Published:Updated:

Doctor Vikatan: முகம், முதுகு எனப் பரவும் பருக்கள்; தீர்வு உண்டா?

Pimples (Representational Image) ( Photo by Anna Nekrashevich from Pexels )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: முகம், முதுகு எனப் பரவும் பருக்கள்; தீர்வு உண்டா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:
Pimples (Representational Image) ( Photo by Anna Nekrashevich from Pexels )

என் வயது 24. பல வருடங்களாகப் பருக்கள் பிரச்னை இருக்கிறது. பருக்களுக்கான சோப், க்ரீம் என எல்லாவற்றையும் முயற்சி செய்து பார்த்தும் பலனில்லை. எண்ணெய்ப் பண்டங்கள் சாப்பிடுவதில்லை. முகத்தில் மட்டும் வந்துகொண்டிருந்த பருக்கள், கடந்த சில மாதங்களாக நெஞ்சுப் பகுதி, முதுகு எனப் பரவ ஆரம்பித்திருக்கிறது. இதைக் குணப்படுத்த முடியுமா?

- மஞ்சு - (விகடன் இணையத்திலிருந்து)

சரும மருத்துவர் கிருத்திகா ரவீந்திரன்
சரும மருத்துவர் கிருத்திகா ரவீந்திரன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் கிருத்திகா ரவீந்திரன்.

``இந்த வயதில் உங்களுக்குத் தோன்றும் பருக்களுக்கான முக்கிய காரணம், எண்ணெய்ப்பசையான சருமம். உங்களுடைய சருமத்திலுள்ள எண்ணெய்ச் சுரப்பிகள் அதிக எண்ணெய்ப்பசையைச் சுரப்பதால், அது சரும துவாரங்களை அடைக்கும். சரும துவாரங்களின் உள்ளே எண்ணெய் சேர்ந்து, அதன் மேல் கிருமித்தொற்றும் சேரும்போது சீழுடன்கூடிய பருக்கள் தோன்றும். பருக்களில் நிறைய வகை உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணத்தால் வரலாம். பொதுவான, பரவலான காரணம் எண்ணெய்ப்பசையான சருமம். உடலில் ஹார்மோன் பிரச்னைகள் இருந்தாலோ, எண்ணெய்ப் பண்டங்களை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவதாலோ எண்ணெய்ச் சுரப்பு அதிகரிக்கும்.

சருமத்தைச் சரியாகப் பராமரிக்காததும் பருக்களுக்கான முக்கிய காரணம். சருமத்தில் எண்ணெய்ப் பசை அதிகமிருக்கும் நிலையில் வெளியே போகும்போது சூழல் மாசும் சேர்ந்து துவாரத்தை அடைத்து, பருக்களுக்குக் காரணமாகிறது. எனவே, சருமத்தை முறையாக க்ளென்ஸ் செய்ய வேண்டும். சரியாக க்ளென்ஸ் செய்யாமலோ, பருக்களைக் கிள்ளுவதாலோ பருக்கள் அதிகரிக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முகத்துக்கு சோப் உபயோகிப்பதைவிட, ஃபேஷியல் க்ளென்சர் அல்லது ஃபேஸ் வாஷ் உபயோகிப்பதுதான் சரி. சோப் கடினத்தன்மை உடையது. சோப்பின் பி.ஹெச் அளவும் சருமத்தின் பி.ஹெச் அளவும் வேறுவேறு. சோப் உபயோகிப்பதால் சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப் பசை நீங்கி, சருமம் வறண்டுவிடும். அதனால் சருமப் பிரச்னைகள் அதிகரிக்குமே தவிர, குறையாது.

பருக்கள் இருந்தால் அதற்கேற்ற க்ளென்சர் உபயோகிக்க வேண்டும். உதாரணத்துக்கு சாலிசிலிக் ஆசிட் சேர்த்த க்ளென்சர்... உங்கள் முகம் எண்ணெய்ப்பசையாக இருக்கும்போது நீங்கள் க்ரீம் உபயோகித்தால் அது சரும துவாரங்களை மேலும் அடைக்கும். அதனாலும் பருக்கள் அதிகரிக்கும். எனவே ஜெல் வடிவ, திரவ வடிவ லைட் மாய்ஸ்ச்சரைசிங் க்ரீம்களை உபயோகிக்க வேண்டும்.

உடலில் வரும் பருக்களுக்கும் இதுதான் காரணம். உடல் சருமத்திலுள்ள எண்ணெய்ச் சுரப்பு அதிகரிக்கும்போது முதுகு, கழுத்து உள்ளிட்ட பல பகுதிகளிலும் பருக்கள் வரலாம். ஸ்ட்ரெஸ் அதிகரிக்கும்போது, எண்ணெய்ப் பண்டங்களை அதிகம் சாப்பிடும்போது, தூக்கமில்லாதபோது, சர்க்கரை சேர்த்த உணவுகளை உண்ணும்போதெல்லாம்கூட பருக்கள் அதிகரிக்கும்.

இறுக்கமான உடை அணிவதைத் தவிர்க்கவும். வியர்வையை உறிஞ்சும்படியான தளர்வான, காட்டன் உடைகளை அணிவது சிறந்தது. தலைக்கு அதிக எண்ணெய் அல்லது கண்டிஷனர் உபயோகித்தாலும், அதன் காரணமாக முதுகுப் பகுதியில் பருக்கள் அதிகம் வரலாம்.

முகப்பருக்கள் (Representational Image)
முகப்பருக்கள் (Representational Image)

முதல் வேலையாகத் தரமான காஸ்மெடிக்ஸ் உபயோகித்து, பருக்கள் குறைகின்றனவா என்று பார்க்கலாம். அப்படியும் குறையவில்லை என்றால் மருத்துவரை அணுகி, பிசிஓடி உள்ளிட்ட பிரச்னை இருக்கிறதா எனக் கண்டறிந்து, சிகிச்சை எடுக்க வேண்டும்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?