Published:Updated:

`கொரோனா விழிப்புணர்வு' - நம் உறவுகளுக்குப் பகிர ஓர் எளிய வழிகாட்டி! #FightAgainstCoronavirus

கொரோனா விழிப்புணர்வு
கொரோனா விழிப்புணர்வு

கொரோனா பாதிப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த A to Z தகவல்களை 360 டிகிரி கோணத்தில் மிக மிக எளிதாகத் தமிழில் விளக்கி, ஒரு சின்ன கைடு ஒன்றை வெளியிட்டிருக்கிறது விகடன்.

கொரோனோ வைரஸ் A to Z தகவல்கள் அளிக்கும் அந்த ஃபைல் இங்கே http://bit.ly/2J27NdP

உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் கொரோனாவுக்கு வெறும் 52 பரிசோதனை மையங்கள் மட்டுமே இருப்பதைச் சுட்டிக் காட்டி, மத்திய அரசு கொரோனா சிகிச்சை முறையில் இன்னும் பல முன்னேற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்று தேசிய சுகாதார அமைப்பின் முன்னாள் இயக்குநர் சுந்தரராமன் கூறியிருப்பது மிகவும் கவனிக்கத்தக்கது.

கொரோனா
கொரோனா

தற்போதைய டேட்டாவைப் பார்க்கும்போது, மற்ற நாடுகளோடு ஒப்பிட்டால், இந்தியாவில் நோய் பாதிப்பு கட்டுக்கோப்பான அளவில்தான் இருக்கிறது என்று சொல்லலாம். சீனாவைத் தொடர்ந்து இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில் உயிரிழப்பும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக இருக்கிறது. ஆனால், மக்கள் தொகை அதிகம் உள்ள நம் நாட்டில், ஒரு சிலர் அலட்சியமாக இருந்தால்கூட இந்த வைரஸ் அதிவேகத்தில் பரவும் அபாயம் உண்டு.

தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

* சோப் வாட்டர் அல்லது ஹேண்ட் வாஷ் கொண்டு அடிக்கடி கைகளைக் கழுவுவது.

* ஹேண்ட் சானிடைஸர் உபயோகிப்பது.

* வீட்டின் தரைப்பகுதிகளை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது.

கொரோனோ வைரஸ் A to Z தகவல்கள் அளிக்கும் அந்த ஃபைல் இங்கே http://bit.ly/2J27NdP

அச்சுறுத்தும் கொரோனா... அரசு, நிறுவனங்கள், பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன?#LetsFightCovid-19

* இருமல், தும்மலின்போது உள்ளங்கையால் வாய் மற்றும் மூக்கை மூடுவதற்குப் பதில், கைக்குட்டை அல்லது டிஷ்யூ பயன்படுத்துவது.

* ஒருவேளை கைக்குட்டை அல்லது டிஷ்யூ கிடைக்காவிட்டால், முழங்கைக்குக் கீழே தும்முவது, இருமுவது.

* கூட்டமான, நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது.

* கொரோனா பாதிப்புள்ள வெளிநாட்டு - உள்நாட்டுப் பகுதிகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்ப்பது.

* காய்ச்சல், இருமல், தும்மல் தொந்தரவுகள் தெரியவந்தால் குடும்ப மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது.

இவைதான் கொரோனாவைத் தடுக்கும் அடிப்படை விஷயங்கள். இதுபோன்ற எளிதான வழிமுறைகள்தான், விலைமதிப்பற்ற உயிர்களைக் கொள்ளை நோய்க்குப் பலி தராமல் தடுக்கும் நம்மால் இயன்ற நடவடிக்கைகள். தேவையற்ற அச்சத்தை ஒதுக்கும் அதே வேளையில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருமுன் காப்பது அவசியம்.

‘கொரோனா’ வைரஸ்
‘கொரோனா’ வைரஸ்

கொரோனா பாதிப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த A to Z தகவல்களை, 360 டிகிரி கோணத்தில் மிக மிக எளிதாக தமிழில் விளக்கி, ஒரு சின்ன கைடு ஒன்றை வெளியிட்டிருக்கிறது விகடன்.

பி.டி.எஃப் வடிவிலான இந்தக் கையேடு, கூகுள் ட்ரைவ் வழியாக யார் வேண்டுமேனாலும் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். குறிப்பாக, இந்த ஃபைலை டவுன்லோடு செய்து நம் உறவுகளுக்கு அக்கறையோடு பகிரலாம். கொரோனோ வைரஸ் A to Z தகவல்கள் அளிக்கும் அந்த ஃபைல் இங்கே http://bit.ly/2J27NdP

அடுத்த கட்டுரைக்கு