Published:Updated:

Doctor Vikatan: முதுமையில் படுத்தும் தூக்கமின்மையும் மன அழுத்தமும்; என்ன செய்ய?

Old age (Representational image) ( Pixabay )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: முதுமையில் படுத்தும் தூக்கமின்மையும் மன அழுத்தமும்; என்ன செய்ய?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:
Old age (Representational image) ( Pixabay )

என் வயது 67. கடந்த சில வருடங்களாகவே எனக்குத் தூக்கமின்மை பிரச்னை தொடர்கிறது. இரவில் ஒரு மணி, இரண்டு மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிடுகிறது. மறுபடி தூங்க முடிவதில்லை. தூக்கமின்மையால் மன உளைச்சலும் அதிகரிக்கிறது. நான் மன அழுத்தத்துக்கோ, தூக்கத்துக்கோ மாத்திரைகள் பயன்படுத்தலாமா?

- முகேஷ் (விகடன் இணையத்திலிருந்து)

பொது மருத்துவர் அருணாசலம்
பொது மருத்துவர் அருணாசலம்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்.

``தூக்க மருந்துகள் எண்ணவோட்டத்தைக் கட்டுப்படுத்தி, தூக்கத்தைத் தூண்டவல்லவை. தூக்க மருந்துகளும், மன உளைச்சல், மன அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளும் ஒன்றல்ல. ஆனாலும், மன அழுத்தமோ, மன உளைச்சலோ உள்ளவர்களுக்கு அதிலிருந்து வெளியேறக் கொடுக்கப்படும் மருந்துகளே தூக்கத்தையும் வரவழைப்பதாக இருப்பதால், பெரும்பாலும் இந்த இரண்டு பிரச்னைகளும் உள்ளவர்களுக்கு தூக்க மாத்திரைகள் தனித்தனியாகத் தேவைப்படுவதில்லை.

நீங்கள் முதலில் மருத்துவரை அணுகி உங்கள் தூக்கமின்மைக்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும். உங்களை முழுமையாகப் பரிசோதிக்கும் மருத்துவர், உங்களுக்கு ஒரு நாளின் தூக்க நேரம், வீட்டுச்சூழல், வாழ்க்கைமுறை போன்றவற்றைப் பொறுத்து தூக்கமின்மைக்கான மருந்துகள் தேவையா என்று பார்ப்பார். அதன் பிறகே மருந்துகளைப் பரிந்துரைப்பார். கூடவே வாழ்வியல் முறையை மாற்றி அமைக்கும் வழிகளையும் அறிவுறுத்துவார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொதுவாக, தூக்கமின்மைக்குப் பரிந்துரைக்கப்படும் மருந்துகளுக்கு மக்கள் அடிமையாகிவிடும் அபாயம் இருப்பதால், பெரும்பாலும் அவற்றை நீண்ட நாள்களுக்கு எழுதித் தர மாட்டோம். சிலவகை தூக்க மருந்துகள் நல்ல தூக்கத்தைத் தரும், ஆனால், மறுநாள் தூக்கக் கலக்கம், மயக்கம், குழப்பம், தலைச்சுற்றல், வாய் உலர்தல் போன்ற சிறுசிறு பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்ட வாழ்க்கை என்பது தூக்கமின்மை, மலச்சிக்கல், ஞாபகமறதி போன்ற பல பிரச்னைகளைத் தரக்கூடியது. நடைப்பயிற்சி செய்வது முதுமையில் ஏற்படும் மலச்சிக்கல் மற்றும் தூக்கமின்மைக்கு பெருமளவில் உதவும். எனவே, மருத்துவரை அணுகி உங்களுக்குத் தூக்க மருந்து அவசியம்தானா என்று தெரிந்துகொள்வது அவசியம். அவர் பரிந்துரைக்கும் சின்னச் சின்ன பயிற்சிகள், வாழ்வியல் மாற்றங்களின் மூலமே உங்கள் தூக்க சுழற்சி முறைப்படலாம். நல்ல தூக்கத்துக்கென சில விதிமுறைகள் உள்ளன.

old age (Representational Image)
old age (Representational Image)

ஒரே நேரத்தில் படுத்து, ஒரே நேரத்தில் விழிப்பது, தூங்கும் அறை இருட்டாக, அமைதியானதாக இருப்பது, தூங்கும் நேரத்தில் மன அமைதியைக் குலைக்கும் விஷயங்களைச் செய்யாமலிருப்பது, மொபைல் மற்றும் டி.வி பார்ப்பதைத் தவிர்ப்பது போன்றவை பொதுவான விதிகள். அவற்றையும் பின்பற்றவும். மன அழுத்தம் வராமலிருக்க யோகா, தியானம், நல்ல இசையை ரசிப்பது போன்றவற்றையும் பின்பற்றலாம்.

சுயமாக தூக்க மருந்துகள் வாங்கிப் பயன்படுத்த வேண்டாம். அவை அளவு கூடும்போது மரணத்துக்குக்கூட காரணமாகலாம் என்பதால் அவற்றைக் கவனமாகக் கையாள வேண்டியது மிக முக்கியம்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism