Published:Updated:

Doctor Vikatan: கொரோனா நோயாளிகளுக்கு ஆஸ்பிரின் மாத்திரை கொடுக்கப்படுவது ஏன்?

Tablets (Representational Image) ( Image by Michal Jarmoluk from Pixabay )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: கொரோனா நோயாளிகளுக்கு ஆஸ்பிரின் மாத்திரை கொடுக்கப்படுவது ஏன்?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:
Tablets (Representational Image) ( Image by Michal Jarmoluk from Pixabay )

கொரோனா பாதித்தவர்களுக்கு ஆஸ்பிரின் மாத்திரை பரிந்துரைக்கப்படுவது ஏன்? பொதுவாக மாரடைப்புக்குத்தானே இதைப் பரிந்துரைப்பார்கள்? கொரோனாவுக்கும் இதற்கும் என்ன தொடர்பு?

- ரஜினி (விகடன் இணையத்திலிருந்து)

பூங்குழலி
பூங்குழலி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.

``கடந்த அலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களிடம் நாம் பார்த்த மூச்சடைப்பு உள்ளிட்ட பல பாதிப்புகளும் தொற்று தீவிரமானதன் விளைவால் ஏற்பட்டவை. `சைட்டோகைன் ஸ்ட்ராம்' (Cytokine storm) எனப்படும் இது பாதிக்கும்போது, ரத்த நரம்புகளில் சின்னச் சின்ன ரத்தக் கட்டு ஏற்பட்டு, உடல் முழுவதும் ரத்த ஓட்டம் தடைப்பட்டு, பல உறுப்புகளும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆஸ்பிரின் மருந்து என்பது ரத்தக்கட்டுக்காகக் கொடுக்கப்படும் ஒன்று. மாரடைப்புக்கு இந்த மாத்திரையைக் கொடுக்கவும் அதுதான் காரணம். பிளட் தின்னர் வகையைச் சேர்ந்த இந்த மாத்திரை, ரத்தத்தைக் கட்டவிடாமல் நீர்த்திருக்கச் செய்யும். அதே காரணத்துக்காகத்தான் கோவிட் தொற்றிலும் அது பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் கோவிட் தொற்றுக்குள்ளான எல்லோருக்கும் இது தேவையில்லை.

Covid 19 Outbreak
Covid 19 Outbreak

தொற்றுக்குள்ளானவர்களின் உடல்நிலையைப் பரிசோதித்து, ரத்தப் பரிசோதனைகள் மேற்கொண்ட பிறகு, அவர்களின் நோயின் தீவிரம் தெரிந்து, தேவைப்பட்டால் மட்டுமே மருத்துவர் ஆஸ்பிரின் மாத்திரையையோ அல்லது வேறு பிளட் தின்னர் மருந்துகளையோ பரிந்துரைப்பார்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?