Published:Updated:

`நீண்ட நேரம் ஆபீஸ் வேல பாக்குறீங்களா? உங்களுக்கு இந்த ஆபத்துகள் உறுதி!' - WHO எச்சரிக்கை

work from home
work from home

2016-ம் ஆண்டு மட்டும் 7,45,000 பேர் பக்கவாதம் மற்றும் இதய நோய் காரணமாக உயிரிழந்திருக்கிறார்கள். இது 2000-ல் ஏற்பட்ட உயிரிழப்பை விட 30%அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வாரத்துக்கு 55 மணி நேரம் மற்றும் அதற்கு மேற்பட்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு பக்கவாதம் மற்றும் இதயநோய்கள் ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், மிகவும் நீண்ட நேரம் வேலை செய்வதால் ஆண்டுதோறும் லட்சக் கணக்கானவர்கள் உயிரிழப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

நீண்ட நேரம் வேலை செய்வதால் ஊழியர்களுக்கு ஏற்படும் உடல்நிலை பாதிப்பு, மரணங்கள் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு அண்மையில் ஆய்வு மேற்கொண்டது. 2000 - 2016 காலகட்டத்தில் உள்ள, 194 நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட தரவுகளை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், ஒரு வாரத்துக்கு 35 முதல் 40 மணிநேரம் வேலை செய்பவர்களைவிட, 55 மணி நேரம் அல்லது அதற்கும் அதிகமான நேரம் வேலை செய்பவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கான ஆபத்து 35 சதவிகிதமும், இதய நோயால் மரணமடைவதற்கான ஆபத்து 17 சதவிகிதமும் கூடுதலாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Working Woman
Working Woman

2016-ம் ஆண்டு மட்டும் 7,45,000 பேர் பக்கவாதம் மற்றும் இதய நோய் காரணமாக உயிரிழந்திருக்கிறார்கள். இது 2000-ல் ஏற்பட்ட உயிரிழப்பைவிட 30%அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் இணைந்து உலக சுகாதார அமைப்பு மேற்கொண்ட இந்த ஆய்வில், நீண்ட வேலை நேரம் காரணமாக உயிரிழப்பவர்களின் அதிகம் பேர் (72%) நடுத்தர வயது ஆண்கள் மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய ஆண்களாக உள்ளனர் என இந்த முடிவு காட்டுகிறது.

work
work

கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் இந்த நிலை மேலும் மோசமடையக் கூடும் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. அதனால், வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் தங்களை எப்போதும் ரிலாக்ஸாக வைத்துக்கொள்ளவும், குறிப்பிட்ட நேரத்துக்குள் வேலையை முடித்துவிட்டு உடல்நிலை மீது அக்கறை எடுத்துக் கொள்ளவும் துறை சார்ந்த நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு