Published:Updated:

`கொரோனா டெஸ்ட்டில் ஃபால்ஸ் நெகட்டிவ் என்று வந்தால் மறுபரிசோதனை அவசியம்!'- காரணம் பகிரும் மருத்துவர்

கொரோனா டெஸ்ட்
News
கொரோனா டெஸ்ட்

"நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்று எப்படி அறிந்து கொள்வது என்று விகடன் வாசகர் ரிஷி கேட்டிருக்கும் கேள்விக்குப் பதிலளிக்கிறார் சமூகநல மருத்துவர் ஜே.கிருஷ்ணகுமார்.

Published:Updated:

`கொரோனா டெஸ்ட்டில் ஃபால்ஸ் நெகட்டிவ் என்று வந்தால் மறுபரிசோதனை அவசியம்!'- காரணம் பகிரும் மருத்துவர்

"நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்று எப்படி அறிந்து கொள்வது என்று விகடன் வாசகர் ரிஷி கேட்டிருக்கும் கேள்விக்குப் பதிலளிக்கிறார் சமூகநல மருத்துவர் ஜே.கிருஷ்ணகுமார்.

கொரோனா டெஸ்ட்
News
கொரோனா டெஸ்ட்

`நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்று எப்படி அறிந்துகொள்வது?' என்று விகடன் வாசகர் ரிஷி கேட்டிருக்கும் கேள்விக்குப் பதிலளிக்கிறார் சமூகநல மருத்துவர் ஜே.கிருஷ்ணகுமார்.

 Rapid Test
Rapid Test

``காய்ச்சல், வறட்டு இருமல், மூச்சிரைத்தல், உடல்வலி, வாசனை உணரும் தன்மை குறைதல் போன்றவை கொரோனாவின் பிரதான அறிகுறிகள். இந்த அறிகுறிகள் இருப்பவர்கள், கொரோனா தொற்றுக்கான பரிசோதனையை மேற்கொள்ளலாம். வெளிநாட்டவரின் தொடர்பில் இருந்தவர்கள், வெளிமாநிலங்களுக்கு, வெளிநாட்டிற்கு பயணம் செய்தவர்கள் ஆகியோர் அறிகுறிகள் இல்லாவிட்டாலும் பரிசோதனை செய்து பார்க்கலாம். அதிவிரைவு பரிசோதனையான ரேபிட் ஆன்டிபாடி டெஸ்ட், PCR பரிசோதனை ஆகியன செய்யலாம். இந்தப் பரிசோதனைகள் முடிவில் உங்களுக்குத் தொற்று இருக்கிறதா, இல்லையா... என்று தெரிந்துவிடும்.

விண்டோ பீரியட் (Window period) என்று கூறப்படும் தொற்று ஏற்பட்ட நான்கு முதல் ஏழு நாள்களில் பரிசோதனை முடிவுகள் false negative, அதாவது தொற்று இருந்தும், தொற்று இல்லாததுபோல் முடிவுகள் வரும். காரணம் எதிர்ப்புரதம் (Antigen) அப்போது உருவாகியிருக்காது. அவ்வாறு இருப்பவர்கள் மீண்டும் ஒரு வாரம் கழித்து மறுபரிசோதனை செய்து தொற்று பாதிப்பை உறுதிசெய்ய வேண்டும்.

ஜே. கிருஷ்ணகுமார்
ஜே. கிருஷ்ணகுமார்

அறிகுறிகள் உள்ளவர்கள், பாதிக்கப்பட்டவர்களுடன் மற்றும் வெளிநாட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், பயணம் மேற்கொண்டவர்கள் தங்களைப் பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ளலாம். மற்றபடி அறிகுறி இல்லாத பொதுமக்கள் பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய அவசியமில்லை'' என்று கூறினார்.