Published:Updated:

எல்லோருக்கும் தேவையா சத்து மாத்திரைகள்? மருத்துவ விளக்கம்

சத்து மாத்திரைகள் ( For Representation Only )

உடல்நலப் பிரச்னைகளுக்கு மருத்துவர் பரிந்துரையின்றி மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் வைட்டமின், மல்டி வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது நல்லதா?

எல்லோருக்கும் தேவையா சத்து மாத்திரைகள்? மருத்துவ விளக்கம்

உடல்நலப் பிரச்னைகளுக்கு மருத்துவர் பரிந்துரையின்றி மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் வைட்டமின், மல்டி வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது நல்லதா?

Published:Updated:
சத்து மாத்திரைகள் ( For Representation Only )

"உடம்புல சத்து குறைவா இருக்காம். அதனால டாக்டர் சத்து மாத்திரை சாப்பிடச் சொல்லியிருக்காரு..." என்பது போன்ற உரையாடல்களை அடிக்கடி கேட்டிருப்போம். பெரும்பாலும் வைட்டமின், மல்டி வைட்டமின் மாத்திரைகளைத்தான் அப்படிச் சொல்வார்கள். உடல்நலப் பிரச்னைகளுக்கு மருத்துவர் பரிந்துரையின்றி மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் பழக்கம் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற சத்து மாத்திரைகளையும் அதிகம் எடுத்துக் கொள்கின்றனர்.

 மாத்திரைகள்
மாத்திரைகள்

உண்மையில் சத்து மாத்திரைகள் யாரெல்லாம் எடுத்துக்கொள்ளலாம் என்று விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாச்சலம்...

வைட்டமின், மல்டி வைட்டமின் மாத்திரைகள் என்ன வேறுபாடு?

பி12, இ எனத் தனித்தனியாக வைட்டமின் சத்துகளுக்கு மாத்திரைகள் உள்ளன. மல்டிவைட்டமின் மாத்திரைகளில் பல வைட்டமின் வகைகள் சேர்ந்து இருக்கும். ஒருவருக்கு என்னென்ன குறைபாடுகள் உள்ளனவோ அதற்கேற்ப வைட்டமின் மாத்திரைகள் அல்லது மல்டிவைட்டமின் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும்.

வைட்டமின் என்பது ஒரு வகை ஊட்டச்சத்து. உயிர் வாழ அத்தியாவசியமான உணவினைத் தவிர்த்து ஊட்டச்சத்தும் மிகவும் அவசியம். தற்போது உணவுப்பழக்கம் வெகுவாக மாறிவிட்டது. துரித உணவுகள், பிரியாணி போன்ற உணவுகளை அதிகம் சாப்பிடுகிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

யாருக்கெல்லாம் தேவை?

காய்கறி, பழங்கள், நட்ஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ளாத காரணத்தினால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டால் உணவை செரிக்கும் சக்தி குறைந்துவிடும் அல்லது இழக்கப்படும். ஊட்டச்சத்து குறைபாடு இருப்பவர்களுக்கு இந்த மாத்திரைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன.

பொது மருத்துவர் அருணாசலம்
பொது மருத்துவர் அருணாசலம்

காய்ச்சல் பாதிக்கும்போது வைட்டமின் மாத்திரைகளையும் சேர்த்து பரிந்துரைக்கிறார்கள். நோயின் தாக்கம் குறைந்த பிறகு உடல் களைப்பை நீக்குவதற்கும் வைட்டமின்களும் தேவைப்படுகின்றன. வயதானவர்களுக்கும் செரிக்கும் தன்மை குறைவாக இருக்கும் என்பதால் சிலருக்கு மல்டிவைட்டமின் மாத்திரைகளை பரிந்துரை செய்கிறோம்

சர்க்கரை நோயாளிகள் சில பழ வகைகளை எடுத்துக்கொள்ள முடியாது என்பதாலும், இவர்களுக்கு உணவிலிருந்து தேவையான ஊட்டசத்தினைப் பிரித்தெடுக்கும் சக்தி குறைந்து நரம்புகளில் பிரச்னை ஏற்படும் என்பதாலும் மல்டி வைட்டமின் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

வைட்டமின் மாத்திரை
வைட்டமின் மாத்திரை

வயதானவர்களுக்கு உணவிலிருந்து ஊட்டசத்தினை பிரிக்கும் சக்தி குறைந்திருக்கும் அதனால் வைட்டமின் டி3, பி12 குறைபாடுகள் ஏற்படும். இவர்களுக்கும் மல்டி வைட்டமின் பரிந்துரைக்கப்படும். இதுபோன்று சர்க்கரை நோயாளிகளுக்கு உணவிலிருந்து தேவையான ஊட்டசத்தினை பிரித்தெடுக்கும் சக்தி குறைந்த பிறகு நரம்புகளில் பிரச்னை ஏற்படும். இவர்களுக்கும் மாத்திரைகள் தேவைப்படலாம்.

ஒரு நோயிலிருந்து குணமடைந்த பிறகு, மல்டி வைட்டமின் மாத்திரைகள் தேவைப்படும். நோயிலிருந்து குணமடைந்த பிறகு களைப்பை நீக்க, மல்டி வைட்டமின் மாத்திரைகள் உதவும். வயதானவர்களுக்கு கை, கால், மூட்டு வலி இருப்பதாக மருத்துவர்களிடம் செல்வார்கள். அதற்கு வைட்டமின் குறைபாடுகள் காரணமாக இருக்கலாம். மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு தேவைப்பட்டால் மல்டி வைட்டமின் மாத்திரைகளைப் பரிந்துரை செய்வார்கள்.

சத்து மாத்திரைகள்
சத்து மாத்திரைகள்

யாருக்குத் தேவையில்லை?

சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம் ஆகிய பிரச்னைகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள் தேவையில்லை. சில இளைஞர்களுக்கு சர்க்கரைநோய் இருக்கும். அதற்காக அவர்கள் மல்டி வைட்டமின் மாத்திரைகள் எடுத்துகொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. பொதுவாக பெண்களுக்கு தான் அதிகமான வைட்டமின் குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பெண்களை ஒப்பிடும்போது ஆண்கள் வெயிலுக்கு அதிகம் வெளிப்படுகின்றனர். இளைஞர்கள் அவசியமின்றி வைட்டமின், மல்டி வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

சில மருந்து நிறுவனங்களின் விளம்பரங்களைப் பார்த்துவிட்டு, தங்களுக்கு இந்த மல்டிவைட்டமின் மாத்திரைகளை எழுதிக் கொடுங்கள் என்று மருத்துவரிடம் கேட்கின்றனர். இது முற்றிலும் தவறான அணுகுமுறை. சிலருக்கு முன்பு மருத்துவர் பரிந்துரைத்த மல்டிவைட்டமின் மாத்திரை சாப்பிட்ட பிறகு உடல்நலம் நன்றாக இருப்பது போன்று இருக்கும். தற்போது தேவையே இல்லை என்றாலும் அந்த மாத்திரைகளை பரிந்துரைக்கும்படி மருத்துவரிடம் கேட்பார்கள்.

tired
tired

வைட்டமின் மாத்திரைகள் அதிகமாக உட்கொண்டால் தலைவலி, வாந்தி, மயக்கம், களைப்பு போன்றவை ஏற்படலாம். வைட்டமின் சத்துகள் உடலில் தேவைக்கு அதிகமாகச் சேரும்போது எரிச்சலுணர்வு, நச்சுத்தன்மை உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படலாம். இதுபோன்ற நிலையை ஹைப்பர்விட்டமினோசிஸ் (Hypervitaminosis) என்பார்கள். வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு இது போன்ற அறிகுறிகள் இருந்தால் அந்த மாத்திரைகளை நிறுத்திவிட்டு மருத்துவரை ஆலோசிப்பது நல்லது" என்றார்.