Published:Updated:

வேர் முதல் பழம் வரை; வேப்பிலை மகத்துவம் தெரியுமா? - மூலிகை ரகசியம் - 1

மூலிகை ரகசியம்

`அதென்னப்பா ஆல் இன் அழகு ராஜா..! அவ்ளோ பெரிய ஆளா இந்த வேம்பு…’ என நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது குழந்தைகளே! வேப்ப மரத்தின் இலை, மரப்பட்டை, வேர், பழம், விதை, எண்ணெய், குச்சி என அனைத்துப் பகுதிகளும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

வேர் முதல் பழம் வரை; வேப்பிலை மகத்துவம் தெரியுமா? - மூலிகை ரகசியம் - 1

`அதென்னப்பா ஆல் இன் அழகு ராஜா..! அவ்ளோ பெரிய ஆளா இந்த வேம்பு…’ என நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது குழந்தைகளே! வேப்ப மரத்தின் இலை, மரப்பட்டை, வேர், பழம், விதை, எண்ணெய், குச்சி என அனைத்துப் பகுதிகளும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

Published:Updated:
மூலிகை ரகசியம்

ஆல் இன் ஆல் அழகு ராஜா - வேம்பு

`அதென்னப்பா ஆல் இன் அழகு ராஜா..! அவ்ளோ பெரிய ஆளா இந்த வேம்பு…’ என நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது! வேப்ப மரத்தின் இலை, மரப்பட்டை, வேர், பழம், விதை, எண்ணெய், குச்சி என அனைத்துப் பகுதிகளும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகின்றன. சாதாரண செரிமானத் தொந்தரவு முதல் புற்றுநோய் வரை தடுக்கும் தன்மை கொண்டது வேம்பு. இவ்வளவு மகிமைகள் நிறைந்த வேம்பு நிச்சயம் `ஆல் இன் ஆல் அழகு ராஜா’தான்.

எத்தனை பேர் நான் சொல்லப்போகும் வசனத்தை இன்னும் நினைவில் வைத்திருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள் பார்க்கலாம். உங்கள் குழந்தைப்பருவ ஃப்ளாஷ்பேக்!... அம்மாவின் மடியில் நீங்கள் அமர்ந்துகொண்டிருக்க, நெய் சேர்த்த பருப்பு சாதத்தை சிறு சிறு உணவுப் பந்துகளாக அம்மா உருட்டி ஊட்ட… `சாப்பிடமாட்டேன்… சாப்பிடமாட்டேன்…’ என நீங்கள் அடம்பிடித்தபோது, வேப்ப மரத்தை முதன்முதலாக உங்களுக்கு அம்மா அறிமுகப்படுத்தியிருப்பார். எப்படி என்று மூளையைக் கசக்கிப் பாருங்கள்!

Neem
Neem
Photo by Nick Cardoso on Unsplash

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதாவது, `சமர்த்தா சாப்பிடலனா, வேப்ப மர உச்சியில இருக்க பேய்க்கிட்ட புடிச்சிக் குடுத்திடுவேன்…’ என்று உங்களை அம்மா திகிலூட்டியிருப்பார். இதுவே வேப்ப மரத்தைப் பற்றி முதன்முதலாக குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கொடுக்கும் அறிமுகம் என்று சொல்லலாம். இந்த வசனம் இன்னும் பசுமையாக உங்கள் நினைவில் இருக்கிறதெனில் நீங்கள் பாக்கியசாலிகள்! நல்ல நினைவுத்திறன் உங்களுக்கு! ஆனால், வேப்ப மர உச்சியில பேய் எல்லாம் இல்லை சகோதர சகோதரிகளே… பேய்க்குப் பதிலாக மைனா, காக்கா, குருவி, தையல் சிட்டு போன்ற நிறைய பறவைகளை வேப்ப மரத்தில் ரசிக்கலாம். எந்த ஒரு மரத்தைப் பார்த்தாலும் அதில் காணப்படும் பறவைகள் பற்றிக் குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். பறவைகளின் உலகம் அழகானது.

மற்றொரு புறம் வேப்ப மரத்தைத் தெய்வமாக மதிப்பதும் நம் ஊரில்தான். வேப்ப மரங்களுக்கு மஞ்சள் துணி கட்டி... சந்தனம், குங்குமம் எல்லாம் வைத்து நடக்கும் தெய்வ வழிபாட்டை நீங்கள் அடிக்கடி பார்த்திருக்கலாம். வேப்ப மரத்துக்குப் பல்வேறு நோய்களை அழிக்கும் சக்தி இருப்பதால் தெய்வமாகப் பார்த்த நமது முன்னோர்களுடைய மரபு இன்றும் தொடர்கிறது. தெய்வமாக உருவகப்படுத்தப்பட்ட எந்த ஒரு மரமும் அவ்வளவு சீக்கிரமாக வெட்டப்படுவதில்லை! என்னுடைய ஆசை என்ன தெரியுமா… அனைத்து மரங்களுக்கும் தெய்வ அந்தஸ்தைக் கொடுத்துவிட்டால், சமூக விரோதிகளிடமிருந்து தப்பித்து பல்லாண்டு காலம் மரங்கள் மகிழ்ச்சியாக உயிர் வாழும்! நிறைய ஆக்ஸிஜன் கிடைக்கும்… பருவம் தப்பாமல் மழை பொழியும்… சுற்றுச்சூழல் பாதிப்பு பெரும் அளவில் குறையும்… நீங்களே சொல்லுங்கள்… எல்லா மரங்களும் தெய்வங்கள்தானே!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வேப்ப மரங்களைக் கிராமங்களின் `இயற்கை மருந்தகம்’ என்று கூறினால் அது மிகையாகாது. அதாவது, இப்போது தெருவுக்கு மூன்று மெடிக்கல் ஸ்டோர்கள் இருப்பதைப்போல, அக்கால கிராமங்களில் தெருவுக்கு பத்து பதினைந்து வேப்ப மரங்கள் இருந்தன! அம்மரங்களிலிருந்து வெளியாகும் தூய்மையான காற்றே பல நோய்களைக் குணப்படுத்தியது.

இயற்கை மருந்தகங்களாகச் செயல்பட்ட வேப்ப மரங்கள், இலவசமாகத் தங்கள் உறுப்புகளை மக்களுக்கு மருந்துகளாக அளித்தன! எத்தனை மக்கள் வேப்ப மரங்களால் பயன் அடைந்து இருப்பார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். இப்போது நீங்களே சொல்லுங்கள்... வேம்பு ஓர் `இயற்கை மருந்தகம்’ தானே. `மருந்துகள் இலவசம்…’ எனும் வாசகம் பொருந்திய பதாகைகளை வேப்ப மரங்களில் நிலைநிறுத்துவோமா!...

வேம்பில் கருவேம்பு, மலைவேம்பு, சர்க்கரை வேம்பு எனப் பல வகைகள் உண்டு. அரிட்டம், நிம்பம், பிசுமந்தம் போன்றவை வேம்பின் வேறு பெயர்கள். நம் நாட்டின் பாரம்பர்யத்தோடு அதிகம் தொடர்புடையது வேப்ப மரம்.

வேப்பம் பூ
வேப்பம் பூ
Pixabay

இயற்கை அளித்த டூத் பிரஷ்:

இன்றைய காலத்தில் பல்சுவை கொண்ட டூத்-பேஸ்ட்கள் மற்றும் பல வடிவ டூத்-பிரஷ்கள் இருந்தும் சிறு வயதிலேயே பலரின் பற்கள் `தகிடுதித்தோம்’ என நடனம் ஆடுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். ஆனால், உங்கள் தாத்தா பாட்டியின் பற்கள் எல்லாம் ஸ்ட்ராங்காக இருந்ததற்கான காரணம் என்னவென்று யோசனை செய்தீர்களா..? பல் துலக்க அவர்கள் பயன்படுத்திய வேப்பங்குச்சி டூத் பிரஷ் மிக முக்கிய காரணம்! ஆம்... வேப்பங் குச்சியால் பல் துலக்கினால், பற்களுக்கு பலம் உண்டாகும்… கிருமிகளால் ஏற்படும் பல் சொத்தையும் தலை காட்டாது. மேலும், அக்காலத்தில் கலர் கலர் டூத்-பேஸ்ட்களும் பல வடிவங்களில் டூத்-பிரஷ்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் தாத்தா, பாட்டியிடம் இப்போதே வேப்பங்குச்சியின் ரகசியத்தைக் கேட்டு நீங்களும் பின்பற்றுங்கள்! வேப்பங்குச்சி டூத்-பிரஷ் ரெடி ஆக தொடங்கிருச்சு போல..! கலக்குங்க…

கிருமிநாசினி:

சமீப காலமாக ஆன்டி-செப்டிக் (கிருமிநாசினி) சோப், லோஷன், க்ரீம் ஆகியவற்றின் வருகையும் பயன்பாடும் அதிகமாக இருக்கிறது. ஆனால், இவை அனைத்துக்கும் முன்னோடியாக, பல்லாயிரம் ஆண்டுகளாக வேம்பு மிகச்சிறந்த கிருமிநாசினியாகப் பயன்பட்டிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், வணிகச் சந்தையில் கிடைக்கும் அனைத்து கிருமிநாசினி மருந்துகளின் பெரும்பாலான மூலப் பொருள்கள் வேம்பிலிருந்தே எடுக்கப்படுகின்றன. கண்ணுக்குத் தெரியாத பல கிருமிகளை அழிக்கும் ஆற்றல் இருப்பதாலே, திருவிழாக்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளின்போது, நம் வீட்டு வாசல்களில் வேப்பிலைக் கொத்துகள் கட்டாயம் இடம்பிடிக்கின்றன! ஒவ்வொரு மூலிகைக்குப் பின்னும் மிகப்பெரிய அறிவியல் ஒளிந்துகிடக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வேப்ப எண்ணெய்:

தேங்காய் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், அதிகம் பயன்படுத்தப்படாத வேப்ப எண்ணெய் பற்றியும் இப்போது தெரிந்துகொள்ளுங்கள்! வேப்ப விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைப் பூச, மிகப் பெரிய சரும நோய்களின் தாக்கம் குறையும். வேப்ப எண்ணெய் மற்றும் ஆமணக்கு எண்ணெய் கலந்து செய்யப்படும் மருத்துவ எண்ணெயைத் தடவ, உடலில் உண்டாகும் வலியும் வேதனையும் மறையும். வீட்டில் இருக்கும் வயதானவர்களுக்கு நீங்கள் இந்த எண்ணெயைப் பரிந்துரைத்து `வெரிகுட்’ பட்டம் வாங்கலாம்!

இயற்கை கொசு விரட்டி:

கொசுவை ஒழிக்க கொசுவத்தி, லிக்விடேட்டர், க்ரீம், கொசு மருந்து எனப் பல்வேறு முயற்சிகளை எடுத்தாலும், கொசுக்கள் ஒழிந்தபாடில்லை. ஆனால், மலைகளிலும் காடுகளிலும் வாழ்ந்த நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒரே ஒரு கொசு மருந்து நம்ம வேப்பிலைதான். வேப்பிலைகளைத் தீயிட்டுக் கொளுத்த எழும் புகையில் கொசுக்கள் அனைத்தும் செத்து மடியும். மலேரியா, டெங்கு போன்ற சுர நோய்களைத் தடுக்க, வேப்பிலை எனும் அருமையான இயற்கை கொசுவிரட்டியை இப்போதிலிருந்தே பயன்படுத்தலாமா.

வேப்பிலை
வேப்பிலை

காடுகளில் வாழும் மக்கள் பரண்களில் உறங்குவது வழக்கம். விஷமுள்ள சில பாம்புகளோ, பிற விஷ உயிரினங்களோ அருகில் வந்துவிடக் கூடாது என்பதற்காக பரண்களின் கால்களில் வேப்ப எண்ணெய் தடவும் வழக்கம் இப்போதும் இருக்கிறது. வேப்ப எண்ணெயின் வாசனைக்கு விஷ உயிரினங்கள் அருகில் நெருங்காதாம்!

காக்காவும் வேம்பும்:

வேப்பம் பூவால் செய்யப்படும் ரசம், இன்றும் பல கிராமங்களில் பசியைத் தூண்ட, சுரத்தை நீக்க, வாந்தியைத் தவிர்க்க பயன்படும் முக்கியமான மருந்து. காகங்களுக்கு நோய் ஏற்படும் போது, வேப்பம்பழத்தைச் சாப்பிட்டு நோய் போக்கிக் கொள்வது இயற்கையின் சிறப்புச் செய்தி. வேப்பிலையுடன் மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து சருமத்தில் தடவ சிதறி ஓடும் சொறியும் சிரங்கும். அம்மை நோய்ப் புண்களின் தீவிரத்தைத் தடுப்பதில் வேப்பிலையின் பங்கு மகத்தானது. வேம்பில் ஒரு வகையான மலைவேம்பின் சாற்றினை அருந்த டெங்கு சுரம் கட்டுப்படும். வயிற்றுப் புழுக்களை அழிக்க வேம்பின் சாறோடு, மலைவேம்பின் சாறும் நல்ல மருந்து.

வேப்ப இலைகளுக்கு கிருமிநாசினி செய்கை இருப்பதாக பல்வேறு ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன. இதிலிருக்கும் வேதிப்பொருள்களுக்கு வலிநிவாரணி மற்றும் வீக்கமுறுக்கி செய்கை இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிகமாக ஆராயப்பட்ட மூலிகை வேம்புதான் என்று சொல்லும் அளவுக்கு வேம்பின் மருத்துவ குணங்களை உறுதிப்படுத்தும் ஆய்வு முடிவுகள் நிறையவே இருக்கின்றன. வேப்ப மரங்களுக்காகக் காப்புரிமை பெற நடைபெற்ற போராட்டங்களும் பிரச்னைகளும் தனிக்கதை.

சித்த மருத்துவர் விக்ரம்குமார்
சித்த மருத்துவர் விக்ரம்குமார்

பசுமையாக்குவோம் பூவுலகை:

நிலத்தடி நீரை அதிகரித்து உலகை பசுமையாக்கவும், பருவம் தவறாத வான் மழையை வரவழைத்து விவசாயத்தைக் காப்பாற்றிடவும் வேப்ப மரங்கள் அற்புதமான சாய்ஸ்! அவ்வகையில் உங்களால் முடிந்த வரையில் வேப்ப மரத்தை வளர்த்து, நோயில்லா சமுதாயத்தை உருவாக்கி, வளமான உலகத்தையும் ஏற்படுத்துங்கள். வேப்ப மர விதைகளை, பந்துகளாக உருட்டி (விதைப்பந்துகள்) செல்லும் இடங்களில் எல்லாம் தூவிவிடுங்கள்! நீங்கள் தூவுவது வேப்ப வித்து இல்லை, சுற்றுச்சூழலைக் காக்கும் நலவித்து!

தாவரவியல் பெயர்:

Azadirachta indica

குடும்பம்:

Meliaceae

கண்டறிதல்:

வேகமாக வளரக்கூடிய மரவகையினம். பரந்து விரிந்த கிளைகளைக் கொண்டது. நுனி கூர்மையான இலைகளைக் கொண்டிருக்கும். இலைகளின் ஓரத்தில் வெட்டுகள் காணப்படும். சிறகு கூட்டிலை அமைப்பு. வெள்ளை நிறம் கொண்ட சிறு பூக்கள், மிகுந்த வாசனையைத் தரும். முட்டை போல சதைப்பற்றுள்ள கனிகளைக் கொண்டிருக்கும். சதைக்குள் இருக்கும் விதை கடினமாக இருக்கும்.

தாவரவேதிப் பொருள்கள்:

Triterpenoids, Azadirone, Nimbin, Azadirachtin, Flavonoids, Coumarine, Tannins.

வேம்பு… மூலிகைகளில் சூப்பர்மேன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism