Published:Updated:

Grief Therapy: கொரோனாவில் உறவுகளை இழந்தவர்களை ஆற்றுப்படுத்தும் துக்க சிகிச்சை; எப்படி வழங்கப்படும்?

Representational Image ( Photo by christopher catbagan on Unsplash )

``இந்த கொரோனா நேரத்தில் வாழ வேண்டிய வயதிலிருந்த பலர் இறந்திருப்பதால், அவர்களுடைய குடும்பத்தினரை அந்தத் துக்கத்திலிருந்து மீட்டெடுக்க `துக்க சிகிச்சை’ கொடுப்பது மிக மிக அவசியம்" - உளவியல் ஆலோசகர் கெளரி கிருஷ்ணமூர்த்தி

Grief Therapy: கொரோனாவில் உறவுகளை இழந்தவர்களை ஆற்றுப்படுத்தும் துக்க சிகிச்சை; எப்படி வழங்கப்படும்?

``இந்த கொரோனா நேரத்தில் வாழ வேண்டிய வயதிலிருந்த பலர் இறந்திருப்பதால், அவர்களுடைய குடும்பத்தினரை அந்தத் துக்கத்திலிருந்து மீட்டெடுக்க `துக்க சிகிச்சை’ கொடுப்பது மிக மிக அவசியம்" - உளவியல் ஆலோசகர் கெளரி கிருஷ்ணமூர்த்தி

Published:Updated:
Representational Image ( Photo by christopher catbagan on Unsplash )

``அமெரிக்கா அளவுக்கு கொரோனா முதல் அலை இந்தியாவில் அத்தனை உயிர்பலி வாங்கவில்லை. ஆனால், இரண்டாவது அலை, வயது வித்தியாசமில்லாமல் பலரை பலி கொண்டுவிட்டது. கொரோனாவின் கோரப்பிடியில் கர்ப்பிணிகள், குழந்தைகள்கூட சிக்கிக்கொண்டார்கள். சொந்த வீட்டில், சொந்தக்காரர்களின் வீடுகளில், நண்பர்களின் மற்றும் அக்கம்பக்கத்தினர் வீடுகளில் என கோவிட் தொற்று மரணங்களை வெகு அருகில் சந்தித்து விட்டோம். எல்லாமே எதிர்பாராத மரணங்கள். இந்தப் பெருந்தொற்றுக் காலம் நமக்கெல்லாம் பெருந்துயராகிவிட்டது. இந்தத் துயரை கிரீஃப் தெரபி (grief therapy) என்கிற துக்க சிகிச்சை மூலம் சிறிது சிறிதாகக் கடக்கலாம்’’ என்கிற உளவியல் ஆலோசகர் கெளரி கிருஷ்ணமூர்த்தியிடம், அதுகுறித்து உரையாடினோம்.

உளவியல் ஆலோசகர் கெளரி கிருஷ்ணமூர்த்தி
உளவியல் ஆலோசகர் கெளரி கிருஷ்ணமூர்த்தி

``தற்போதைய கோவிட் காலத்தில் மட்டுமல்ல, எல்லா காலத்திலும் பிரியமானவர்களை இழப்பது மிகப்பெரிய வலிதான். அதுவாகக் குறைகிற வரைக்கும் அந்த வலியைத் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால், இந்த கொரோனா நேரத்தில் வாழ வேண்டிய வயதிலிருந்த பலர் இறந்திருப்பதால், அவர்களுடைய குடும்பத்தினரை அந்தத் துக்கத்திலிருந்து மீட்டெடுக்க `துக்க சிகிச்சை’ கொடுப்பது மிக மிக அவசியம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

துக்கத்தில் 5 நிலைகள் இருக்கின்றன. `எனக்கு ஏன் இப்படி நடந்துச்சு’ என்று ஆத்திரப்படுவார்கள். இது இழப்பு நடந்த புதிதிலிருக்கிற மனநிலை. இதை ஆங்கர் (Anger) என்போம்.

சில நாள்கள் அல்லது வாரங்கள் கழித்து, நடந்த இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பார்கள். இது இரண்டாம் நிலை. இதை டினையல் (Denial) என்போம்.

மூன்றாவது நிலையான பார்கெயினிங்கில் (Bargaining) சில நேரம் இழப்பை ஏற்றுக் கொள்வார்கள்; சில நேரம் இது எப்படி எனக்கு நடக்கலாம் என்று சஞ்சலப்படுவார்கள்.

நான்காவது டிப்ரெஷன் (Depression) என்னும் நிலை. இந்த நிலையில் `போனவங்க இனிமே வரவே மாட்டாங்க’ என்பது அறிவுக்குப் புரிந்துவிடும். அதனால், மனச்சோர்வுக்கு ஆளாவார்கள்.

ஐந்தாவது நிலையில், நடந்ததை ஏற்றுக்கொள்கிற மனநிலைக்கு வந்துவிடுவார்கள். இதை நாங்கள் அக்செப்ட்டன்ஸ் (Acceptance) என்போம். பாதிக்கப்பட்டவர்கள் இந்த நிலைகளை படிப்படியாகக் கடந்துதான் துக்கத்திலிருந்து மீண்டு வர முடியும். இதற்கு உளவியல் ஆலோசகர்களான நாங்கள் கவுன்சலிங் கொடுத்து அவர்களை மீட்டுக் கொண்டு வருவோம்’’ என்றவர், `துக்க சிகிச்சை’ செய்முறையை விவரிக்க ஆரம்பித்தார்.

India Covid Outbreak
India Covid Outbreak
AP Photo / Channi Anand

துக்கத்தில் இருப்பவர்களின் உணர்வுகளை மதிப்போம். அவர்கள் இறந்தவர்களைப் பற்றிப் பேசிக்கொண்டே இருப்பார்கள். அதைக் காதுகொடுத்துக் கேட்போம். மூன்றாவது நிலையான பார்கெயினிங்கில் கொஞ்சம் ஏற்றுக்கொள்வார்கள்; மறுபடியும் துக்கத்துக்குள் சென்று விடுவார்கள். இந்த நிலையில், அவரவருக்கேற்ப சிகிச்சைகளைச் செய்ய ஆரம்பிப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரியமானவர்களை இழந்த துக்கம் மறக்கக்கூடியதோ, மறக்க வேண்டியதோ அல்ல. 10 வருடங்கள் கழிந்தபிறகும் இறந்தவரை நினைத்தால் கண்ணீர் வழியத்தான் செய்யும். இதுதான் மனித இயல்பு. சில வீடுகளில் இறந்த குழந்தையின் துக்கத்தில் இருக்கிற குழந்தையை விட்டுவிடுவார்கள். இது அவர்களுடைய ஆழ்மனதுக்குப் புரியுமென்றாலும் தன்னையறியாமல் கவனிக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு இறந்தவர்களின் நினைவுகள் அவர்களை ஆக்கிரமித்திருக்கும். அவருடைய இந்த நிலையை அவருக்குப் புரிய வைப்போம்.

சிலர், இறந்தவர்களிடம் ஏதாவது பேச விருப்பப்பட்டிருப்பார்கள். `அப்புறம் பேசலாம்’ என்று தள்ளிப்போட்டுக்கொண்டே வந்திருப்பார்கள். கடைசியில் அது முடியாமலே போயிருக்கும். இவர்களுக்கு இறந்தவர்களுடன் மானசீகமாகப் பேச உதவி செய்வோம். இது, சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகப்பெரிய நிம்மதியைக் கொடுக்கும்.

பெருந்தொற்று தந்த பெருந்துயரம்
பெருந்தொற்று தந்த பெருந்துயரம்

இன்னும் சிலர் குற்றவுணர்ச்சியில் தவித்துக்கொண்டிருப்பார்கள். `அய்யோ கடைசி நேரத்துல நான் பக்கத்துல இல்லாம போயிட்டேனே’, `அந்த நேரம் பார்த்து வெளியே கிளம்பிப் போயிட்டேனே’, `நல்லா இருந்தார்னுதானே நினைச்சேன்’ என்று மருகுவார்கள். `தான் கவனிக்காம விட்டதாலதான் இறந்துட்டார்’ என்று தவிக்கிற அவர்களுடைய குற்றவுணர்ச்சியைப் போக்கி, பிறப்பும் இறப்பும் நம்முடைய கைகளில் இல்லையென்று புரிய வைப்போம். இப்படியே பாதிக்கப்பட்டவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக மீட்டு, வழக்கமான வாழ்க்கைக்குத் தயார்படுத்தி விடுவோம்’’ என்கிறார் கெளரி கிருஷ்ணமூர்த்தி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism