Published:Updated:

தமிழகத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி ஆராய்ச்சி நிறுத்தப்பட்டதா? சர்ச்சையும் அதிகாரியின் விளக்கமும்

A vaccine volunteer receives an injection Johannesburg ( AP / Siphiwe Sibeko )

இங்கிலாந்தில் நடைபெறும் கோவிஷீல்டு பரிசோதனையில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகச் செய்திகள் வெளியாகின.

தமிழகத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி ஆராய்ச்சி நிறுத்தப்பட்டதா? சர்ச்சையும் அதிகாரியின் விளக்கமும்

இங்கிலாந்தில் நடைபெறும் கோவிஷீல்டு பரிசோதனையில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகச் செய்திகள் வெளியாகின.

Published:Updated:
A vaccine volunteer receives an injection Johannesburg ( AP / Siphiwe Sibeko )

ந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துடன் இணைந்து ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தால் கொரோனாவுக்கு எதிராக `கோவாக்ஸின் (COVAXIN)' என்ற தடுப்பு மருந்து கண்டறியப்பட்டது. ஆராய்ச்சியில் பல கட்டங்களைத் தாண்டியிருந்த இம்மருந்து மனிதர்களுக்குக் கொடுக்கப்பட்டுப் பரிசோதிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த இறுதிக்கட்ட பரிசோதனையை நடத்த பீகார், ஒடிசா, ஆந்திரா, கர்நாடகா, கோவா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

COVAXIN
COVAXIN

இந்த வரிசையில் தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரிக்கு கோவாக்ஸினை மனிதர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்க அனுமதி தரப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் கடந்த ஒரு மாத காலமாகத் தன்னார்வலர்களுக்கு கோவாக்ஸினைச் செலுத்தி பரிசோதனையை நடத்தி வருகிறது இக்கல்லூரி.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கோவாக்ஸினை தொடர்ந்து இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மையம் கொரோனாவுக்கென `கோவிஷீல்டு (Covishield)' என்ற தடுப்பு மருந்தைக் கண்டறிந்தது. இம்மருந்தின் முதல்கட்ட ஆராய்ச்சிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 2-ம் கட்டமாக மனிதர்களுக்குச் செலுத்திச் செய்யப்படும் டிரையல் பரிசோதனைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) மற்றும் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம் (DCGI) சென்னையைத் தேர்வு செய்திருந்தது.

Covishield
Covishield

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையும், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையும் இந்த டிரையல் பரிசோதனைகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்த டிரையல் பரிசோதனைக்கு பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையின் இயக்குநர் செல்வ விநாயகம் முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

அப்போது நம்மிடம் பேசியிருந்த செல்வ விநாயகம், ``கொரோனா வைரஸுக்கு எதிராக ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மையம் தயாரித்துள்ள `கோவிஷீல்டு' தடுப்பு மருந்தின் 2-ம் கட்ட பரிசோதனை பேஸ்-1, பேஸ்-2 மற்றும் பேஸ்-3 என்று மூன்று நிலைகளாக நடைபெறும். இந்த 2-ம் கட்ட பரிசோதனையில் பேஸ்-1 டெஸ்ட்டில் சென்னை அரசு பொது மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தலா 160 பேருக்குத் தடுப்பு மருந்து செலுத்தி பரிசோதனை செய்யப்பட உள்ளது. முதல்கட்டமாக 200 டோஸ் தடுப்பு மருந்து சென்னை வந்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட, கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாத நபர்களுக்குத் தடுப்பு மருந்தின் முதல் டோஸ் வரும் 10-ம் தேதிக்குள் வழங்கப்படவுள்ளது. முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்ட சில நாள்களிலேயே 2–வது டோஸ் செலுத்தப்படும்" என்று கூறியிருந்தார்.

செல்வ விநாயகம்
செல்வ விநாயகம்

இந்நிலையில், `இங்கிலாந்தில் நடைபெறும் கோவிஷீல்டு பரிசோதனையில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும், அதனால் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் அந்தப் பரிசோதனையைத் தள்ளிவைப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், என்ன மாதிரியான பக்க விளைவு ஏற்பட்டது என்பதை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கவில்லை. `இதனால் சென்னையில் நடக்கவிருந்த கோவிஷீல்டு ஆராய்ச்சியும் தள்ளிப்போகிறது. தன்னார்வலர்கள் யாரும் வரவில்லை' என்கின்றனர் மருத்துவர்களில் சிலர். சீரம் இன்ஸ்டிடியூட்டும் இந்தியா முழுவதும் கோவிஷீல்டு பரிசோதனையை தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.

சென்னையில் நடக்கும் கோவிஷீல்டு மனித பரிசோதனை தள்ளிவைக்கப்பட்டுள்ளதா, தன்னார்வலர்கள் இல்லாமல் தாமதம் ஆகிறதா, அதன் உண்மை நிலை என்ன..? பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையின் இயக்குநர் செல்வ விநாயகத்திடமே கேட்டோம்.

``இங்கிலாந்தில் நடைபெற்ற கோவிஷீல்டு பரிசோதனையில் ஒருவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதற்கு அவரின் உடல்நிலை, மரபு அல்லது அறிவியல் சார்ந்த ஏதேனும் காரணிகள் இருக்கலாம். அதனால் நாம் இங்கு நடத்தப்போகும் பரிசோதனைகள் முழுமையாகத் தடைபடப்போவதில்லை. நான் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தபடி செப்டம்பர் 10-ம் தேதியில் பரிசோதனைகள் தொடங்கிவிட்டன.

Covishield trial
Covishield trial

இவை ஒரே நாளில் நடத்தப்படுபவை அல்ல. தன்னார்வலர்களைப் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு முன்பு அவர்களுக்கு ரத்த டெஸ்ட், சிறுநீர் டெஸ்ட், கொரோனா டெஸ்ட் என்று பல்வேறு வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். எந்தவித நோய்த்தொற்று மற்றும் உடல்நல குறைபாடுகளும் இல்லை என்றால் மட்டுமே அவர்கள் சோதனையில் ஈடுபடுத்தப்படுவார்கள். இவையனைத்தும் சேர்ந்ததுதான் தடுப்பூசி பரிசோதனை. அந்தப் பணிகள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதேசமயம், தன்னார்வலர்களிடம் தடுப்பூசி செலுத்தி பரிசோதனை செய்யும் பணி மட்டும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

18 வயது முதல் 55 வயதுவரை உள்ளவர்களில் இந்தப் பரிசோதனையில் ஈடுபட விரும்பும், தகுதியுள்ள தன்னார்வலர்களைத் தேடிக்கொண்டிருக்கிறோம். விருப்பமுள்ளவர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகளைத் தொடர்புகொள்ளலாம். அல்லது 044-29510500 என்ற தொலைபேசி எண்ணுக்கோ, covidvaccinetrialdph@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ தொடர்புகொள்ளலாம்" என்றார் அவர்.