Published:Updated:

மாநிலங்களில் எதிரொலிக்கும் வாட்டர் பெல் சிஸ்டம்! புதுமையை ஏற்கத் தயாரா இந்தியப் பள்ளிகள்?

இந்தத் தண்ணீர் பெல், திருச்சி கருங்குளம் அரசுப் பள்ளியில் அடிக்கத் தொடங்கியிருக்கிறது. தண்ணீருக்காகக் காலை, நண்பகல், மதியம், மாலை என நான்கு முறை நேரம் ஒதுக்குகின்றனர்.

வாட்டர்பெல்
வாட்டர்பெல்

விளைவிக்கவும் விளைந்ததைச் சமைக்கவும், உண்போர்க்கு உணவாகவும் கிடைக்கப்பெறுவது மழை நீர். இன்னும் விளங்க வேண்டும் எனில்... தானியங்களை, காய்கறிகளை விளைவிக்க நீர் தேவை. அப்படி விளைந்தவற்றை வீட்டுக்குக் கொண்டுவந்து சமைக்க நீர் தேவை. சமைத்ததை உண்ணும்போது, செரிக்கத் தண்ணீர் பருகுகிறோம். இப்படி மூன்று நிலைகளில் பயன்படுகிறது நீர்.

வாட்டர்பெல்
வாட்டர்பெல்

பள்ளிகளில் நாம் திக்கித் திணறி படித்த குறள், சொல்லும் உண்மை இது. குறள் நினைவுக்கு வந்துவிட்டதா? இப்போது கட்டுரைக்கு வரலாம்.

தண்ணீரின் முக்கியத்துவம் எல்லோரும் அறிந்ததே. அதைப் பாடத்தில் மட்டும் வைத்திருக்காமல் தினசரி வகுப்புகளில் நடைமுறைப் படுத்தத் தொடங்கியுள்ளன பள்ளிகள். அதாவது, மதிய உணவுக்கும் கழிப்பறை செல்வதற்கும் இடைவேளை விடுவது மாதிரி, தண்ணீர் அருந்துவதற்கென தனியாக நேரம் ஒதுக்கி இடைவேளை விடுகின்றனர் இந்தப் பள்ளிகளில். மாணவ மாணவிகள் தண்ணீர் அருந்துவதற்காகச் சில நிமிடங்கள் தரப்படுகின்றன.

வாட்டர்பெல்
வாட்டர்பெல்

பல்வேறு நாடுகளில் தொடர்ந்தாலும், தற்போது இந்தியாவில் முதன்முறையாக, கேரளத்தின் கொச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் இருக்கின்ற பள்ளிகள் இந்த சிஸ்டத்தைத் தொடங்கி வைத்திருக்கின்றன. அடுத்து கர்நாடகத்தின் மங்களூரு உப்பினங்காடி வித்யாலயம் வரை சென்று இப்போது நம் தமிழகத்திலும்.

`மணி ஒலித்ததும் தண்ணீர் குடிக்கணும்!' - மாணவர்களின் நலனின் அக்கறையுடன் செயல்படும் அரசுப்பள்ளி

இந்தத் தண்ணீர்பெல், திருச்சி கருங்குளம் அரசுப் பள்ளியில் அடிக்கத் தொடங்கியிருக்கிறது. தண்ணீருக்காகக் காலை, நண்பகல், மதியம், மாலை என நான்கு முறை நேரம் ஒதுக்குகின்றனர். மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஆசிரியர்களும் அவர்களோடு சேர்ந்து இந்தச் செயல்முறையில் ஈடுபடுகின்றனர்.

வாட்டர் பெல்
வாட்டர் பெல்
ஒவ்வொரு வகுப்பு நிறைவடைந்ததும் மாணவர்கள் தண்ணீர் அருந்துவதற்காக 10 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.
அமைச்சர் செங்கோட்டையன்

இதற்கிடையே, ஒவ்வொரு வகுப்பு நிறைவடைந்ததும் மாணவர்கள் தண்ணீர் அருந்துவதற்காக 10 நிமிடங்கள் ஒதுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பாதுகாப்பான குடிநீர் மாணவர்களுக்குச் சென்றடைவதைக் கல்வியகங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என உலகநாடுகள் வரையறுக்கின்றன. ஆனால், மாணவர்கள் முறையாகத் தண்ணீரை அருந்துகின்றனரா என்பதை அறிந்துகொள்ள முடிவதில்லை. இதன் தீர்வாகத்தான் இந்தத் தண்ணீர் பெல். அதிலும் கருங்குளம் பள்ளி, ஒரு படி மேல்.

தண்ணீர் வசதி இல்லாத அந்தப் பகுதியில், தண்ணீர் வாகனங்களை வரவழைத்து மாணவர்களுக்கு வழங்குகின்றனர். ஆரோக்கியத்திலிருந்துதான் அறிவின் தொடக்கம். பள்ளிகள் உணரத் தொடங்கியுள்ளன.

வாட்டர்பெல்
வாட்டர்பெல்

``தண்ணீர் அருந்தும் மாணவர்கள், செரிமானக் கோளாறுகளில் இருந்து விடுபடுவர். அதிகமாக நீர் அருந்துவதால், உடல்எடை அதிகரிப்பதையும் உடல் பருமனையும் தவிர்க்கலாம். குழந்தைகள் முகத் தெளிவுடன் விளங்குவர்'' என்கிறார்கள் மருத்துவர்கள்.

சமூக ஆர்வலர் ஒருவரிடம் இதுதொடர்பாகக் கேட்டபோது, "இளைஞர்கள் ஒருநாளைக்கு 3 லிட்டர் வரையாவது தண்ணீர் அருந்த வேண்டியது அவசியம்.

வாட்டர் பெல்
வாட்டர் பெல்

ஆனால், பள்ளிகளில் சுத்தமற்ற கழிப்பறைகளுக்குச் செல்ல வேண்டியிருக்குமே என்ற காரணத்தாலேயே பள்ளிக் குழந்தைகள், குறிப்பாக மாணவிகள் தண்ணீர் அருந்துவதைத் தவிர்க்கின்றனர். தண்ணீர் பெல்லோடு, கழிப்பறை மேலாண்மையும் அவசியம். இரண்டையும் சேர்த்தே செய்ய வேண்டியது கல்வியங்கங்களின் காலத்தேவை" என்றார்.