Published:Updated:

`இனி 365 நாள்களும் தடுப்பூசி போடலாம்!' - அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

ஜெ.நிவேதா

ரூபெல்லா ஒழிப்பு உத்தி குறித்த மாநில அளவிலான கருத்தரங்கு

Vaccine
Vaccine

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் இனி 365 நாள்களும் தடுப்பூசி போடப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

Vaccine
Vaccine

தட்டம்மை ரூபெல்லா ஒழிப்பு உத்தி குறித்த மாநில அளவிலான கருத்தரங்கத்தின் தொடக்க விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், ``தடுப்பூசியினால் தடுக்கப்படக்கூடிய நோய்களுக்கான தீவிர கண்காணிப்புத் திட்டம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் முதன்முறையாகச் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ்த் தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், இளம் சிசுக்களுக்கு ஏற்படும் ரணஜன்னி போன்ற நோய்களுக்கான தீவிர கண்காணிப்பு வாரந்தோறும் செயல்படுத்தப்படும்.

Vikatan
இனி, அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 365 நாள்களும் தடுப்பூசிகள் போடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
விஜயபாஸ்கர்

தமிழ்நாட்டில் தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி, போலியோ, காசநோய், ஹெபடைட்டிஸ் பி, இன்ஃபுளூயன்சா - பி, தட்டம்மை, ரூபெல்லா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல், ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கு ஆகிய நோய்களுக்குத் தடுப்பு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

தட்டம்மை, ரூபெல்லா ஆகிய நோய்களை 2023-ம் ஆண்டுக்குள் முற்றிலுமாக ஒழிப்பதற்குத் தமிழக அரசு எடுத்த தீவிர நடவடிக்கைகளின் காரணமாக, 99 சதவிகிதம் தடுப்பூசி அளிக்கப்பட்டு வரும் மாநிலமாகத் தமிழ்நாடு மாறியுள்ளது. மீதமுள்ள 1 சதவிகிதத்தினருக்கும் தடுப்பூசி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Vaccine
Vaccine

தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் ஒவ்வொரு புதன்கிழமையும் 10,000 தடுப்பூசி முகாம்களும் அனைத்து அரசு மருத்துவமனைகளில் 2,628 தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. இனி, அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 365 நாள்களும் தடுப்பூசிகள் போடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது'' என்றார்.