Published:Updated:

`மெட்ராஸ் ஐ'யா? `கோவிட் ஐ'யா? - கண்கள் பத்திரம் - 1

Eyes (Representational Image) ( Pixabay )

கொரோனாவின் முதல் இரண்டு அலைகளிலும் சரி, இப்போது நடந்துகொண்டிருக்கும் மூன்றாவது அலையிலும் சரி, மெட்ராஸ் ஐ பாதிப்புகளை, கண் மருத்துவர்கள் அதிகம் பார்க்கிறோம். இந்தச் சூழலில் பரவுவதால் அதற்கு `கோவிட் ஐ' என்று புதிய பெயரும் சூட்டப்பட்டுள்ளது.

`மெட்ராஸ் ஐ'யா? `கோவிட் ஐ'யா? - கண்கள் பத்திரம் - 1

கொரோனாவின் முதல் இரண்டு அலைகளிலும் சரி, இப்போது நடந்துகொண்டிருக்கும் மூன்றாவது அலையிலும் சரி, மெட்ராஸ் ஐ பாதிப்புகளை, கண் மருத்துவர்கள் அதிகம் பார்க்கிறோம். இந்தச் சூழலில் பரவுவதால் அதற்கு `கோவிட் ஐ' என்று புதிய பெயரும் சூட்டப்பட்டுள்ளது.

Published:Updated:
Eyes (Representational Image) ( Pixabay )

ரஜினி பட டயலாக் மாதிரி ஆகிவிட்டது கொரோனா... அது எப்போது வரும், எப்படி வரும், யாருக்கு வரும் என்றே கணிக்க முடிவதில்லை. வந்தாலோ விஜய் பட பாடல் மாதிரி `டிசைன் டிசைனா பிராப்ளம்ஸ் வில் கம் அண்டு கோ...' என்கிற மாதிரி ஆளாளுக்கு ஒவ்வொருவிதமான பிரச்னையை, அறிகுறியைக் கொடுத்துப் படுத்தி எடுக்கிறது.

தலை முதல் பாதம் வரையிலான கொரோனாவின் பாதிப்புகளை பெரிய லிஸ்ட்டே போடலாம். அவற்றில் முக்கியமானது கண்கள் தொடர்பான பாதிப்பு. அதாவது, கோவிட் ஆப்தல்மோபதி (Covid ophthalmopathy)

ophthal என்றால் கண் சம்பந்தப்பட்ட, pathy என்றால் நோயியல். கண்களில் ஏற்படும் பிரச்னைகளைக் குறிக்கும் வார்த்தை இது. கோவிட் காலத்தில் ஏற்படுகிற கண் பாதிப்புகளைக் குறிப்பதே `கோவிட் ஆப்தல்மோபதி'. கோவிட் காலத்தில் அதிகரித்துள்ள கண் பாதிப்புகள், காரணங்கள், தீர்வுகள் போன்றவற்றை வாரம்தோறும் விளக்கவிருக்கிறார், சென்னையைச் சேர்ந்த, விழித்திரை சிகிச்சை சிறப்பு மருத்துவர் வசுமதி வேதாந்தம்.

சிறப்பு மருத்துவர் வசுமதி வேதாந்தம்
சிறப்பு மருத்துவர் வசுமதி வேதாந்தம்

``கோவிட் காலத்தில் ஏதேதோ உடல்நல பாதிப்புகள் பற்றிக் கேள்விப்படுகிறோம். அவற்றில் பலருக்கும் தெரியாதவை கண் தொடர்பான பிரச்னைகள். குறிப்பாக, கன்ஜங்க்டிவிட்டிஸ் (conjunctivitis). கோவிட் ஆரம்பித்த காலத்திலிருந்து நிறைய பேர் கண்கள் சிவக்க, வீக்கத்துடன் மருத்துவமனைக்கு வர ஆரம்பித்ததை மருத்துவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், அதை கன்ஜங்க்டிவிட்டிஸ் (conjunctivitis) என உறுதிசெய்து சிகிச்சைகளைப் பரிந்துரைத்தார்கள்.

