Published:Updated:

கொரோனா முடிவுக்கு வருமா என்ற கேள்விக்குப் பதில் சொல்லும் அந்த 5 விஷயங்கள்!

கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வர இந்த 5 விஷயங்களும் நடக்க வேண்டும்... மருத்துவரின் நம்பிக்கை பட்டியல்

கொரோனா

கொரோனா எப்போது முடிவுக்கு வரும்? உலகம் முழுவதும் பதில் தெரியாமல் திரும்பத்திரும்பக் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்வி இது.

போலியோ, அம்மை என எத்தனையோ தீவிரமான நோய் பாதிப்புகளைக் கடந்து வந்திருந்த போதிலும், கோவிட் - 19 கொரோனாவை எதிர்கொள்வதில் மருத்துவ ரீதியிலும், மன ரீதியிலும் நம்மிடையே தீவிரமான சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. இதற்கிடையில், பேண்டெமிக் நோய்கள் எல்லாமே முடிவுக்கு வருவதற்கு மாதக்கணக்கிலோ, வருடக்கணக்கிலோ ஆகலாம் என்கின்றனர் அறிவியலாளர்கள். நம் பிரதமரும், `இது ஒரு நீண்ட போர்' என அறிவித்திருக்கிறார்.

ஆனால், இன்னும் எவ்வளவு காலம்தான் கொரோனாவோடு நாம் போராட வேண்டும்... கொரோனாவை நாட்டிலிருந்து ஒழிக்க நாம் செய்ய வேண்டியதுதான் என்ன... என்ன மாதிரியான மாற்றங்கள் ஒரு பேண்டெமிக் நோயைக் கட்டுக்குள் கொண்டுவரும்?

பல் மற்றும் முகத்தாடை அறுவை சிகிச்சை மருத்துவர் கார்த்திகேயனிடம் கேட்டோம்.

`` ஒரு சில விஷயங்கள் நடந்தால், இந்தியாவில் கோவிட் - 19 கொரோனா கட்டுக்குள் வரும். அவற்றை, விளக்கத்தோடு இங்கே சொல்ல விரும்புகிறேன்.

பல் மற்றும் முகத்தாடை அறுவை சிகிச்சை மருத்துவர் கார்த்திகேயன்
2
சமூக இடைவெளி - சுயசுத்தம்

சமூக இடைவெளி - சுயசுத்தம்

இந்தியாவில் அடுத்த சில மாதங்களுக்கு, கோவிட் - 19 கொரோனா பரவல் தொடரத்தான் போகிறது. உடனடியாக அதை நம்மால் தடுக்க முடியாது. இந்த நிதர்சனத்தை நாம் அனைவரும் இப்போதைக்கு ஏற்கத்தான் வேண்டும். ஆனால், இதற்காக நாம் பயப்பட வேண்டியதில்லை. மாறாக, விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். விழிப்போடு இருக்கும்பட்சத்தில், நோய் பரவும் வேகம் குறையும். வேகம் குறையும்போது, நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு கட்டுக்குள் வரும். இவையாவும் நாம் பின்பற்றும்போது நோயின் வீரியம் கட்டுப்படும். மேலும் மருத்துவச் சிக்கல்கள் / இடர்ப்பாடுகள் போன்றவையும் ஏற்படாது. இந்த முறையை, `ஃப்ளாட்டனிங் தி கர்வ்' என்பார்கள். இம்முறையில் நோய், நெடுங்கால பாதிப்பாக இருக்குமென்றபோதிலும், எபிடெமிக்காக மாறாமல் இருக்கும்! இங்கே விழிப்போடு இருப்பது என நான் சொல்வது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதையும், சுயசுத்தம் பேணுவதையும். அவைமட்டுமே நம்மை காக்கும்.

தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எப்படி? - முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர்கள் கருத்து!
3
கொரோனா தடுப்பு

ஹெர்டு இம்யூனிட்டி

எந்தவொரு நோய்க்குமே, குறிப்பிட்ட பகுதியிலுள்ள பெரும்பான்மையான மக்கள் அதனால் பாதிக்கப்பட்டு - அவர்களில் மிகப்பெரும்பான்மையானோர் அதிலிருந்து குணமாகியும்விட்டனர் என்றால், தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு நோய் பரவாமல் இவர்கள் செய்து விடுவார்கள். இது நோய்ச் சங்கிலியை உடைத்து விடும். இதை, மருத்துவத்தில் `ஹெர்டு இம்யூனிட்டி' என்போம். இந்தியாவில் கோவிட் - 19 பரவுதலில், இது நிகழ வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதற்கு, நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது போலவே குணமாகும் நபர்களின் எண்ணிக்கையும் சீராக அதிகரிக்க வேண்டும். அப்படி நடக்கும்பட்சத்தில், கோவிட் -19 ஐ நாட்டைவிட்டு நம்மால் நிச்சயம் ஒழிக்கமுடியும்.

