Published:Updated:

Doctor Vikatan: கர்ப்பப்பை வாயில் போடப்பட்ட தையல் பிரிந்தால் என்ன செய்வது?

Woman (Representational Image)
News
Woman (Representational Image) ( Photo by Alex Green from Pexels )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

எனக்கு கர்ப்பப்பை வாயில் போடப்பட்ட தையல் பிரிந்துவிட்டது. அடுத்து என்ன செய்ய வேண்டும்?

- நந்தினி சிவா (விகடன் இணையத்திலிருந்து)

டாக்டர் கார்த்திகா
டாக்டர் கார்த்திகா

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவரும், லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை நிபுணருமான ஆர்.கார்த்திகா.

``சர்விகல் சர்க்ளாஜ் (Cervical cerclage) என்பது கர்ப்பப்பை வாயை மூடுவதற்காகப் போடப்படும் தையல். கர்ப்பம் தரித்த நான்கைந்து மாதங்களில், கருவின் எடை தாங்காமல் கர்ப்பப்பை வாய் திறந்துகொள்கிறவர்களுக்கும், பலமுறை டி அண்ட் சி செய்யப்பட்டதால் கர்ப்பப்பை வாய் சிதைந்தவர்களுக்கும், கர்ப்பப்பை வாயில் புற்றுநோய் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டவர்களுக்கும் இந்தத் தையல் தேவைப்படலாம். இந்தத் தையல் விட்டுப்போனதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வழக்கமாக இந்தத் தையலை அடிவழியேதான் போடுவார்கள். அப்படிப்போடும்போது அது தோல்விடைய வாய்ப்புகள் உண்டு.

அடிவழியாகத் தையல் போட்டு இரண்டு முறை அது தோல்வியடைந்துவிட்டது என்றால் வயிறுவழியே கர்ப்பப்பை வாயில் தையல் போடலாம். அது நிச்சயம் பலனளிக்கும். வயிற்றின் வழியே போடப்படும் இந்தத் தையலை வயிற்றைத் திறந்தும் செய்யலாம், லேப்ராஸ்கோப்பி முறையில் வயிற்றைத் திறக்காமலும் செய்யலாம்.

Woman (Representational Image)
Woman (Representational Image)
Image by StockSnap from Pixabay

இதை இரண்டு கர்ப்பங்களுக்கு இடையில், அதாவது கர்ப்பத்துக்குத் திட்டமிடும் முன்பே, வயிறு வழியே லேப்ராஸ்கோப்பி முறையில் 'அப்டாமினல் சர்க்ளாஜ்' ( Laparoscopic Abdominal Cerclage ) செய்துவிட்டால் நல்ல பலன் கிடைக்கும்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?