Published:Updated:

Doctor Vikatan: பிரசவத்துக்குப் பிறகு எத்தனை நாள்களில் பீரியட்ஸ் வரும்?

Sanitary Napkin (Representational Image) ( Image by burin kul from Pixabay )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: பிரசவத்துக்குப் பிறகு எத்தனை நாள்களில் பீரியட்ஸ் வரும்?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:
Sanitary Napkin (Representational Image) ( Image by burin kul from Pixabay )

சுகப்பிரசவமோ, சிசேரியனோ... குழந்தை பிறந்த பிறகு, மீண்டும் எப்போது பீரியட்ஸ் வரத் தொடங்கும்?

- ஶ்ரீதேவி (விகடன் இணையத்திலிருந்து)

சிவகாமி கோபிநாத்
சிவகாமி கோபிநாத்

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மற்றும் மகளிர்நல மருத்துவர் சிவகாமி கோபிநாத்.

``சிசேரியன் மூலம் நிகழ்ந்த பிரசவமாக இருந்தாலும் சரி, சுகப்பிரசவமாக இருந்தாலும் சரி, அந்தப் பெண்ணுக்கு மாதவிலக்கு ஏற்படுவதில் மாற்றங்கள் இருக்காது. குழந்தைபெற்ற பெண் தாய்ப்பால் கொடுக்கும்வரை, அதாவது ஒரு வருடம்வரைகூட அவளுக்கு மாதவிடாய் வராமலிருக்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தாய்ப்பாலே கொடுக்காதவர்களுக்கும், தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருப்பவர்களுக்கும், பிரசவமான ஓரிரு மாதங்களில் மாதவிடாய் திரும்பவும் வரத் தொடங்கும். மாதவிடாய் வராமலிருக்க, தாய்ப்பால் சுரப்புதான் காரணம்.

Sanitary Napkin
Sanitary Napkin
Pixabay

எனவே, இது குறித்துப் பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை. ஆனால், அதுவே ஒரு மாதத்தில் இருமுறையோ, அடிக்கடியோ மாதவிடாய் வந்தால் மட்டும் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?