Published:Updated:

ஊரடங்கு நாள்களில் சைக்ளிங் அல்லது வாக்கிங் போகலாமா?

வாக்கிங்
வாக்கிங்

இந்த நிலையில், வெளியில் வாக்கிங் அல்லது சைக்ளிங் போன்றவற்றை மேற்கொள்வது நல்லதல்ல. அப்படியே வெளியில் சென்றே தீருவேன் என்பவர்கள், சில விஷயங்களை கவனத்தில்கொள்ள வேண்டும்.

கொரோனா நோய்த் தொற்றின் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேபோகிறது. நோய்ப் பரவலைத் தடுக்கும் நோக்கில், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த நிலையில், வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் மக்களின் வாழ்க்கைமுறையும் சற்றே மாறியிருக்கிறது. சமூக விலகல் காரணமாக மக்கள் உடற்பயிற்சி செய்வதற்குக்கூட எங்கும் வெளியில் செல்லக்கூடாதென்று அரசு மக்களை அறிவுறுத்திவருகிறது.

கொரோனா
கொரோனா
விகடனின் #கொரோனா அப்டேட்ஸ் பக்கத்தில், ராமநாதன் என்ற வாசகர் இந்த நேரத்தில் வெளியில் சைக்ளிங் அல்லது வாக்கிங் போன்றவற்றை மேற்கொள்ளலாமா? அப்படி வெளியில் போகலாம் என்றால் என்ன மாதிரியான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் ? என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.
கொரோனா முடிவுக்கு வருமா என்ற கேள்விக்குப் பதில் சொல்லும் அந்த 5 விஷயங்கள்!

ராமநாதனின் கேள்விக்கு விளக்கமளிக்கிறார், பொது மருத்துவர் சுந்தர ராமன். "இந்த நோய் நமக்கு அறிமுகமாகி சில மாதங்களே ஆனாலும் அந்தக் கிருமி உலக அளவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், இது அதிக வீரியம் கொண்ட கிருமி வகை. ஒரே நேரத்தில் ஒருவரிடமிருந்து மூன்று பேருக்குப் பரவும் அளவுக்கு வீரியம் நிறைந்தது.

இந்த நோய்க்கு இதுவரை எந்தத் தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில், மருத்துவர்கள் நாங்கள் பரிந்துரைப்பது 'சமூக விலகல்' என்பதை மட்டும்தான். அதன்மூலம் மட்டுமே நோய்ப்பரவலைத் தடுக்க முடியும்.

பொது மருத்துவர் சுந்தர ராமன்
பொது மருத்துவர் சுந்தர ராமன்

வெளியில் நடமாடினால் நோய்ப்பரவல் அதிகரிக்கும் எனபதால்தான் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெளியில் வாக்கிங் அல்லது சைக்ளிங் போன்றவற்றை மேற்கொள்வது நல்லதல்ல. அப்படியே வெளியில் சென்றே தீருவேன் என்பவர்கள், சில விஷயங்களை கவனத்தில்கொள்ள வேண்டும்.

இந்த நோய், காற்றில் பரவும் தன்மை கொண்டது என்பதால், ஓரிடத்தில் கூட்டம் கூடும்போது மற்றவர்களுக்குப் பரவ அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, வெளியில் வாக்கிங் அல்லது சைக்ளிங் செல்பவர்கள், மக்கள் நடமாட்டம் குறைவான பகுதிகளில் தங்கள் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

`நண்பர்கள் படம் பொறித்த மாஸ்க்; தினமும் 500 பேருக்கு உணவு!’ - சமூக ஆர்வலர்களை நெகிழ வைத்த ஆட்சியர்

வெளியில் செல்வதற்கு முன், முறையாக முகக்கவசம் அணிந்து கொண்டு,ஹேண்டு சானிடைஸரை உடன் வைத்துக்கொண்டு அடிக்கடி கைகளைச் சுத்தம்செய்துகொள்ள வேண்டும். அப்படி சானிடைஸர் இல்லாத பட்சத்தில், கையுறைகள் அணிந்தபடி வெளியில் செல்லலாம். பயிற்சிகளை முடித்துவிட்டு மீண்டும் வீட்டுக்குள் வருவதற்கு முன், அந்தக் கையுறைகளை குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு, கைகால்களை நன்கு சுத்தம் செய்துவிட்டுதான் உள்ளே செல்ல வேண்டும்.

சானிடைஸர்
சானிடைஸர்

நாம் பயன்படுத்தும் ஷூக்களின் (shoes) மூலமாகவும் இந்த நோய் பரவலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆனால், அது இன்னும் 100 சதவிகிதம் உறுதிசெய்யப்படவில்லை என்றாலும் அதிலும் கவனம் செலுத்த வேண்டும். வெளியிலிருந்து வீட்டுக்குள் வருவதற்கு முன், காலணிகளை நன்கு சுத்தம்செய்து வீட்டின் வெளியிலேயே விட்டுவிட்டுதான் உள்ளே செல்ல வேண்டும். அதேபோல், சைக்ளிங் செல்பவர்கள் முடிந்தவரை தங்கள் பயிற்சிகளை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது, முறையாக கிருமிநாசினி தெளித்து வாகனங்களைச் சுத்தம்செய்ய வேண்டும்.

`WHO ஃபார்முலா; மலிவு விலை’ - உள்ளூரிலேயே சானிடைஸர் தயாரித்து அசத்திய திருப்பூர் கலெக்டர் #Corona

வெளியில் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே உடற்பயிற்சிகள் மேற்கொள்ளலாம். பெண்கள் ஸும்பா நடன பயிற்சி, யோகா மற்றும் மூச்சுப் பயிற்சிகள் செய்யலாம்.

வீட்டில் உடற்பயிற்சி சாதனங்கள் இருக்கும் பட்சத்தில், அவற்றை வைத்து உடற்பயிற்சி செய்யலாம். அப்படி இல்லாதவர்கள், வீட்டுக்குள்ளேயே புஷ்-அப்ஸ், புல்-அப்ஸ், ஸ்கிப்பிங் போன்றவற்றைச் செய்யலாம். வீட்டுக்குள் செய்யக்கூடிய ஏராளமான உடற்பயிற்சி'கள் இணையத்தில் அந்தத் துறை நிபுணர்களால் பதிவேற்றப்பட்டுள்ளன, அவற்றையும் செய்யலாம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு