Published:Updated:

`ஒமிக்ரானை லேசா நினைக்காதீங்க!' - உலக சுகாதார நிறுவனம் அலர்ட்

Health workers conduct COVID-19 antigen tests in New Delhi
News
Health workers conduct COVID-19 antigen tests in New Delhi ( AP Photo / Manish Swarup )

``ஒமிக்ரான் வேரியன்ட் டெல்டாவோடு ஒப்பிடுகையில் பாதிப்பில் குறைவானதைப்போல தோன்றினாலும், குறிப்பாகத் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஒமிக்ரான் மிதமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று எடுத்துக்கொள்ள முடியாது."

இந்தியாவில் கொரோனா வைரஸின் ஒமிக்ரான்‌ வேரியன்ட் வேகமாகப் பரவிவரும் நிலையில், ``ஒமிக்ரான் வைரஸை சாதாரணமாக எண்ண வேண்டாம்" என புதிய எச்சரிக்கையை உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ளது.

முதன்முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ஆசியா உள்ளிட்ட பல நாடுகளுக்குப் பரவியுள்ளது. இதன் பரவும் வேகம் டெல்டா வேரியன்டைவிட அதிகமாக இருந்தாலும் ஒமிக்ரானின் தாக்கம் மிதமாகவே இருக்கும் என நிபுணர்கள் பலரால் கூறப்பட்டது.

இந்தக் கருத்தை சந்தேகத்துக்கு உள்ளாக்கும் வகையில் உலக சுகாதார நிறுவனத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ``ஒமிக்ரான்‌ வேரியன்டை சாதாரணமாக நினைக்க வேண்டாம். அதன் பாதிப்பில் உலகில் பல மக்கள் இறந்து கொண்டுதான் இருக்கிறார்கள்" எனக் குறிப்பிட்டிருந்தது.

உலக சுகாதார நிறுவனம்
உலக சுகாதார நிறுவனம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் டெட்ராஸ் அதனோம் கூறுகையில், ``ஒமிக்ரான் வேரியன்ட் டெல்டாவோடு ஒப்பிடுகையில் பாதிப்பில் குறைவானதைப்போல தோன்றினாலும், குறிப்பாகத் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஒமிக்ரான் மிதமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று எடுத்துக்கொள்ள முடியாது. இதற்கு முந்தைய வேரியன்டுகளைப் போலவே ஒமிக்ரானால் பாதிப்படைந்த பலரும் மருத்துவமனையில் உள்ளனர்; மரணம்கூட நிகழத்தான் செய்கிறது.

நாளுக்குநாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இந்த நிலை உலகில் உள்ள மருத்துவ நிறுவனங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாகவே உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதிலும் கடந்த வாரத்தில் மட்டும் 9.6 மில்லியன் ஒமிக்ரான் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது அதற்கு முந்தைய வாரத்தைக் காட்டிலும் 71% அதிகம்.

COVID-19 screening in Mumbai
COVID-19 screening in Mumbai
AP Photo/Rajanish kakade

நம் நாட்டையே உலுக்கிய இரண்டாம் அலைக்குக் காரணமான டெல்டா வேரியன்டைவிட ஒமிக்ரான் குறைந்த பாதிப்பே தரும் என கூறப்பட்டாலும் அதன் முழுமையான வீரியம் குறித்த சரியான விவரம் இன்னும் தெரியவில்லை.

நோய் பாதிப்பு நாளுக்குநாள் அசுர வேகத்தில் உயர்ந்து வரும் சமயத்தில் உலக சுகாதார நிறுவனம் நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மக்கள் அனைத்து விதமான ‌வழிமுறைகளையும் முறையாகக் கடைப்பிடிக்குமாறு‌ வலியுறுத்தியுள்ளது. ஒமிக்ரான் லேசானது என மெத்தனமாக இல்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி உலக நாடுகளிடம் உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.