அதென்ன கன்ஜங்க்டிவிட்டிஸ்..? எல்லோருக்கும் புரிகிற மாதிரி சொல்வதென்றால் மெட்ராஸ் ஐ' எனப்படும் கண்வலி. அதற்கு `பிங்க் ஐ' என்றும் இன்னொரு பெயர் உண்டு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`ஏற்கெனவே கொரோனா பரவிட்டிருக்கு... இந்த நிலைமையில மெட்ராஸ் ஐ வேற சேர்ந்துக்கணுமா...' என்ற புலம்பலைப் பரவலாகக் கேட்க முடிந்தது. ஆனால், அப்படிப் புலம்பிய பலருக்கும் மெட்ராஸ் ஐ எனப்படும் கண்வலிக்கு காரணமே கொரோனா தொற்றுதான் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சீனாவில் கண்டறியப்பட்ட முதல் கோவிட் தொற்றாளருக்கு இந்த கன்ஜங்க்டிவிட்டிஸ்தான் பிரதான அறிகுறியாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. கொரோனாவின் முதல் இரண்டு அலைகளிலும் சரி, இப்போது நடந்துகொண்டிருக்கும் மூன்றாவது அலையிலும் சரி, மெட்ராஸ் ஐ பாதிப்புகளை, கண் மருத்துவர்கள் அதிகம் பார்க்கிறோம். இந்தச் சூழலில் பரவுவதால் அதற்கு `கோவிட் ஐ' என்று புதிய பெயரும் சூட்டப்பட்டுள்ளது. கண்வலியாக ஆரம்பிக்கிற அறிகுறி, சில நாள்கள் கழித்து சிலருக்கு ஜலதோஷமாகவும் வெளிப்படுகிறது. ஏனெனில், கண்ணின் `மியூகஸ் மெம்ப்ரேன்' (mucous membrane) எனப்படும் சளி சவ்வு, மூக்கின் சளி சவ்வு மற்றும் தொண்டையின் சளி சவ்வு எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. கண்களுக்கும் மூக்குக்கும் இடையே ஒரு குழாய் இருக்கிறது. எனவே, சளிப்பிடித்தால், அங்கிருந்துகூட அந்த வைரஸ் கண்களுக்குப் பரவி பாதிக்கலாம். சாதாரணமாக மெட்ராஸ் ஐ எனச் சொல்லிக்கொண்டு வரும் பலரும் சில நாள்கள் கழித்து, காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார்கள். அந்நிலையில், கொரோனாவுக்கான ஆர்டிபிசிஆர் டெஸ்ட் செய்தால் பாசிட்டிவ் என்று வருவதைப் பார்க்கிறோம். காய்ச்சலே இல்லாத நிலையிலும்கூட சிலருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகியிருக்கிறது.

Eye testing (Representational Image)
Eye testing (Representational Image)
Photo: Pixabay

ஆறுதலான ஒரு விஷயம்... கொரோனாவை ஏற்படுத்திய கன்ஜங்க்டிவிட்டிஸ் பிரச்னைக்கு நல்ல சிகிச்சைகள் உண்டு. எனவே கண்கள் சிவந்தால், அது ஒரு கண்ணோ, இரண்டு கண்களோ... உடனடியாகக் கண் மருத்துவரை அணுகுங்கள். கண் மருத்துவர்கள் 'ஸ்லிட் லாம்ப் (Slit-Lamp) என்ற மெஷினில் பார்ப்பார்கள். நீங்களாக சுயமருத்துவம் செய்துகொள்ளாதீர்கள். இப்போதெல்லாம் கருவிழி பாதிப்பும் அதிகம் வருகிறது. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை மருத்துவர் சொன்ன பிறகுதான் நிறுத்த வேண்டும்.

அறிகுறிகள் எப்படியிருக்கும்?

கோவிட் தொற்றாளர்களில் 1 - 3 சதவிகிதம் பேருக்கு கன்ஜங்டிவிட்டிஸ் அல்லது பிங்க் ஐ பாதிப்பு இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. கண்களின் வெள்ளைப் பகுதியையும், இமைகளின் உற்புறத்தையும் மூடும் கன்ஜங்டிவ்வா என்கிற திசுவை வைரஸ் பாதிப்பதாலேயே இந்தப் பிரச்னை வருகிறது. கீழ்க்காணும் அறிகுறிகளை வைத்து கன்ஜங்டிவிட்டிஸ் பாதிப்பை அறியலாம்.

- கண்கள் சிவந்திருத்தல்

- வீங்கியிருத்தல்

- அரிப்பு

- கண்களில் வலி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கண்வலி என்றால் கொரோனாதானா?

இந்த அறிகுறிகளுடன் உங்களுக்கு கன்ஜங்டிவிட்டிஸ் இருப்பது உறுதியானால் உங்களுக்கு நிச்சயம் கோவிட் தொற்றும் இருக்கும் என அர்த்தமில்லை. கொரோனா தொற்றும் இருக்கலாம் என்றாலும் வேறுவிதமான வைரஸ், பாக்டீரியா தொற்றுகளோ, அலர்ஜியோகூட காரணங்களாகலாம். கன்ஜங்டிவிட்டிஸ் பாதிப்பானது அதிகபட்சமாக ஒன்றிரண்டு வாரங்களில் சரியாகிவிடும். கன்ஜங்டிவிட்டிஸ் அறிகுறிகளோடு காய்ச்சல், இருமல், மூச்சுவிடுதலில் சிரமம் போன்றவை இருந்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

Eyes (Representational Image)
Eyes (Representational Image)
pixabay

கோவிட் தொற்றின் காரணமாக ஒருவருக்கு கன்ஜங்டிவிட்டிஸ் பாதித்திருந்தால், அந்த நபர் தன் கண்களைத் தொட்டுவிட்டு, மற்ற நபர்களைத் தொட்டாலோ, பரப்புகளைத் தொட்டாலோ அவர்களுக்கும் அந்தத் தொற்று பரவும். எனவே, இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் முகத்தை, வாயை, மூக்கை, கண்களைத் தொடாமலிருப்பது பாதுகாப்பானது.

கண்களையும் கவனியுங்கள்

அடிக்கடி கைகளைக் கழுவுவது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவதைப் போலவே கோவிட் காலத்தில் கண்களுக்கும் பாதுகாப்பு தேவை.

கொரோனா காலத்தில் கான்டாக்ட் லென்ஸ் அணிவது பாதுகாப்பானதா என்று நிறைய பேர் கேட்கிறார்கள். கண்ணாடி அணிவதுதான் பாதுகாப்பானதா, லென்ஸை தவிர்க்க வேண்டுமா என்கிறார்கள். லென்ஸை அணிவதற்கு முன் கைகளை நன்கு கழுவ வேண்டும். அதேபோல லென்ஸை அகற்றுவதற்கு முன்பும் கைகளைக் கழுவ வேண்டும். கண்ணாடி, லென்ஸ் இரண்டுமே பாதுகாப்பானவைதான்.

நீங்கள் கண்ணாடி அணிகிறவர் என்றால் கூடியவரை அதைக் கழற்ற வேண்டாம். வாகனம் ஓட்டும்போதும், பயணத்தின்போதும் சன் கிளாஸ் அணியலாம். தொற்றுக்குள்ளானவர்களுடன் இருக்கும்போது பாதுகாப்புக் கண்ணாடிகளை அணிவதும் ஓகே.

அடிக்கடி கண்களைக் கசக்க வேண்டாம்.

- பார்ப்போம்...

- ராஜலட்சுமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism