Published:Updated:

Doctor Vikatan: S gene-க்கும் ஒமிக்ரான் தொற்றுக்கும் என்ன தொடர்பு?

Covid
News
Covid ( AP Illustration/Peter Hamlin )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

எஸ் ஜீன் குறைபாடு என்றால் என்ன? இது எதைக் குறிக்கிறது? இது எப்படி கண்டறியப்படுகிறது? இதை வைத்துதான் ஒமிக்ரான் தொற்று உறுதிசெய்யப்படுமா?

- விஷ்ணு (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் அஷ்வின் கருப்பன்
மருத்துவர் அஷ்வின் கருப்பன்

பதில் அளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் அஷ்வின் கருப்பன்.

``ஒமிக்ரான் (B.1.1.529) என்பது பலவகையான திரிபுகளைக் கொண்ட கொரோனா வைரஸ். ஆர்டிபிசிஆர் சோதனையில் ஜீன் சீக்வென்சிங்கை அதாவது e ஜீன், n ஜீன், rdrp ஜீன் மற்றும் s ஜீன் ஆகியவற்றைப் பரிசோதிப்போம். இவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் கொரோனா பாசிட்டிவ் என்பது தெரியவரும். ஆனால் ஒமிக்ரான் பாசிட்டிவ்வா, இல்லையா என்பதைப் பார்க்க முடியாது. ஒமிக்ரான் வைரஸ் ஒருவரைத் தாக்கியிருந்தால் s ஜீன் என்பது இருக்காது. அதாவது அதை s ஜீன் டிராப் அவுட் (S gene dropout) அல்லது s ஜீன் டார்கெட் ஃபெயிலியர் (S gene target failure) என்று சொல்வோம். அந்த நிலை ஒமிக்ரானாக இருக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த s ஜீனைக் கண்டறியக்கூடிய ஆர்டிபிசிஆர் டெஸ்ட் கிட்டை பரிசோதனைக்கூடங்கள் பயன்படுத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

s ஜீன் டிராப் அவுட் அல்லது டார்கெட் ஃபெயிலியர் இருக்கிறதா என்பதை சீக்வென்சிங் செய்வதற்கு முன்னரே கண்டுபிடிக்க முடியும். ஆனால், சீக்வென்ஸ் செய்தால் மட்டுமே அது ஒமிக்ரானா இல்லையா என்று கண்டுபிடிக்க முடியும். அதைச் சாதாரண பரிசோதனைக்கூடங்களில் செய்ய முடியாது. ஜெனடிக்கல் சீக்வென்சிங் செய்யும் வசதியுள்ள பரிசோதனைக்கூடங்களில் மட்டுமே செய்ய முடியும். அரசு மட்டுமே அதைச் செய்ய முடியும்.

A health worker takes a nasal swab sample to test for COVID-19 in Hyderabad, India
A health worker takes a nasal swab sample to test for COVID-19 in Hyderabad, India
Mahesh Kumar A

தற்போதுள்ள நிலவரப்படி ஒருவர் ஆர்டிபிசிஆர் டெஸ்ட் செய்திருந்தால் அதில் கோவிட் பாசிட்டிவ்வா அல்லது நெகட்டிவ்வா என்று மட்டும்தான் சொல்வார்கள். s ஜீனைக் கண்டறியும் ஆர்டிபிசிஆர் கிட்டை பயன்படுத்தி டெஸ்ட் செய்யும்போது அதில் s ஜீன் டிராப்அவுட் இருப்பது தெரியவந்தால், அதை ஜெனட்டிகல் சீக்வென்சிங் சோதனைக்கு அனுப்புமாறு அரசு வலியுறுத்துகிறது. அதைச் செய்தால்தான் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு இருக்கிறதா இல்லையா என்பது உறுதிசெய்யப்படும்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?