இயற்கை உணவு குறித்தும் இனிய வாழ்வியல் குறித்தும் தொடர்ச்சியாக உரையாடி, கருத்துகள் விதைத்துவரும் மருத்துவர் கு.சிவராமனின் `ஆரோக்யா சித்த மருத்துவமனை’ தனது 25-வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. அதை மக்களுக்குப் பயனுள்ளதாக அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வெள்ளிவிழாக் கொண்டாட்டம் கருத்தரங்க நிகழ்வாகத் தயாரானது.

விகடன் மீடியா பார்ட்னராக இணைய, ‘நலந்தானா - நல்வாழ்வுக் கருத்தரங்கு’ சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கருத்தரங்கக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சித்தா, ஆயுர்வேதா எனப் பல்வேறு மரபு மருத்துவர்கள், உடலியல் சிகிச்சை நிபுணர்கள், சிறப்பு விருந்தினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

‘‘எங்கள் மருத்துவம் அறம் சார்ந்தது; அறிவியலைத் துணை கொண்டது’’ என்றார், சிவராமன். “தமிழர்களின் மருத்துவம் உலகறிந்தது. இதில் ஆரோக்யாவும் பங்காற்றுகிறது. இந்த 25 ஆண்டு வளர்ச்சி மட்டும் முக்கியமல்ல, மக்களுக்கு மருத்துவமனை எந்த அளவு பயனளித்திருக்கிறது என்பதே முக்கியம்” என்று தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டார், மருத்துவர் ஜெயபிரகாஷ் நாராயணன்.

“கேழ்வரகு, தினை, கம்பு, சோளம் உள்ளிட்ட ஒன்பதையும் சிறுதானியங்கள் என்றழைப்பது தவறு. தொண்கூலம் என்பதே அவற்றுக்கு நாம் சூட்டிய மரபுப்பெயர்” என்று கூறிய இதயநோய் மருத்துவர் சுந்தர், சித்த மருத்துவர் சிவராமனுக்கு அந்த மேடையிலேயே, ‘தொண்கூலத் தொல்காப்பியர்’ எனப் பட்டம் சூட்டி மகிழவும், அரங்கமே ஆர்ப்பரித்துக் கைதட்டியது. “தமிழில் 1000 வருட ஏடுகளில் 80 சதவிகிதம் சித்த மருத்துவக் குறிப்புகளே அடங்கியுள்ளன” என, தனது 20 நிமிடப் பேச்சு முடியும்வரை நகைச் சுவையும் அரிய தகவலின் தெறிப்புகளுமாய் அரங்கை வழக்கம்போல் வசப்படுத்தினார் சு.வெங்கடேசன்.

கருத்தரங்கின் நிறைவாகப் பேசிய சிவராமன், “மக்கள் நலனில் அக்கறை கொண்டு மருத்துவர்கள் ஒன்றிணைய வேண்டும். மருந்துகள் கலப்பது, இரண்டாவதாக நிகழட்டும். மருத்துவர்கள் கலப்பதே இங்கே முதன்மையாக நடக்க வேண்டியது.

ஆயுர்வேதத்தில், சித்தாவில் எங்களால் இதையெல்லாம் செய்ய முடியவில்லை என மேடையில் சொல்கின்றனர் இந்த மருத்துவர்கள். தான் சார்ந்திருக்கும் மருத்துவ முறை, ஓர் இடத்தில் தோற்றுப்போவதை வெளிப்படையாகச் சொல்லுகின்றார்களே, இதுவே மருத்துவ அறம்” என்றவர் அலோபதி, ஆயுர்வேதம், சித்தா போன்ற பல்வேறு மருத்துவமுறைகளும் ஒருங்கிணைக் கப்பட்ட சிகிச்சைமுறையை வலியுறுத்தினார். அதோடு, விகடன் வாசகர்கள் மின்னஞ்சலில் அனுப்பிய கேள்விகளுக்கு மூன்று நாள்களில் தெளிவான பதில்கள் அனுப்பி வைப்போம் என உறுதி கூறினார்.

மாலையில், புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. ‘இன்னா நாற்பது இனியவை நாற்பது’ - கு.சிவராமன் எழுதி ஆனந்த விகடன் தொடராக வந்து பெரும் வரவேற்பு பெற்ற கட்டுரைத் தொகுப்பு, புத்தகமாக வெளியிடப்பட்டது. சுகி சிவம், இசைக்கவி ரமணன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட விழாவில், உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் வெளியிட, நூலைப் பெற்றுக்கொண்டார் உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன்.

மருத்துவ விழா மக்கள் விழாவாக மலர்ந்தது பார்வையாளர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியளித்தது.