Published:Updated:

Doctor Vikatan: ஒமிக்ரானைத் தொடர்ந்து இப்போது ஃப்ளோரோனா; இது என்ன புதிதாக?

Covid ( AP Illustration/Peter Hamlin )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: ஒமிக்ரானைத் தொடர்ந்து இப்போது ஃப்ளோரோனா; இது என்ன புதிதாக?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:
Covid ( AP Illustration/Peter Hamlin )

ஃப்ளோரோனா என்ற பெயரில் புதிய கோவிட் வைரஸ் பரவுவதாக ஒரு செய்தி படித்தேன். இது டெல்டா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தொற்றுகளைவிட வீரியமானதா, எல்லோரையும் பாதிக்குமா?

- ராஜதுரை (விகடன் இணையத்திலிருந்து)

தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூர்
தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூர்

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் அப்துல் கஃபூர்.

``ஃப்ளோரோனா (Florona) என்பது பலரும் பயப்படும்படியான வைரஸ் இல்லை. இது நீங்கள் நினைக்கிற மாதிரி, கொரோனா வைரஸின் உருமாற்றமும் இல்லை. ஃப்ளோரோனா என்பது, ஒரு நபர், ஒரே நேரத்தில் ஃப்ளூ தொற்று மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலை.

இஸ்ரேலில் ஃப்ளோரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரே நேரத்தில் இந்த இரண்டு தொற்றுகளும் ஏற்பட்டிருக்கின்றன. இப்படி ஒரு நபரை ஒரே நேரத்தில் இரண்டு வைரஸ் தொற்றுவது அசாதாரணமான விஷயமே இல்லை. இந்த இரண்டுமே, ஒரே மாதிரியான வழிகளில் பரவக்கூடியவை.

Corona Virus  - Representational Image
Corona Virus - Representational Image
Pixabay

இரண்டுமே சுவாசப்பாதைத் தொற்றுகள். ஒருவேளை இப்படி இரண்டு வைரஸ் தொற்றுகளை ஒரு நபர் எதிர்கொண்டால், அவரின் மருத்துவர் அவருக்கான சிகிச்சைகளப் பரிந்துரைப்பார். கோவிட் டெஸ்ட் நெகட்டிவ் என்று வந்தால், சம்பந்தப்பட்ட நபருக்கு அடுத்து ஃப்ளூ டெஸ்ட் செய்ய வேண்டுமா என்று சொல்வார். மற்றபடி இதுகுறித்து மக்கள் பயப்படத் தேவையில்லை."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?