Published:Updated:

Vaccine Tourism: தடுப்பூசிக்காகவே ரஷ்ய பயணம்; தொடங்கும் புதிய டிரெண்ட்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
Vaccine Tourism - Representational Image
Vaccine Tourism - Representational Image ( Image by Rudy and Peter Skitterians from Pixabay )

தற்போது தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் ஸிம்பாப்வே நாட்டுக்கும், கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கும் தடுப்பூசிக்காகப் பயணப்படுகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பெருந்தொற்றுக் காலத்துக்கு முன்பு மருத்துவச் சுற்றுலாவில் (Medical Tourism) ஆசியாவில் முன்னணி நாடாக இந்தியா விளங்கி வந்தது. ஆண்டுக்கு 5 - 6 பில்லியன் டாலர்கள் இதன் மூலம் வர்த்தகம் நடைபெற்று வந்தது. குறிப்பாக, சென்னை நகரம் இந்தியாவின் மருத்துவச் சுற்றுலாவின் தலைநகரம் என்ற புகழையும் அடைந்திருந்தது.

COVID-19 vaccine
COVID-19 vaccine
AP Photo / Bikas Das

தடுப்பூசி சுற்றுலா!

பெருந்தொற்றுக் காலமான தற்போது அதற்கு இணையாக `தடுப்பூசி சுற்றுலா' என்ற வார்த்தைகள் இணையத்தில் பிரபலமாகி வருகின்றன. தன்னுடைய இடத்தைவிட்டு கோவிட்-19 தடுப்பூசிக்காக வேறு பகுதிக்கோ நாட்டுக்கோ பயணப்படுவதைத்தான் தடுப்பூசி சுற்றுலா என்று கூறுகின்றனர். அண்மையில் துபாயைச் சேர்ந்த டிராவல் நிறுவனம் ஒன்று ரஷ்யாவுக்கு ஸ்புட்னிக் - வி தடுப்பூசி போட்டுக்கொள்வதற்குச் செல்லும் டிரிப் பேக்கேஜ் ஒன்றை அறிவித்தது.

பயணத்துக்கு முன்பாக எவ்வித க்வாரன்டீன் இல்லாமல் ரஷ்யாவுக்கு 24 நாள்கள் செல்லலாம். அங்கு சென்ற உடன் முதல் தவணை, திரும்பும்போது இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

சமூக வலைதளங்களில் வைரல் ஆனதும் சில நேரத்தில் அது நீக்கப்பட்டது. இந்தியாவில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்ல விரும்புவோருக்கு கூடுதல் பயனாக அங்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று டூர் ஆபரேட்டர்கள் அறிவித்திருந்தனர்.

Vaccine Tourism - Representational image
Vaccine Tourism - Representational image
Image by digital designer from Pixabay

தற்போது தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் ஸிம்பாப்வே நாட்டுக்கும், கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கும் தடுப்பூசிக்காகப் பயணப்படுகின்றனர். ஐரோப்பாவிலுள்ள சில டூர் ஆபரேட்டர்கள் தடுப்பூசியைப் பெற ரஷ்யாவுக்கு பேக்கேஜ்களை அறிவித்துள்ளனர்.

விமானப் பயணம் அனுமதிக்கப்பட்ட நாடுகளிலும் பிற நாடுகளிலும், சர்வதேச விதிமுறைகளிலும் தடுப்பூசிக்காக வேறு நாட்டுக்குப் பயணப்படுவது என்பது தவறு என்று குறிப்பிடும் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அமெரிக்கா உள்ளிட்ட ஒரு சில நாடுகளைத் தவிர்த்து பிற நாடுகளில் தடுப்பூசித் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் தங்கள் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதற்கு சில விதிமுறைகளைப் பின்பற்றி வருகின்றன. மேலும் அதிக ஆபத்துள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி வழங்கி வருகின்றன.

travel
travel

கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்படவில்லை என்றாலும் பணம் படைத்தவர்கள் வேறு நாடுகளுக்குப் பயணப்பட்டு அந்த நாட்டினருக்குக் கிடைக்க வேண்டிய தடுப்பூசியை தாங்கள் போட்டுக்கொள்வது என்பதை மனசாட்சிக்கு விரோதமான நடவடிக்கையாகப் பார்க்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு