Published:Updated:

Doctor Vikatan: சோரியாசிஸ் பாதிப்புக்கு அலோபதியா, சித்தாவா; எது சிறந்தது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
Skin (Representational Image)
Skin (Representational Image) ( Photo by Juan Pablo Serrano Arenas from Pexels )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

சோரியாசிஸ் பாதிப்புக்கு ஆங்கில மருத்தும் பலனளிக்குமா அல்லது சித்த மருத்துவமா?

- அருள் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் சிவராமன்
மருத்துவர் சிவராமன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் கு. சிவராமன்.

``சித்த மருத்துவம்தான் சிறந்தது. சமீபத்தில்கூட தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் நடைபெற்ற ஆய்வில் கந்தக மெழுகு எனும் எளிய சித்த மருந்து தலை, உள்ளங்கை, உள்ளங்காலில் வரும் palmarplantar psoriasis-க்கு மிக துரிதமான நற்பலனைத் தருவதை ஆய்ந்தறிந்து சொல்லியிருக்கிறார்கள்.

பொதுவாக சோரியாசிஸ் முழுமையாக 100 சதவிகிதம் குணமாகாது. 90 சதவிகிதம் சரியாகி 10 சதவிகிதம் அளவு மீண்டும் வர பலருக்கும் வாய்ப்புண்டு. உணவில் புளியைக் குறைக்க வேண்டும். மீன் ஆகாது. சிறு தானியங்களில் கம்பு, வரகு, சோளம் மற்றும் கோதுமை உணவுகளை ஆறுமாத காலத்துக்கு தவிர்க்க வேண்டும்.

Depression (Representational Image)
Depression (Representational Image)
Pixabay
Doctor Vikatan: அதிகரிக்கும் முகப்பருக்கள்; எண்ணெய்ப்பசையான சருமம்; சிகிச்சைகள் பலனளிக்குமா?

மன அழுத்தமும் பரபரப்பும் பாதிப்பின் தீவிரத்தை அதிகரிக்கச் செய்யும். சரியான மருத்துவ சிகிச்சை, உணவு, மனநலம் காக்கும் யோகா என இந்தப் பிரச்னையை அணுகுவது நல்லது. சிலருக்கு தீவிர பாதிப்பு இருக்கும் காலகட்டத்தில், சிலகாலம் நவீன மருந்துகளோடு ஒருங்கிணைந்தும் சித்த மருந்துகளைத் தற்காலிகமாகப் பயன்படுத்தி, பிறகு தீவிரம் குறைந்ததும், முழு நிவாரண சிகிச்சைக்கு சித்த மருத்துவத்தைத் தொடரவும் செய்யலாம்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு