Published:Updated:

Doctor Vikatan: அக்குள் மற்றும் பாதங்களில் கறுப்புத் தேமல்; குணமாக என்ன வழி?

Representational Image ( Photo by Srinivas Reddy on Unsplash )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: அக்குள் மற்றும் பாதங்களில் கறுப்புத் தேமல்; குணமாக என்ன வழி?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:
Representational Image ( Photo by Srinivas Reddy on Unsplash )

என் வயது 62. எனக்கு இரு அக்குள்களிலும் இரு பாதங்களிலும் சில வருடங்களாக கறுப்புத் தேமல் இருக்கிறது. தற்போது ஹோமியோபதி மருந்து எடுத்துக்கொண்டிருக்கிறேன். இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு?

- சந்திரசேகர் சங்கர் (விகடன் இணையத்திலிருந்து)

கிருத்திகா ரவீந்திரன்
கிருத்திகா ரவீந்திரன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, சரும மருத்துவர் கிருத்திகா ரவீந்திரன்.

``தேமல் என்பது ஒருவகையான பூஞ்சைத்தொற்றுதான். பூஞ்சைத்தொற்று பல விதங்களில் வரும். சிலவகை தேமல்கள் வெள்ளைநிற திட்டுகளாக வரும். Tinea nigra எனப்படும் ஒருவகைப் பூஞ்சைத்தொற்றானது கறுப்புநிறத்தில் வரும். இது உள்ளங்கைகள், பாதங்கள் போன்ற பகுதிகளில் வருவது சகஜம். பொதுவாக பூஞ்சைத் தொற்று என்பது ஈரப்பதம் உள்ள பகுதிகளில் வரக்கூடியது. தோட்டங்களில் வேலை பார்க்கும்போதோ, கால்களில் செருப்பு அணியாமல் நடக்கும்போதோ சின்னதாக அடிபட்டு லேசான கீறல் இருந்தால்கூட அதில் பூஞ்சைத்தொற்று ஏற்படக்கூடும். தோட்ட வேலை பார்க்கும்போது கைகளுக்கு கிளவுஸ் அணியாமல் வேலை செய்வார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முள்ளோ, வேறெதுவுமோ குத்தி, அதன் வழியே பூஞ்சைத் தொற்றானது போய் உட்கார்ந்து இன்ஃபெக்ஷனை ஏற்படுத்தும். ஈரப்பதம் உள்ள பகுதியில் இந்தத் தொற்று அதிகரிக்கும் என்பதால்தான் அக்குள் பகுதியில் வருகிறது. அங்கே வியர்வை அதிகமிருக்கும் என்பதே காரணம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நோய் எதிர்ப்புத்திறன் குறைவாக உள்ளவர்களுக்கு இந்தத் தொற்று வரலாம் அல்லது நோய் எதிர்ப்புத்திறனை பாதிக்கும் நீரிழிவு போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு வரலாம். இணை நோய்கள் உள்ளவர்களுக்கு இந்தத் தொற்று ஏற்படும்போது சரும மருத்துவரை அணுகி, முறையான சிகிச்சை எடுக்க வேண்டும்.

Tablets (Representational Image)
Tablets (Representational Image)
Image by Michal Jarmoluk from Pixabay

சரும மருத்துவர் இதற்கு மாத்திரையும் மேல் தடவிக்கொள்ளும் க்ரீமும் பரிந்துரைப்பார். அதிலேயே இந்தப் பிரச்னை சரியாகிவிடும். இது சாதாரணமான சரும பிரச்னைதான். ஆனாலும் நீரிழிவு உள்ளிட்ட இணைநோய்கள் உள்ளவர்களுக்கு வரும்போது நீண்டகாலம் தொடரக்கூடிய பிரச்னையும்கூட."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism