Published:Updated:

Covid Variant XE: அது என்ன கொரோனா XE வைரஸ்? 4வது அலையை உருவாக்கும் அளவுக்கு ஆபத்தானதா?

கொரோனா XE வைரஸ் | Covid Variant XE

குறிப்பிட்ட இந்தப் பெண்மணிக்கு கொரோனா XE வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பதை மத்திய சுகாதார அமைச்சகம் மறுத்திருக்கிறது. என்றாலும், இந்தத் தொற்று இந்தியாவில் பரவும் வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது.

Covid Variant XE: அது என்ன கொரோனா XE வைரஸ்? 4வது அலையை உருவாக்கும் அளவுக்கு ஆபத்தானதா?

குறிப்பிட்ட இந்தப் பெண்மணிக்கு கொரோனா XE வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பதை மத்திய சுகாதார அமைச்சகம் மறுத்திருக்கிறது. என்றாலும், இந்தத் தொற்று இந்தியாவில் பரவும் வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது.

Published:Updated:
கொரோனா XE வைரஸ் | Covid Variant XE
'மாஸ்க் போடுவதே இனி கட்டாயம் இல்லை' என்று அரசே அறிவித்து எல்லா விதிகளையும் தளர்த்தும் அளவுக்கு கொரோனா தொற்று குறைந்துவிட்டது. இந்த நேரத்தில் புதுவித கொரோனா உருமாற்ற வைரஸ் மும்பையில் கண்டுபிடிக்கப்பட்டதாக வந்த தகவல் கிலி கிளப்பியுள்ளது. புதிதாக வடிவமைக்கப்படும் வாகனங்கள் மற்றும் புதிய மாடல் மொபைல்களுக்குப் பெயர் வைப்பது போல இந்த வைரஸுக்கும் பெயர் வைத்திருக்கிறார்கள். கொரோனா XE வைரஸ் என்பதே அந்தப் புது வெரைட்டி.

தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த 50 வயது பெண்மணி ஒருவருக்கு இந்த வகைத் தொற்று ஏற்பட்டிருப்பதாக மும்பை மாநகராட்சி அறிவித்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்திருக்கும் நேரத்தில் இந்தப் புது வைரஸால் நான்காவது அலை ஏற்படுமா என்கிற ரேஞ்சுக்கு விவாதங்கள் அதற்குள் கிளம்பிவிட்டன.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குறிப்பிட்ட இந்தப் பெண்மணிக்கு கொரோனா XE வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பதை மத்திய சுகாதார அமைச்சகம் மறுத்திருக்கிறது. என்றாலும், இந்தத் தொற்று இந்தியாவில் பரவும் வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது.

அது என்ன கொரோனா XE வைரஸ்? அது ஆபத்தானதா? அதன் அறிகுறிகள் என்னென்ன?

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டதற்குக் காரணம், ஒமைக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ். இந்த ஒமைக்ரானில் மூன்று வகைகள் இருந்தன. அவற்றை BA.1, BA.2, BA.3 என்று அழைக்கிறார்கள். மூன்றும் ஒமைக்ரான்தான். ஆனால், இரட்டையராகப் பிறக்கும் குழந்தைகளுக்குள் சின்னச்சின்ன வித்தியாசங்கள் இருப்பது போல இவற்றுக்குள் இருக்கும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆரம்பத்தில் BA.1 வெரைட்டியே உலகம் முழுக்கப் பரவியது. ஆனால், இந்தியாவில் மூன்றாவது அலையின்போது அதிகம் பரவியது BA.2 ரகம்தான். இந்த இரண்டுடன் போட்டிப் போட முடியாமல் BA.3 சில நாடுகளுக்குள் சுருங்கிப் போனது. இந்த மூன்றில் BA.2 அதிக ஆபத்தில்லாதது, ஆனால் அதி வேகமாகப் பரவுவது. இந்தியாவில் இந்த வெரைட்டி பரவியதால்தான் நாம் அதிக பாதிப்பு இல்லாமல் தப்பித்தோம். இந்தியாவில் நிறைய பேரைத் தொற்றிய இந்த வைரஸ், அதன்பின் உலகம் முழுக்கச் சென்றது. இப்போதும் உலகில் அதிகம் பேரைத் தொற்றுவது இந்த ரகம்தான்.

தற்போது புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும் கொரோனா XE வைரஸை புதிய உருமாற்றம் என்று சொல்ல முடியாது. இதை Recombinant என்று சொல்கிறார்கள். அதாவது, பழைய வெரைட்டிகள் இணைந்து உருவான புது வெரைட்டி. அதாவது, BA.1 மற்றும் BA.2 ஒமைக்ரான் வைரஸ்கள் இணைந்ததால் உருவான துணை ரகமே இது. கிட்டத்தட்ட மரு ஒட்டிக்கொண்டு மாறுவேடத்தில் சுற்றும் ரௌடி போல என்று சொல்லலாம்.
உருமாறிய கொரோனா வைரஸ்
உருமாறிய கொரோனா வைரஸ்
ஒரே நோயாளியை பல உருமாற்ற கொரோனா வைரஸ்கள் ஒரே நேரத்தில் தொற்றும்போது இப்படி Recombinant வைரஸ்கள் உருவாகின்றன. டெல்டாவும் ஒமைக்ரானும் இணைந்துகூட ஒரு Recombinant வந்தது. அந்த அளவுக்கு XE வைரஸ் மோசமில்லை என்பதே ஆறுதலான விஷயம்.

இப்படி உருவாகும் துணை ரகங்கள் பலவும், ஒரிஜினலான வைரஸின் குணத்தையே கொண்டிருக்கும். எனவே, இந்த XE வைரஸ் என்பது ஒமைக்ரானின் இயல்பிலேயே இருக்கும்.

"வைரஸில் புதிய உருமாற்றங்கள் நிகழ்வது போல இப்படித் துணை ரகங்களும் ஏற்படுவது இயல்புதான். உலகெங்கும் பெரிய அளவில் தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில், இப்படி இன்னும் நிறைய வரலாம்!"
என்று சொல்கிறது உலக சுகாதார நிறுவனம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"XE போலவே XD, XF போன்ற துணை ரகங்களும் உருவாகியுள்ளன. ஆனால், இப்படிப்பட்ட வைரஸ் துணை ரகங்கள் எல்லாமே சீக்கிரமே மறைந்துவிடும்" என்று ஆறுதல் தருகிறார், பிரிட்டிஷ் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பின் தலைமை மருத்துவர் சுசன் ஹாப்கின்ஸ்.

XE வைரஸ் முதன்முதலில் பிரிட்டனில் கடந்த ஜனவரி 19-ம் தேதி கண்டறியப்பட்டது. இந்தியாவில் ஏற்கெனவே பரவிய ஒமைக்ரான் வைரஸை விட இது 10 சதவிகிதம் வேகமாகப் பரவும் என்று நிபுணர்கள் சொன்னார்கள். ஆனால், இதுவரை இந்த வைரஸ் தொற்றியவர்களாக பிரிட்டனில் கண்டறியப்பட்டவர்கள் வெறும் 637 பேர். தாய்லாந்து, நியூசிலாந்து போன்ற இன்னும் சில நாடுகளிலும் இது இருப்பதாகத் தெரிந்தாலும், எண்ணிக்கை சொற்பம்தான். எனவே, இது அதிகம் பரவுவதில்லை என்பது உறுதியாகியுள்ளது.

புதிய கொரோனா வைரஸ்
புதிய கொரோனா வைரஸ்
ஒமைக்ரான் போலவே இதன் அறிகுறிகள் இருக்கின்றன. சோர்வு, மயக்கம், தலைவலி, தொண்டை எரிச்சல், ஜுரம், ஜலதோஷம், இருமல், உடல்வலி போன்ற அறிகுறிகளே ஏற்படுகின்றன. யாருக்கும் தீவிர பாதிப்பு ஏற்படவில்லை என்பது ஆறுதல்.

கொரோனா கட்டுப்பாடுகள் எல்லாம் தளர்த்தப்பட்டு சர்வதேச போக்குவரத்துகள் மீண்டும் தொடங்கிவிட்ட நிலையில், எந்த வைரஸும் எங்கும் எளிதில் பரவும் என்பதே சூழ்நிலை. ஆனால், இந்தியாவில் ஒமைக்ரான் கிட்டத்தட்ட 50 சதவிகித மக்களுக்குத் தொற்றி, நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கிறது. தடுப்பூசியும் நிறைய பேருக்குப் போடப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், ஒமைக்ரான் போலவே குணங்களைக் கொண்டிருக்கும் XE வைரஸ் மீண்டும் பரவாது என்பதே உண்மை. எனவே, இது நிச்சயமாக நான்காவது அலைக்குக் காரணமாக இருக்காது.

ஒமைக்ரான் போல இல்லாத, வேறு குணங்களைக் கொண்டிருக்கும் வேறு ஒரு உருமாற்ற வைரஸ் வந்தால் மட்டுமே நாம் கவலைப்பட வேண்டும்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism