந்த, தாராளமாக முளைத்துக் கிடக்கும் பிரண்டையை அதிகமாக யாரும் பயன்படுத்துவதில்லை என்பது வருத்தமான விஷயம். இந்த வருத்தமான வரலாற்றை நீங்கள் இனி மாற்றுவீர்கள் தானே!

பிரண்டை வடகம்:

எத்தனை பேர் வீட்டு மாடியிலோ, அல்லது வீட்டின் முற்றத்திலோ அரிசி வடகங்களை வெயிலில் உலரச் செய்வதைப் பார்த்திருக்கிறோம். அரிசி வடகம் போல, பிரண்டையிலும் வடகம் செய்யலாம் தெரியுமா?

பிரண்டைத் தண்டுகளை சிறிது சிறிதாக நறுக்கி, உப்பு சேர்த்த மோரில் போட்டு வெயிலில் காயவைத்து வடகமாகத் தயாரிக்கலாம். பிரண்டை வடகங்களை குளிர்காலத்தில் பயன்படுத்த சளி, இருமல் போன்ற கப நோய்கள் அவ்வளவு எளிதாக உங்களை அணுகாது. அதுமட்டுமல்லாமல் உங்கள் செரிமான மண்டலத்தையே ஒழுங்குப்படுத்தும் தன்மை பிரண்டை வடகத்திற்கு உண்டு.

எலும்பு
எலும்பு

எலும்புகளின் தோழன்:

’எலும்பு முறிவு மருத்துவம்’ என்பது நெடுங்காலமாக சித்த மருத்துவத்தில் பின்பற்றப்படும் பாரம்பர்ய முறை. நவீன மருத்துவ வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலேயே உடைந்திருக்கும் எலும்புகளை விரைவாக கூடச்செய்வதற்கும், மூட்டுகளில் இருந்து விலகிய எலும்புகளை சரியான இடங்களில் பொருத்துவதற்கும், சித்த மருத்துவத்தில் பல நுணுக்கங்கள் பின்பற்றப்பட்டிருக்கின்றன.

பிரண்டையை, எலும்பு முறிவு மருத்துவத்தில் உபயோகிப்பது சித்த மருத்துவ நுணுக்கங்களில் மிக முக்கியமானது. உடைந்திருக்கும் எலும்புகளை விரைவாக கூடச்செய்ய, பிரண்டையை சிறப்பு மருந்தாகப் பயன்படுத்துவார்கள் பாரம்பர்ய மருத்துவர்கள். சித்தர்கள் கண்டுபிடித்த அற்புதமான மருத்துவ டெக்னிக் இது.

பிரண்டையில் இருக்கும் சுண்ணச்சத்து, எலும்புகள் விரைவாக இணைவதற்கு வழிவகுக்கும் என்பதை நவீன ஆய்வுகள் இப்போது உறுதிப்படுத்துகின்றன. வைரத்தைப் போல எலும்புகளுக்கு வலிமை அளிப்பதால் பிரண்டைக்கு ’வஜ்ஜிரவல்லி’ என்றொரு பெயரும் உண்டு. ’வஜ்ஜிரம்’ என்றால் ’வைரம்’ எனும் சொற்பொருளை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

மருத்துவப் பெட்டியில் பிரண்டை:

முற்காலத்தில் எலும்பு முறிவுக்கு மருத்துவம் பார்த்த பாரம்பர்ய வைத்தியர்களின் மருத்துவப் பெட்டியில், பிரண்டைப் பொடி மற்றும் பிரண்டை உப்பு எனும் சித்த மருந்து கண்டிப்பாக இருக்குமாம். எலும்புகளின் வலிமையை அதிகரிக்க பெரும்பாலான மலைவாழ் மக்கள் பிரண்டையை நாடுகின்றனர்.

சித்த மருத்துவர் விக்ரம்குமார்
சித்த மருத்துவர் விக்ரம்குமார்

சுண்ணச்சத்து பொக்கிஷம்:

`எனக்கு கால்சியம் குறைபாடு இருக்குன்னு டாக்டர் சொல்லிட்டாங்க… இப்பவே மெடிக்கல் ஸ்டோர்ல போயி கால்சியம் மாத்திரை வாங்கிச் சாப்பிடனும்…’ என்று வீட்டிலிருக்கும் பெரியவர்கள் புறப்பட முற்பட்டால், அவர்களிடம் பிரண்டையின் கால்சியம் விவரங்களைப் பற்றி எடுத்துக் கூறுங்கள்!

