Published:Updated:

கோவிட்19: `3-வது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்காது!' - WHO-வின் புதிய ஆய்வு சொல்வது என்ன?

உலக சுகாதார நிறுவனம்
உலக சுகாதார நிறுவனம்

கோவிட் தொற்றுக்கு எதிராக எத்தனை பேருக்கு உடலில் ஆன்டிபாடி உருவாகியிருக்கிறது என்ற விகிதத்தைக் கணக்கிடும் (seroprevalence) ஆய்வின் மூலம் இதைக் கணித்துள்ளனர்.

இந்தியாவில் கோவிட் 3-ம் அலை ஏற்பட்டால் அது குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்று மருத்துவர்களும் நிபுணர்களும் பரவலாகக் கூறி வந்த நிலையில், அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்று புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இணைந்து நடத்திய ஆய்வில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

corona
corona
`நீண்ட நேரம் ஆபீஸ் வேல பாக்குறீங்களா? உங்களுக்கு இந்த ஆபத்துகள் உறுதி!' - WHO எச்சரிக்கை

கோவிட் தொற்றுக்கு எதிராக எத்தனை பேருக்கு உடலில் ஆன்டிபாடி உருவாகியிருக்கிறது என்ற விகிதத்தைக் கணக்கிடும் (seroprevalence) ஆய்வின் மூலம் இதைக் கணித்துள்ளனர்.

இந்தியாவில் ஐந்து மாநிலங்களில் மொத்தம் 10,000 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் இடைப்பட்ட நிலையில் நான்கு மாநிலங்களில் 4,500 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் மீதமுள்ள முடிவுகளும் கிடைத்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி பேசியுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தொற்றுநோய் மருத்துவத்துறை பேராசியரும் மருத்துவருமான புனீத் மிஸ்ரா, ``டெல்லியில் நகர்ப்புற பகுதியில் மக்கள்தொகை நெருக்கடி அதிகம் காணப்படும் இடத்தில் ஆன்டிபாடி உருவாகியிருக்கும் விகிதம் மிகவும் அதிகமாக 74.7% காணப்பட்டது. இரண்டாம் அலைக்கு முன்பாகவே தெற்கு டெல்லியில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் இந்த விகிதம் 73.9 சதவிகிதம் காணப்பட்டது.

குழந்தை -Representational image
குழந்தை -Representational image

இரண்டாம் அலையின் தீவிரத்துக்குப் பிறகு டெல்லியில் ஜனநெருக்கடி அதிகமுள்ள இடங்களில் கோவிட்-19 ஆன்டிபாடி உருவாகியிருக்கும் விகிதம் மேலும் அதிகரித்திருக்கும் என்பதால் 3-வது அலையிலிருந்து இது காப்பாற்றலாம். டெல்லியில் மக்கள்நெருக்கடி அதிகமுள்ள இடங்களில் குழந்தைகளுக்கு ஆன்டிபாடி உருவாகும் விகிதம் அதிகரித்துக் காணப்படுவதால் பள்ளிகளைத் திறந்தால்கூட பிரச்னை இருக்காது.

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் மிக அதிகமாக ஒட்டுமொத்தமாக 87.9% ஆன்டிபாடி உருவாகும் விகிதம் உள்ளது. குறிப்பாக, 2 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு 80.6%, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 90.3 சதவிகிதமாக உள்ளது. இந்த ஆய்வில் கோரக்பூர் மிக அதிக அளவில் இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்டது என்பதால் `ஹெர்டு இம்யூனிட்டி' எனப்படும் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது.

Child -  Representational Image
Child - Representational Image
கொரோனா போலவே ஒரு வைரஸ், ஹைப்ரிட் குழந்தைகள்... `ஸ்வீட் டூத்' சீரிஸ் பேசும் அரசியல் என்ன?

ஒட்டுமொத்தமாக 4,500 பேரிடம் நடத்திய ஆய்வில், 62.3% பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு குணமாகியுள்ளது என்பது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக, மூன்றாவது அலை என்பது குழந்தைகளை அதிகளவில் பாதிக்காது என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது. குறிப்பாக குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு" என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு