Published:Updated:

Doctor Vikatan: குழந்தைக்கு வயிற்றுப்போக்கு; அதற்காக டெங்கு டெஸ்ட் எடுக்கச் சொல்வது ஏன்?

Dengue | Mosquito (Representational Image)
News
Dengue | Mosquito (Representational Image) ( Pixabay )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: குழந்தைக்கு வயிற்றுப்போக்கு; அதற்காக டெங்கு டெஸ்ட் எடுக்கச் சொல்வது ஏன்?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Dengue | Mosquito (Representational Image)
News
Dengue | Mosquito (Representational Image) ( Pixabay )

என் குழந்தைக்கு 6 வயது. தொடர்ந்து சில நாள்களாக வாந்தியும் வயிற்றுப்போக்கும் இருந்தது. ஃபுட் பாய்சன், வயிறு தொடர்பான பிரச்னையாக இருக்கலாம் என மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம். அவர் டெங்கு டெஸ்ட் எடுக்கச் சொன்னார். வயிற்றுப்போக்கு டெங்கு அறிகுறியாக இருக்குமா?

- ஸ்வாதி (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் சஃபி சுலைமான்
மருத்துவர் சஃபி சுலைமான்

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த, பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவர் சஃபி.

``எத்தனை நாள்களாக உங்கள் குழந்தைக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது என்ற விவரம் இல்லை. இப்போது டெங்கு நோய்த்தொற்று பரவலாக இருப்பதை அறிவீர்கள். ஏடிஸ் கொசுக்களால் இந்தத் தொற்று ஏற்படுகிறது. இந்த நோயின் வெளிப்பாடு வாந்தியாகவோ, வயிற்றுப்போக்காகவோகூட இருக்கலாம். டெங்கு பாதிப்பில் ரத்தத்தில் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். தவிர குழந்தையின் உடலில் நீர்ச்சத்தும் குறைவாக இருக்கும்.

காய்ச்சலுடன், வாந்தி, வயிற்றுப்போக்கின் காரணமாக குழந்தைக்கு நீர்ச்சத்து குறைவதும் சேர்ந்துகொண்டால், மிகவும் ஆபத்தான நிலைக்குப் போகும் அபாயம் உண்டு.

அதனால் குழந்தைக்கு முதலில் டெங்கு பாதிப்பு இருக்கிறதா என்பதைப் பார்த்துவிட்டு, பிறகு மற்ற காரணங்களைப் பார்க்கலாம் என உங்கள் மருத்துவர் நினைத்திருக்கலாம். தொற்றுநோய் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

Mosquito (Represetational Image)
Mosquito (Represetational Image)
Pixabay

மிக முக்கியமான பாதிப்பான டெங்கு இல்லை என்பது உறுதியானால், குழந்தையின் வாந்தி, வயிற்றுப்போக்கு பிரச்னைகளுக்கு வேறு சாதாரண காரணங்கள் இருக்கின்றனவா என பார்க்க அவர் முடிவுசெய்திருக்கலாம். எனவே உங்கள் மருத்துவர் அறிவுறுத்தியதில் எந்தத் தவறும் இல்லை. நீங்கள் பயமின்றி குழந்தைக்கு டெங்கு பரிசோதனை செய்து பார்க்கலாம்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?