Published:Updated:

Doctor Vikatan: கொரோனாவிலிருந்து குணமான பிறகும் தொடரும் இருமல்; தீர்வே கிடையாதா?

இருமல்
News
இருமல்

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: கொரோனாவிலிருந்து குணமான பிறகும் தொடரும் இருமல்; தீர்வே கிடையாதா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

இருமல்
News
இருமல்

இரண்டு மாதங்களுக்கு முன்பு கோவிட் தொற்று வந்து குணமானேன். அப்போது ஆரம்பித்த இருமல் இன்னும் சரியாகவில்லை. மருத்துவரிடம் கேட்டால் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் நிற்கும் என்கிறார். இரவில் இருமல் மிக அதிகமாக இருக்கிறது. இதற்கு என்னதான் தீர்வு?

பதில் சொல்கிறார் கோவையைச் சேர்ந்த பொதுமருத்துவர் ஆதித்யன் குகன்

ஆதித்யன் குகன்
ஆதித்யன் குகன்

கொரோனா வைரஸ் என்றில்லை, வேறெந்த வைரஸ் நம்மைத் தொற்றினாலும், நாம் அந்தத் தொற்றிலிருந்து குணமானாலும் நம் எதிர்ப்புசக்தியை சரிசெய்துகொண்டாலும், அந்த வைரஸ் நம் நுரையீரலில் ஏற்படுத்திய பாதிப்பு என்பது கொஞ்சம் கொஞ்சமாகத் தான் சரியாகும். அதற்கு Post Viral Tussive Cough என்று பெயர். வறட்டு இருமலாக இருக்கும். குறிப்பாக மாலை நேரத்தில் இருமல் அதிகமாகும்.

இந்தப் பிரச்னையை மூன்று எளிய வழிகளில் குணப்படுத்தலாம். முதல் வழி ஆவி பிடித்தல். ஸ்டீம் இன்ஹேலேஷன் செய்வதற்கான மாத்திரையை மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு தூங்கப்போவதற்கு முன்பு அதைப் பயன்படுத்தியும், தூங்கி எழுந்ததும் உப்பும், மஞ்சள்தூளும் சேர்த்த வெந்நீரிலும் ஆவி பிடிக்கலாம்.

நுரையீரலிலும் அதன் அருகிலுள்ள பகுதிகளிலும் வைரஸ் தொற்றின் காரணமாக வீக்கம் ஏற்பட்டு, அதனாலும் இருமல் வரலாம். இதை குணப்படுத்த வீஸிங் பிரச்னை உள்ளவர்கள் பயன்படுத்தும் வாய்வழி வைத்து உறியக்கூடிய இன்ஹேலர்களை மருத்துவப் பரிந்துரையோடு வாங்கி உபயோகிக்கலாம்.

இருமல்
இருமல்

மூன்றாவதாக 'ஆன்டி ஹிஸ்டமைன்' மருந்துகளை மருத்துவ ஆலோசனையோடு மாலை நேரத்துக்குப் பிறகு எடுத்துக்கொள்வதும் தீர்வு தரும். எனவே இந்தப் பிரச்னை குறித்துப் பெரிதாக கவலைகொள்ளத் தேவையில்லை. இதை கோவிட் தொற்றுக்குப் பிறகு தொடரும் 'லாங் கோவிட்' பாதிப்பாகவும் எடுத்துக்கொள்ள வேண்டாம். எந்த வைரஸ் தொற்றும் நம் உடலை விட்டு நீங்கிய பிறகும் அது ஏற்படுத்திய வீக்கம் மெள்ள மெள்ளதான் குறையும்.

மேற்குறிப்பிட்ட எதுவுமே பலனளிக்கவில்லை, இருமல் தொடர்கிறது என்ற பட்சத்தில் மருத்துவரை அணுகி உங்களுக்கு 'செகண்டரி பாக்டீரியல் இன்ஃபெக்ஷன்' ஏதேனும் வந்திருக்கிறதா என்பதை எக்ஸ் ரே எடுத்துப் பார்த்து உறுதிசெய்துகொள்ளலாம். அது உறுதியானால் மருத்துவர் உங்களுக்கு வாய்வழியாக எடுத்துக்கொள்ளும் ஆன்டி பாக்டீரியல் மருந்து அல்லது நரம்புவழியே செலுத்திக்கொள்ளும் ஊசியைப் பரிந்துரைப்பார். அதில் நல்ல நிவாரணம் தெரியும். ஒன்றிரண்டு வாரங்கள் பொறுத்திருந்து பார்த்துவிட்டு மருத்துவரை நேரில் அணுகுங்கள்.