Published:Updated:

Doctor Vikatan: ஃபேட்டி லிவர் பிரச்னை; நள்ளிரவில் வயிற்றுவலி; என்னவாக இருக்கும்?

Pain (Representational Image) ( Photo by Sora Shimazaki from Pexels )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: ஃபேட்டி லிவர் பிரச்னை; நள்ளிரவில் வயிற்றுவலி; என்னவாக இருக்கும்?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:
Pain (Representational Image) ( Photo by Sora Shimazaki from Pexels )

திருமணமாகி 14 வருடங்கள் ஆகின்றன. 2 மகன்கள் உள்ளனர். சிறுநீர்ப்பை இறக்கத்தின் காரணமாக கர்ப்ப்பையை வெஜைனல் ஹிஸ்டரெக்டமி செய்து அகற்றி 8 வருடங்கள் ஆகிவிட்டன. தற்போதுவரை அதனால் எந்தப் பிரச்னையும் இல்லை. நான் எல்லோரையும் போல் வேலைகள் செய்து கொண்டிருக்கிறேன். கடந்த 6 மாதங்களாக வலதுபுற மேல் வயிற்றுப் பகுதியில் வலியை உணர்கிறேன். பகலில் எனக்கு வலி தெரிவதில்லை. இரவு நேரத்தில் தூக்கத்தில் அதிகமான வலியை உணர்கிறேன். மூச்சுவிடும்போது வலியை உணர்கிறேன். மருத்துவரிடம் சென்று ஸ்கேன் செய்து பார்த்தபோது ஃபேட்டி லிவர் கிரேடு 1 ஸ்டேஜ் என்றார். நான் அதற்கான மாத்திரை எடுத்துக் கொள்ளலாமா? எனக்கு சரியான மருத்துவ ஆலோசனை மற்றும் உணவுமுறை சொல்லவும்.

- தேவகி (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் பி.செந்தில்நாதன்
மருத்துவர் பி.செந்தில்நாதன்

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இரைப்பை, குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் பி.செந்தில்நாதன்.

``உங்களுக்கு இருப்பதாகச் சொல்லியிருக்கும் ஃபேட்டி லிவர் பிரச்னை என்பது கல்லீரலில் கொழுப்பு சேர்ந்து, அன்றாட நடவடிக்கைகளை பாதிக்கும் விஷயம். இன்றைய காலகட்டத்தில் நிறைய பெண்களுக்கு இந்தப் பிரச்னை இருப்பதைப் பார்க்கிறோம். ஸ்கேன் செய்து பார்த்தால் ஃபேட்டி லிவர் பிரச்னை கிரேடு 1, கிரேடு 2 என எந்தக் கட்டத்தில் இருக்கிறது என கண்டுபிடிக்கலாம். இந்தப் பிரச்னைக்கான முதலும் முக்கியமுமான தீர்வு உடற்பயிற்சி. தினமும் போதுமான அளவு உடற்பயிற்சி செய்வதன் மூலம் கல்லீரலில் உள்ள கொழுப்பு கரையும்பட்சத்தில் வேறு சிகிச்சைகளே தேவையிருக்காது. கூடவே அசைவ உணவுகள், கொழுப்புள்ள உணவுகளையும் தவிர்த்துவிட்டால் கிரேடு 1 ஃபேட்டி லிவர் பிரச்னையை சிகிச்சையின்றியே சரிசெய்யலாம். தேவைப்பட்டால் `லிவர் ஃபங்ஷன் டெஸ்ட்' செய்து பார்த்து அதில் ஏதேனும் மாறுதல்கள் தென்படும் பட்சத்தில் அதற்கு மட்டும் மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் போதுமானது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடுத்ததாக வலதுமேல் வயிற்றில் இருப்பதாக நீங்கள் குறிப்பிட்டுள்ள வலிக்கும் ஃபேட்டி லிவர் பாதிப்பு காரணமாக இருக்கலாம். ஆனால் அதற்கு முன் அது அல்சரா என்று கண்டுபிடிக்க வேண்டியது அவசியம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வலதுமேல் வயிற்றில் வலிக்கு, பித்தப்பை கற்கள் இருப்பதும் காரணமாக இருக்கலாம். ஆனால் நீங்கள் ஏற்கெனவே ஸ்கேன் செய்துபார்த்து அதில் ஃபேட்டி லிவர் பிரச்னை இருப்பதை மட்டும் உறுதிபடுத்தியதால் பித்தப்பை கற்கள் இருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. எனவே அது அல்சர் தொந்தரவாக இருக்கக்கூடும்.

Pain (Representational Image)
Pain (Representational Image)
Photo by Ivan Samkov from Pexels

நள்ளிரவில் வலி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளதற்கும் அல்சர் தொந்தரவு காரணமாக இருக்க வாய்ப்பு அதிகம். குடல் சிகிச்சை மருத்துவரை அணுகி, எண்டோஸ்கோப்பி மாதிரியான டெஸ்ட் எடுத்துப் பார்த்து அல்சரா அல்லது வேறு ஏதேனும் பிரச்னையா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, அதற்கேற்ப சிகிச்சைகளைத் தொடர்வது சரியாக இருக்கும்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism