Published:Updated:

கொரோனாவிலிருந்து மீண்ட குழந்தைகளை அதிக்கும் பாதிக்கும் மிஸ்க் நோய்; அறிகுறிகள் என்னென்ன?

Kid (Representational Image)
Kid (Representational Image) ( from Pixabay )

மிஸ்க் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதுபற்றி மருத்துவ விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். சில குழந்தைகள் மட்டும் ஏன் மிஸ்க் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர் என்பதற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

எஸ்.சங்கீதா

மூன்றாவது அலை பற்றி நாம் யோசித்துக்கொண்டிருக்கிறோம். கேரளாவிலோ கொரோனாவின் இரண்டாவது அலையே இன்னமும் தீவிரமாக இருக்கிறது. இப்போது ஒவ்வொரு நாளும் 30,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகிறார்கள்.

இது போதாதென்று கேரளாவில் `மிஸ்க்’ (மல்டிசிஸ்டம் இன்ஃப்ளமேட்டரி சிண்ட்ரோம் இன் சில்ட்ரன்) என்ற நோயும் வேகமாகப் பரவி வருகிறது. பெரும்பாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 வயதுக்கு குறைவான குழந்தைகளைத்தான் இந்த நோய் தாக்குகிறது. கடந்த ஒன்றரை வருடத்தில் முன்னூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை இந்த நோய் பாதித்துள்ளது. இதுவரை நான்கு குழந்தைகள் மரணம் அடைந்துள்ளனர். மிஸ்க் நோய் பாதித்த குழந்தைகளில் 95 சதவிகிதம் பேரும் கொரோனா பாதித்தவர்களே.

Girl wearing mask
Girl wearing mask
AP / Mahesh Kumar A
மூன்றாம் அலை அச்சம்: குழந்தைகளின் எதிர்ப்பாற்றலை எப்படி அதிகப்படுத்தலாம்? வழிகாட்டும் ஆயுர்வேதம்!

கொரோனா பாதித்த 18 வயதுக்கும் குறைவான குழந்தைகளில் சிலரை 3 முதல் 4 வாரங்களில் மிஸ்க் நோய் பாதிக்கிறது. இந்த நோயின் முக்கிய அறிகுறி கடுமையான காய்ச்சல். சருமத்தில் சிவந்த நிறத்தில் தடிப்புகள் ஏற்படும். `மெட்ராஸ் ஐ' போலவே கண்களில் சிவப்பு நிறம், வாய்க்குள் தடித்தல், ரத்த அழுத்தம் குறைவது போன்ற அறிகுறிகள் வெளிப்படும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் மிஸ்க் என்பது இதயம், நுரையீரல், சிறுநீரகம், மூளை, சருமம், கண்கள், இரைப்பை உட்பட பல்வேறு உடல் பாகங்கள் வீக்கமடையக்கூடிய ஒரு நிலை. மிஸ்க்குக்கு என்ன காரணம் என்று இன்னும் பூரணமாகத் தெரியாது. எனினும், மிஸ்க் உள்ள பல குழந்தைகளுக்கு கோவிட் -19 வைரஸ் இருந்தது அல்லது கோவிட் -19 தொற்றுக்கு ஆளான ஒருவருடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது. மிஸ்க் பிரச்னை மிகத் தீவிரமானது, கொடியது என்றாலும்கூட, பெரும்பாலான குழந்தைகள் மருத்துவ சிகிச்சைமூலம் நலமடைந்துவிட்டனர்.

மூன்றாம் அலை அச்சம், பள்ளிகள் திறப்பு; நமக்கான பொறுப்புகள் என்ன? - விளக்கும் மருத்துவர்கள்

அறிகுறிகள் என்னென்ன?

* காய்ச்சல்

* வயிற்று வலி

* சிவந்த கண்கள்

* மார்பு இறுக்கம்/வலி

* வயிற்றுப்போக்கு

* கூடுதல் சோர்வாக உணர்தல்

* தலைவலி

* குறைந்த ரத்த அழுத்தம்

* கழுத்து வலி

* சொறி

* வாந்தி

எல்லா குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எப்போது அவசர சிகிச்சை பெற வேண்டும்?

இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாடுங்கள்:

* மூச்சு விடுவதில் சிரமம்

* மார்பில் தொடர்ச்சியான வலி அல்லது அழுத்தம்

* குழப்பமாக உணர்தல்

* எழுந்திருக்கவோ, விழித்திருக்கவோ இயலாமை

* சருமம் வெளிர், சாம்பல் அல்லது நீல நிறத்தில் மாறுதல்,

Covid Questions: ஒரு வருடத்திற்கும் மேலாக சானிட்டைசர் பயன்படுத்துகிறேன்; எனக்கு சரும பாதிப்பு வருமா?

மருத்துவர்கள் மிஸ்க் பாதிப்புக்குள்ளான குழந்தையை எப்படி கவனிப்பார்கள்?

* வீக்கம் அல்லது நோயின் பிற அறிகுறிகளைக் கண்டறிய மருத்துவர்கள் சில சோதனைகளைச் செய்வார்கள்.

* ரத்தப் பரிசோதனைகள்

* மார்பு எக்ஸ்ரே

* இதய அல்ட்ரா சவுண்ட் (எக்கோ கார்டியோகிராம்)

* வயிற்று அல்ட்ரா சவுண்ட்

* அறிகுறிகளுக்கு ஏற்ப மருந்துகளை அளிப்பார்கள்.

* வீக்கத்துக்கு சிகிச்சையளிக்க பல்வேறு மருந்துகளைப் பயன்படுத்துவார்கள்.

* மிஸ்க் நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்.

* சில குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) சிகிச்சை அளிக்க வேண்டும்.

மிஸ்க் பற்றி நமக்குத் தெரியாதவை

மிஸ்க் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதுபற்றி மருத்துவ விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். சில குழந்தைகள் மட்டும் ஏன் மிஸ்க் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர் என்பதற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. குறிப்பிட்ட சில உடல்நலக் கோளாறுகள் உள்ள குழந்தைகளுக்கு மிஸ்க் பாதிப்பு ஏற்படுமா என்பதும் இதுவரை அறியப்படவில்லை.

அடுத்த கட்டுரைக்கு