Published:Updated:

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் கண் பிரச்னைகள்; தீர்வு உண்டா? - கண்கள் பத்திரம் - 9

Eye testing (Representational Image) ( Photo: Pixabay )

உலக அளவில் நீரிழிவு நோயின் தலைநகரம் என்ற நிலையில் உள்ளது இந்தியா. அதிக எண்ணிக்கையிலான சர்க்கரை நோயாளிகள் இந்தியாவில்தான் உள்ளனர். அந்த வகையில் நம்மையெல்லாம் `ஸ்வீட் பீப்பிள்' என்று சொல்லிக்கொள்ளலாம். இந்த எண்ணிக்கை தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் மிகவும் அதிகம்.

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் கண் பிரச்னைகள்; தீர்வு உண்டா? - கண்கள் பத்திரம் - 9

உலக அளவில் நீரிழிவு நோயின் தலைநகரம் என்ற நிலையில் உள்ளது இந்தியா. அதிக எண்ணிக்கையிலான சர்க்கரை நோயாளிகள் இந்தியாவில்தான் உள்ளனர். அந்த வகையில் நம்மையெல்லாம் `ஸ்வீட் பீப்பிள்' என்று சொல்லிக்கொள்ளலாம். இந்த எண்ணிக்கை தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் மிகவும் அதிகம்.

Published:Updated:
Eye testing (Representational Image) ( Photo: Pixabay )

``சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு ஒவ்வோர் ஐந்து வருடத்திலும் பார்வை தொடர்பான பாதிப்புகள் வருவதற்கான ரிஸ்க் அதிகரிப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு ஏற்படக்கூடிய விழித்திரை பாதிப்பை `டயாபடிக் ரெட்டினோபதி' (Diabetic retinopathy) என்று குறிப்பிடுகிறோம்'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த விழித்திரை சிகிச்சை மருத்துவர் வசுமதி வேதாந்தம். அது குறித்து அவர் தரும் விளக்கமான தகவல்கள் இங்கே....

சிறப்பு மருத்துவர் வசுமதி
சிறப்பு மருத்துவர் வசுமதி

உலக அளவில் நீரிழிவு நோயின் தலைநகரம் என்ற நிலையில் உள்ளது இந்தியா. அதிக எண்ணிக்கையிலான சர்க்கரை நோயாளிகள் இந்தியாவில்தான் உள்ளனர். அந்த வகையில் நம்மையெல்லாம் `ஸ்வீட் பீப்பிள்' என்று சொல்லிக்கொள்ளலாம். இந்த எண்ணிக்கை தென்னிந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் மிகவும் அதிகம். நாமெல்லாம் அரிசி உணவுகளை அதிகம் உண்பவர்கள் என்பதுதான் இதற்குக் காரணமா என்பது இன்னும் முழுமையாக உறுதிசெய்யப்படவில்லை. ஆனால், மரபியலும் சர்க்கரைநோய்க்கு மிக முக்கிய காரணம் என்பது உறுதி.

``சர்க்கரைநோய் என்பது ஒருவருக்கு தலை முதல் பாதம் வரை அனைத்து உறுப்புகளையும் பாதிக்கக்கூடியது. அதிக பாதிப்புக் குள்ளாகும் உறுப்புகளில் கண்களும் முக்கியமானவை. சர்க்கரை நோயாளிகளுக்கு அதன் விளைவாகக் கண்களில் பலவிதமான பிரச்னைகள் வரக்கூடும். சர்க்கரை நோயாளிகளுக்கு கருவிழியில் இன்ஃபெக்ஷன் வருவதற்கான வாய்ப்புகளும் மிக அதிகம். இவர்களுக்கு கண்கள் வறண்டு போவது பெரிய பிரச்னையாக இருக்கும். குறிப்பிட்ட வயதுக்கு முன்பே கேட்டராக்ட் எனப்படும் கண்புரை பாதிப்பும் வந்துவிடும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவர்கள் கண்ணாடி அணிபவர்கள் என்றால் 6 மாதங்களுக்கு ஒருமுறை கண்ணாடி பவர் மாறிக்கொண்டே இருக்கும். அதாவது, ரத்தச் சக்கரையின் அளவு ஏறி இறங்கும்போது அதற்கேற்ப கண்ணாடியின் பவரும் மாறிக்கொண்டே இருக்கும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதற்கு அடுத்தபடியாகப் பாதிக்கப்படுவது விழித்திரை. நம் கண்களை கேமராவாக உருவகப்படுத்திக்கொண்டால் அதில் உள்ள ரோல்தான் விழித்திரை. அதன் மைய நரம்பான மேக்குலாவில் தண்ணீர் கோத்துக்கொள்ளும்.