சுண்ணச்சத்து குறைபாட்டிற்கு, தாமாகச் சென்று மருந்தகங்களில் கிடைக்கும் `கால்சியம்’ மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரையில்லாமல் வாங்கிச் சாப்பிடுவது மிகவும் தவறான செயல். உணவில் அவ்வப்போது பிரண்டையைச் சேர்த்து சுவைத்து வந்தாலே, சுண்ணச்சத்து குறைபாடு ஏற்படாது. பிரண்டையை, தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் எதிர்காலத்தில் `எலும்பு அடர்த்திக் குறைவு’ நோயின் வருகையை தள்ளிப்போடலாம். வீட்டில் இருப்பவர்களிடம் இந்த உண்மையை அழுத்தமாக எடுத்துச்சொல்லுங்கள்.

மருத்துவ நுணுக்கம்:

தாவரங்களில் பொதுவாக ஆண் பெண் இனங்களைக் கண்டறிவது கடினம். ஆனால் பிரண்டையில் ஆண், பெண் வகைகளை இனம் கண்டறியலாம் என்பது ஆச்சர்யமான செய்தி. பிரண்டைத் தண்டின் கணுக்களுக்கு இடையே உள்ள இடைவெளி அதிகம் இருப்பின் ஆண் வகையாம். இடைவெளி குறைவாக இருப்பின் பெண் ரகமாம்.

ஆண் வகை பிரண்டைகளை ஆண்களுக்கும், பெண் வகை பிரண்டைகளை பெண்களுக்கும் மருந்தாகப் பயன்படுத்த, பலன்கள் அதிகரிக்கும் என மூலிகை நுணுக்கம் தெரிந்த பாரம்பர்ய மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

உடல் பருமன்
உடல் பருமன்

பிரண்டையின் சத்துகள் உடல் எடையை குறைப்பதாகவும், கொழுப்புச் சத்தின் அளவைக் குறைப்பதாகவும், ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. முறையற்ற உணவுப் பழக்கம் காரணமாக மேலை நாடுகளில் காணப்படும் உடல் பருமன் பிரச்னைக்கு பிரண்டையின் செயல்பாடுகள் பலன் அளிக்குமா என்பது குறித்தும், நிறைய ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

உடலில் உண்டாகும் வீக்கங்களைப் போக்கும் தன்மை, பிரண்டைக்கு இருக்கிறது. எலும்பு முறிவு ஏற்பட்ட பிறகு உண்டாகும் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க, பிரண்டை உதவுகிறது. மருத்துவத்தின் மூலம் முறையாக இணைத்த முறிந்த எலும்புகளின் ஒன்றுகூடும் செயல்பாடுகளை (Promotes Fracture healing process) பிரண்டை துரிதப்படுத்துகிறது. பற்களின் பலத்தையும் பிரண்டை அதிகரிக்கும் என்பதை மறக்க வேண்டாம்.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் உண்டாகும் உடல் சோர்வைப் போக்க, பிரண்டையை உணவில் அதிகமாகச் சேர்த்து வரச்சொல்லி நீங்களே அறிவுரை வழங்குங்கள்.

`ஆறுசெல் மாக்கள் அறுத்த பிரண்டை…’ எனும் அகநானூறு பாடல், பிரண்டை பற்றி பதிவிடுகிறது. நெடுங்காலமாக நம்முடைய உணவியலில் முக்கியப் பங்கு வகித்த பிரண்டை, பல்வேறு சடங்குகளிலும் விழாக்களிலும் நீங்காமல் இடம் பிடித்திருக்கிறது.

மாதவிடாய் பிரச்சனை
மாதவிடாய் பிரச்சனை

தாவரவியல் பெயர்:

Cissus quadrangularis

குடும்பம்:

Vitaceae

கண்டறிதல்:

பற்றிக் கொண்டு கொடியேறும் வகையைச் சார்ந்தது. சதைப்பற்றுள்ள தண்டுகள், பசுமையாக இருக்கும். வகைக்கு ஏற்ப பல்வேறு கோணங்களை உடைய தண்டுகள். கணுவிற்கு கணு பற்றுக் கம்பிகளைக் கொண்டிருக்கும்.

பற்றுக் கம்பிகளின் உதவியுடன், பிற தாவரங்களைப் பிடித்துக் கொண்டு, கொடியாக வேகமாக வளரும். இதய வடிவ இலைகள் காணப்படும். சைம் வகை மஞ்சரி. சிவந்த நிறத்தில் உருண்டையான சிறிய பழம்.

தாவரவேதிப் பொருள்கள்:

Calcium, Sitosterol, Quercitin, Quadrangularin – A, Carotene

பிரண்டை… எலும்புகளின் பாதுகாவலன்!

-மரு.வி.விக்ரம்குமார்.,MD(S)