`ஹெர்டு இம்யூனிட்டி' கோட்பாடு... இந்தியா வென்ற நோய்கள் முதல் பிரிட்டன் செய்த கொரோனா பிழைவரை!
4
ஃபர்ஸ்ட் லைன் வொர்க்கர்ஸ்

ஃபர்ஸ்ட் லைன் வொர்க்கர்ஸ் மீது கவனம் தேவை!

நோய்த்தொற்றுக்கான ஆபத்து அதிகம் இருப்பவர்களை முறையாகக் கண்காணித்து, அவர்களின் உடல்நலனை உறுதிசெய்துகொள்வதும் அவசியம். ஃபர்ஸ்ட் லைன் வொர்க்கர்ஸ் எனப்படும் முதல் நிலை பணியாளர்களுக்குத்தான் அனைவரையும்விட தொற்றுக்கான வாய்ப்பு அதிகம் என்பதால் அவர்கள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். தொற்று பரவும் நேரத்தில் களத்திலிருந்து பணியாற்றும் ஊழியர்கள் இவர்கள்! அவர்கள் அனைவரையும் அரசு நலமாக வைத்துக்கொள்ளும் பட்சத்தில், சமூகப் பரவுதலை (கம்யூனிட்டி ஸ்பிரெட்) நம் நாட்டில் தவிர்க்கலாம். அது நிகழ்ந்துவிட்டாலே, `ஃப்ளாட்டனிங் தி கர்வ்'ஐ நாம் எளிதில் சாத்தியப்படுத்திவிடலாம்.

`சுகாதாரப் பணியாளர்கள் பாதுகாப்பு முக்கியம்!’ - நாகை அரசு ஊழியர்கள் சங்கம் சொல்லும் `மாஸ்க்’ கணக்கு
5
முன்னெச்சரிக்கை!

முன்னெச்சரிக்கை!

மேற்கூறிய அனைத்தையும்விட முக்கியம், அடுத்து வரும் சில வருடங்களுக்கு, வைரஸ் குறித்த முன்னெச்சரிக்கையோடு மக்கள் அனைவரும் இருக்க வேண்டும். சாதாரண சளி, இருமல் தொற்றுக்குக்கூட மருத்துவ அறிவுரையும் ஓய்வும் அவசியம். மருந்து விஷயத்தில் அலட்சியமோ, சுய மருத்துவமோ கூடவே கூடாது!

6
தடுப்பூசி!

தடுப்பூசி!

கோவிட் - 19 ஐ நாட்டிலிருந்து விலக்க, இவை அனைத்தையும்விட எளிமையான ஒரு வழி இருக்கிறது. அது, நோய்க்கான தடுப்பூசியைக் கண்டறிவது. அதன்மூலம் மக்கள் அனைவரையும் நோய்க்கு எதிரானவர்களாக மாற்றி இந்த வைரஸை நாட்டைவிட்டு மொத்தமாக ஒழிக்கலாம். இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. பொதுவாகவே, வைரஸ் தொற்றால் ஏற்படும் நோய்களுக்குத் தடுப்பூசி கண்டுபிடிப்பது சற்றே கடினமான விஷயம். ஒருவேளை கண்டறியப்பட்டாலும், மருத்துவச் சந்தையில் அதன் விலை எப்படி இருக்குமென தெரியாது. ஒருவேளை விலை அதிகமாக இருந்தால், அரசுக்கும் மக்களுக்கும் மீண்டும் சிக்கல்தான். தடுப்பு மருந்து கிடைத்துவிட்டாலே போதுமென்ற நிலையில் உலகம் இருப்பதால் இந்த விஷயத்தில் இப்போதைக்கு பாசிடிவ்வாகவே நினைப்போம்!"

தடுப்பூசி, மருந்து, தாமதம்... கொரோனா சந்தேகங்களும் விளக்கங்களும்! #LongRead #FightCovid-19

என்றார் அவர்.

விழிப்போடு இருப்போம். விரைவில் கொரோனாவை விரட்டுவோம்!
அடுத்த கட்டுரைக்கு