அந்த நரம்பில் 10 லேயர்கள் இருக்கும். அந்தப் பத்து லேயர்களில் எந்த லேயரில் தண்ணீர் சேர்ந்துள்ளது என்பதை ஓசிடி அதாவது, `ஆப்டிகல் கோஹெரென்ஸ் டோமோகிராபி' (Optical Coherence Tomography) முறையில் கண்களைத் தொடாமல் லேசர் கதிர்களை உள்ளே செலுத்திப் பரிசோதனை செய்து உறுதி செய்யப்படும். எவ்வளவு தண்ணீர் சேர்ந்துள்ளது... அது நரம்புக்கு உள்ளே உள்ளதா வெளியே உள்ளதா என்று பார்க்கப்படும். முன்பெல்லாம் இந்தத் தண்ணீரை அகற்ற லேசர் சிகிச்சை செய்தார்கள். இப்போது கண்களுக்குள் இன்ஜெக்ஷன் போடப்படுகிறது அல்லது ஸ்டீராய்டு இம்பிளான்ட் செய்யப்படுகிறது. அது கண்ணுக்குள்ளேயே வேலைசெய்து, நரம்புக்குள் ஊடுருவி அங்கே சேர்ந்துள்ள தண்ணீரை அகற்றும். இதற்காக இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் இன்ஜெக்ஷன்களும் இப்போது கிடைக்கின்றன.

Eye treatment
Eye treatment
Photo by National Cancer Institute on Unsplash

இது தவிர, சர்க்கரைநோய் பாதிப்பால் பக்கவாட்டில் புதிய ரத்தக்குழாய்கள் உருவாகி அல்லது குட்டி ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இருக்கலாம். புதிதாக உருவான அந்த ரத்தக் குழாய்களின் சுவர்கள் பலவீனமாகவும் இருக்கக்கூடும். அவை வெடித்தால் கண்கள் முழுவதும் ரத்தக் கசிவு ஏற்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சர்க்கரைநோய் உள்ளவர்கள் திடீரென கண்களை மறைப்பது போன்றோ, கண்களில் பூச்சி பறப்பது போன்றோ உணர்வதாகச் சொன்னால் அதை அலட்சியம் செய்யாமல் உடனே கவனிக்க வேண்டும். விழித்திரை சிறப்பு மருத்துவரைச் சந்தித்தால் அவர்கள் கை நரம்பு வழியே ஊசியைச் செலுத்தி Fundus fluorescein angiography (FFA) டெஸ்ட் செய்வார்கள். இப்போது ஓசிடி ஆஞ்சியோகிராபி என்ற நவீன சிகிச்சையும் வந்திருக்கிறது. இந்தச் சிகிச்சையின் மூலம் புதிதாக உருவான ரத்தக் குழாய்களுக்குள் பச்சை அல்லது மஞ்சள் லேசரை செலுத்தி அவை கருக்கப்படும்.

Eyes
Eyes
Photo by Brands&People on Unsplash

தேவைப்பட்டால் இன்ஜெக்ஷன்களும் கொடுக்கப்பட்டு அந்தப் புதிய ரத்தக்குழாய்கள் கருக்கப்படும். ஒருவேளை அந்த ரத்தக்குழாய்கள் கருகாமல் நிறைய ரத்தப்போக்கு ஏற்பட்டால் விட்ரெக்டமி (Vitrectomy) என்ற சிகிச்சையின் மூலம் அந்த ரத்தக்கசிவை அகற்ற வேண்டும். கண்களில் செய்யப்படுவதிலேயே மிகப்பெரிய அறுவைசிகிச்சை இதுதான். இத்துடன் கூடவே லேசர் சிகிச்சையும் செய்யப்படும்.

இது தவிர சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு கண்களில் பிரஷர் அதிகமாகும் கிளாக்கோமா (Glaucoma) பிரச்னையும் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, சர்க்கரைநோயாளிகள் கண்களில் ஏற்படுகிற சின்ன அசௌகர்யத்தைக்கூட அலட்சியப்படுத்தாமல் உடனுக்குடன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது மிக அவசியம்.

- ராஜலட்சுமி

பார்ப்போம்!
பார்வை தொடர்பான உங்கள் கேள்விகளை எங்களுக்கு அனுப்புங்கள். பதில் சொல்லக் காத்திருக்கிறார் டாக்டர் வசுமதி வேதாந்தம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism