Published:Updated:

Covid Questions: கொரோனாவிலிருந்து மீண்டுள்ளேன்; என் ஆரோக்கியத்தை மீட்க என்ன டயட் பின்பற்றலாம்?

பழங்கள் ( Image by silviarita from Pixabay )

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

Covid Questions: கொரோனாவிலிருந்து மீண்டுள்ளேன்; என் ஆரோக்கியத்தை மீட்க என்ன டயட் பின்பற்றலாம்?

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

Published:Updated:
பழங்கள் ( Image by silviarita from Pixabay )

கொரோனாவிலிருந்து குணமாகி இப்போதுதான் வீடு திரும்பியிருக்கிறேன். என் டயட்டை மாற்றியமைப்பதன் மூலம் மீண்டும் பழைய புத்துணர்ச்சியைப் பெற முடியுமா? மீண்டும் முழு ஆரோக்கியம் பெற என் டயட்டில் என்ன மாற்றங்களைச் செய்யலாம்?

- கலையரசன் (விகடன் இணையத்திலிருந்து)

ஸ்ரீமதி வெங்கட்ராமன்
ஸ்ரீமதி வெங்கட்ராமன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.

``இப்போதுதான் கொரோனாவிலிருந்து மீண்டிருக்கிறீர்கள். உடல் சோர்வு, அசதி, வாயில் கசப்புத்தன்மை, சுவை மற்றும் வாசனையை உணர முடியாதது போன்ற பிரச்னைகள் இருக்கலாம். சுவையும் மணமும் இல்லாததால் நீங்கள் உட்கொள்ளும் உணவின் அளவும் குறையும். புரதச்சத்துள்ள பருப்பு வகைகள், முழு பருப்பு வகைகளைச் சேர்ந்த கொண்டைக்கடலை, பட்டாணி, ராஜ்மா போன்றவற்றை சுண்டலாகச் செய்து மதிய உணவின் போது எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் உடல் எடையை பேலன்ஸ் செய்யவும், தசையிழப்பு ஏற்படாமலும் பார்த்துக்கொள்ள முடியும். இரவில் எளிதில் ஜீரணமாகக்கூடிய, ஆவியில் வேகவைத்த அல்லது நன்கு வேகவைத்த இட்லி, இடியாப்பம், பொங்கல், கிச்சடி போன்றவற்றைச் சாப்பிடலாம். வைட்டமின் சி சத்து நிரம்பிய நெல்லிக்காய், ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யா போன்றவற்றைச் சாப்பிடுவதன் மூலம் தலைவலி மற்றும் சோர்விலிருந்து விடுபடலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

துளசி, உலர்ந்த திராட்சை, சுக்கு, நெல்லிக்காய் சேர்த்துக் கொதிக்கவைத்த நீர் குடிக்கலாம். இரண்டு, மூன்று பழங்கள் சேர்த்து அரைத்து, அதை வடிகட்டாமல் ஸ்மூத்தி போன்று குடிக்கலாம். இதன் மூலம் உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மோர், மஞ்சள்தூள் சேர்த்த பால், புழுங்கலரிசி கஞ்சி, ராகி கஞ்சி போன்றவற்றை உணவு இடைவேளையில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம். திரவ உணவுகள் எளிதில் செரிமானமாகும். தவிர நோயிலிருந்து மீண்ட நிலையில் நீங்கள் குறைவாக உணவு எடுத்துக்கொள்வதையும் இந்த உணவுகள் ஈடுகட்டும்.

Chicken (Representational Image)
Chicken (Representational Image)
Photo by Karolina Grabowska from Pexels

முட்டை, சிக்கன் சூப், வேகவைத்த, மசாலா சேர்க்காத சிக்கன் மற்றும் வேகவைத்த அல்லது க்ரில் செய்யப்பட்ட மீன் ஆகியவற்றை வாரத்தில் மூன்று நாள்கள் சேர்த்துக்கொள்ளலாம். வைட்டமின்கள் நிறைந்த பழங்கள், நன்கு வேகவைத்த காய்கறிகளை நிறைய சேர்த்துக் கொள்ளவும். இப்படி உங்கள் உணவுமுறையை மாற்றிக்கொண்டால், சோர்வும் பலவீனமும் நீங்கிப் புத்துணர்வு திரும்பும்."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism