Published:Updated:

2,000 ஆண்டு பழைமையான மருந்துக்கு காப்புரிமை பெற்றதா பதஞ்சலி?

 பாபா ராம்தேவ்
News
பாபா ராம்தேவ்

``ஆயுர்வேத மருந்துகளில் மிகவும் முக்கியமான மருந்து சயவன்பிராஷ். மஹாபாரத காலத்தில் சயவன முனி என்பவர் இந்த லேகியத்தை உண்டு அவரது இளமையைத் திரும்ப பெற்றதால் இதற்கு சயவன்ப்ராஷ் என்ற பெயர் உண்டானது. இந்த மருந்து 2,000 வருடங்களுக்கு மேலாக புழக்கத்தில் உள்ளது." - மருத்துவர் பாலமுருகன்

பதஞ்சலி நிறுவன விஞ்ஞானிகள் சயவன்ப்ராஷ் என்ற ஆயுர்வேத மருந்தை தங்களுடைய அறிவியல் கண்டுபிடிப்புப் பட்டியலில் இணைத்துள்ளனர். இந்த மருந்தின் விளைவுகள், செயல்பாடுகள் குறித்த ஆராய்ச்சிக் கட்டுரை `ஃபிரான்டியர்ஸ் இன் பார்மகாலஜி' என்ற மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

சயவன்ப்ராஷ் என்பது ஆயுர்வேத மருத்துவத்தின் மிகத் தொன்மையான மருந்துகளில் ஒன்று. இந்நிலையில், பதஞ்சலி அதை அறிவியல் கண்டுபிடிப்பாக பட்டியலில் இணைத்துள்ளது ஏன், இந்த மருந்தின் பயன்கள் என்ன என்பது பற்றி விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன்.

ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன்
ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன்

``ஆயுர்வேத மருந்துகளில் மிகவும் முக்கியமான மருந்து சயவன்பிராஷ். மஹாபாரத காலத்தில் சயவன முனி என்பவர் இந்த லேகியத்தை உண்டு அவரது இளமையைத் திரும்ப பெற்றதால் இதற்கு சயவன்ப்ராஷ் என்ற பெயர் உண்டானது. இந்த மருந்து 2,000 வருடங்களுக்கு மேலாக புழக்கத்தில் உள்ளது. `சரக சம்ஹிதை' என்ற நூலில் இந்த மருந்தின் சூத்திரம் சொல்லப்பட்டிருக்கிறது. நெல்லிக்காயை முக்கிய மூலப்பொருளாகக் கொண்டு தேன், நல்லெண்ணெய், மூங்கில் உப்பு, திப்பிலி, நெய் போன்ற பல்வேறு பொருள்களைச் சேர்த்து இது தயாரிக்கப்படுகிறது

ஆயுர்வேதம் அக்காலத்தில் எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று ரசாயனம் என்கிற சிகிச்சை அங்கம். இந்த ரசாயனத் துறை என்பது வயது முதிர்வைத் தடுத்து நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து, நோய் வராமல் தடுக்கும் துறை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தத் துறையில் வேதிப்பொருள்கள்கள் அல்லாத ரசாயான மருந்தாக அதிகமாக சயவன்ப்ராஷ் பயன்படுத்தப்படுகிறது. தற்போது குறைந்த நோய் எதிர்ப்பு ஆற்றல் கொண்டுள்ள குழந்தைகளுக்கு இந்த மருந்து சிறந்த பயனளிக்கும்.

நோய் எதிர்ப்பு ஆற்றலுடன் சிந்தனைத் திறன், ஞாபகசக்தி போன்றவற்றுக்கும் அருமருந்தாகும். குழந்தைகளுக்கு சளி , இருமல், மூச்சுத்திணறல், உடல் இளைப்பு போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த பலனைக் கொடுக்கும். குழந்தைகள் மட்டுமன்றி அனைத்து வயதினரும் இந்த மருந்தை எடுத்துக்கொள்ளலாம். ஆயுர்வேத அல்லது சித்த மருத்துவரின் ஆலோசனையுடன் இந்த மருந்தை எடுத்துக்கொள்ளலாம்.

இரவு உறங்கும் முன்பு அவரவர் எடுத்துக்கொள்ள வேண்டிய அளவை மருத்துவரின் ஆலோசனையுடன் நிர்ணயித்து பாலுடனோ வெந்நீருடனோ கலந்து சாப்பிட்டு வந்தால் வயதுமுதிர்வைத் தடுக்க முடியும். எந்த வயதினராக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே இந்த மருந்தை உட்கொள்ள வேண்டும்" என்றார்.

Ayurvedic medicine (Representational Image)
Ayurvedic medicine (Representational Image)
Photo by Vicky Tran from Pexels

பதஞ்சலியின் அறிவியல் கண்டுபிடிப்பாக இது ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டதைப் பற்றி கேட்டதற்கு, ``இந்த லேகியம் பல நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது. அனைத்து நிறுவனங்களிலும் ஒரே மாதிரியான சூத்திரங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதால் எந்த ஒரு மாற்றமும் இருப்பதில்லை. பழங்காலத்திலுள்ள சயவன்ப்ராஷ் லேகியத்தின் சூத்திரங்களிலுள்ள மருந்துகளை ஒன்றிரண்டை, நிகழ்கால சூழ்நிலைகளுக்கேற்ப கூட்டியோ, குறைத்தோ இருக்கலாம். அதன் மூலம் அதை அறிவியல் கண்டுபிடிப்புப் பட்டியலில் இணைத்திருக்கலாம்" என்றார்.