Published:Updated:

சத்தான உணவு சாப்பிடவில்லை என்றால் விழித்திரைக்கு என்ன ஆகும்? கண்கள் பத்திரம் - 16

Eye Issues (Representational Image) ( Photo by Towfiqu barbhuiya on Unsplash )

``பாராஃபோவியல் டெலங்ஜியெடேசியா (Parafoveal Telangiectasia (PFT)... மருத்துவர்கள் மட்டுமே அறிந்த வார்த்தை இது. ரெட்டினா எனப்படும் விழித்திரைக்கு, போதுமான ஊட்டச்சத்து கிடைக்காமல் போவதால் ஏற்படும் பிரச்னை இது. நம் கண்கள்தான் கேமரா என்றால் கேமராவில் உள்ள ரோல் போன்றது விழித்திரை.''

சத்தான உணவு சாப்பிடவில்லை என்றால் விழித்திரைக்கு என்ன ஆகும்? கண்கள் பத்திரம் - 16

``பாராஃபோவியல் டெலங்ஜியெடேசியா (Parafoveal Telangiectasia (PFT)... மருத்துவர்கள் மட்டுமே அறிந்த வார்த்தை இது. ரெட்டினா எனப்படும் விழித்திரைக்கு, போதுமான ஊட்டச்சத்து கிடைக்காமல் போவதால் ஏற்படும் பிரச்னை இது. நம் கண்கள்தான் கேமரா என்றால் கேமராவில் உள்ள ரோல் போன்றது விழித்திரை.''

Published:Updated:
Eye Issues (Representational Image) ( Photo by Towfiqu barbhuiya on Unsplash )

தினமும் ஒரு கீரை, இரண்டு பங்கு காய்கறிகள், ஒரு பங்கு பழங்கள், கொஞ்சம் நட்ஸ்... இப்படிச் சாப்பிடுவதுதான் பேலன்ஸ்டு டயட் என வலியுறுத்தப்படுகிறது. எத்தனை பேர் அதைப் பின்பற்றுகிறோம் என்பதுதான் கேள்வியே. ``காய்கறிகள், கீரைகள், நட்ஸ் சாப்பிடுவதைத் தவிர்ப்பதால் பாதிக்கப்படும் உறுப்புகளில் பிரதானமானவை கண்கள். பார்வைக்கான பிரதான பகுதியான விழித்திரைக்கு போதிய ஊட்டமில்லாவிட்டால், மெள்ள மெள்ள பார்வை குறைந்து, ஒரு கட்டத்தில் முற்றிலும் பறிபோகலாம்'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த விழித்திரை மருத்துவர் வசுமதி வேதாந்தம்.

விழித்திரைக்கு போதுமான ஊட்டம் கிடைக்காததால் ஏற்படக்கூடிய முக்கியமான பிரச்னை குறித்தும், அதன் அறிகுறிகள், தீர்வுகள் குறித்தும் பேசுகிறார் அவர்.

Eyes (Representational Image)
Eyes (Representational Image)
Pixabay

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``பாராஃபோவியல் டெலங்ஜியெடேசியா (Parafoveal Telangiectasia (PFT)... மருத்துவர்கள் மட்டுமே அறிந்த வார்த்தை இது. ரெட்டினா எனப்படும் விழித்திரைக்கு, போதுமான ஊட்டச்சத்து கிடைக்காமல் போவதால் ஏற்படும் பிரச்னை இது. நம் கண்கள்தான் கேமரா என்றால் கேமராவில் உள்ள ரோல் போன்றது விழித்திரை. அதன் மையப்பகுதியை மேகுலா என்போம். அந்த மேகுலாவின் மையப்பகுதிதான் ஃபோவியா.

அந்தப் பகுதியின் வழியேதான் நாம் படிக்கிறோம், எழுதுகிறோம். அதைச் சுற்றியுள்ள ரத்தக்குழாய்கள் சுருண்டுபோவதாலும், ரத்தம் கசிவதாலும், தழும்பாவதாலும் பார்வைத் திறன் குறையத் தொடங்கும். நேர்க்கோடுகள் எல்லாம் வளைந்ததுபோல தெரியும். இந்தப் பிரச்னை நீரிழிவுக்காரர்களுக்கு மிகவும் சகஜம். அதிலும் 40 வயதுக்கு மேலான பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`பார்வை சரியா தெரிய மாட்டேங்குது... அடிக்கடி கண்ணாடி மாத்தியாச்சு... சுகர் இருக்கிறதால `டயாபட்டிக் ரெட்டினோபதி' இருக்குமோனு டெஸ்ட் பண்ணினா, அதுவும் இல்லை. ஆனாலும், பார்வையில என்னதான் பிரச்னைனு தெரியலை' என்ற புகாரோடு மருத்துவரிடம் வருவார்கள். இப்படிப்பட்ட அறிகுறிகளுடன் வருவோருக்கு `ஆப்டிகல் கோஹெரன்ஸ் டோமோகிராபி' (OCT ) எனப்படும் டெஸ்ட்டை செய்து பார்த்தால்தான் பாராஃபோவியல் டெலங்ஜியெடேசியா இருப்பதை உறுதிசெய்ய முடியும். பாதிப்பு உறுதியானதும் இந்த நபர்களுக்கு சத்து மாத்திரைகளைப் பரிந்துரைப்பார் கண் மருத்துவர்.

விழித்திரை மருத்துவர் வசுமதி
விழித்திரை மருத்துவர் வசுமதி

அதாவது, விழித்திரைக்கு ஊட்டம் தரக்கூடிய லூட்டின் மற்றும் ஸியாஸாந்தைன் மாத்திரைகளை எடுத்துக்கொண்டால்தான் பிரச்னை சரியாகும். தவிர, ஆம்ஸ்லெர் சார்ட் (Amsler's Chart ) பயன்படுத்தி பார்வைத் திறனைப் பரிசோதிக்கும் முறையை உங்கள் விழித்திரை மருத்துவர் கற்றுத் தருவார். குட்டிக்குட்டி கட்டங்கள் போட்ட இந்த அட்டையை வலது கண்ணுக்கு, இடது கண்ணுக்கு என மருத்துவர் குறித்துத் தருவார். ரீடிங் கிளாஸ் அணிந்துகொண்டு இந்த சார்ட்டை பயன்படுத்தி, ஒரு கண்ணை மூடி, இன்னொரு கண்ணால் பார்த்து சம்பந்தப்பட்ட நபரே தன் பார்வைத் திறனை பரிசோதித்துக்கொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாராஃபோவியல் டெலங்ஜியெடேசியாவால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு `கொராய்டல் நியோவாஸ்குலர் மெம்ப்ரேன் (Choroidal neovascular membrane) எனப்படும் பாதிப்பும் வரலாம். இது வந்தால் பார்வைத்திறன் மேலும் குறையும். இதை டைலெஸ் ஆஞ்சியோகிராபி (dyeless angiography) மூலம், அதாவது ஊசியே போடாமல் செய்யப்படுகிற ஆஞ்சியோகிராபி மூலம்தான் கண்டுபிடிக்க முடியும்.

Eye health
Eye health

விழித்திரையை நான்காகப் பிரித்து அதில் எந்தப் பகுதியில் பாதிப்புள்ளது என்று கண்டறிந்து அதற்கு ஊசி போட்டு குணப்படுத்த முடியும். ஆனாலும், சிறு வயதில் இருந்தது போல பார்வைத்திறன் முழுமையாகத் திரும்ப வாய்ப்பில்லை.

தவிர்க்க முடியுமா?

நீரிழிவும் உயர் ரத்த அழுத்தமும் உள்ளவர்களுக்கு இந்த பாதிப்புக்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் இந்த இரண்டும் வராதபடி வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். நீரிழிவும் ரத்த அழுத்தமும் உள்ளவர்கள், அந்த இரண்டையும் கட்டுக்குள் வைத்திருக்க சரியான சிகிச்சை, உணவுப்பழக்கம், உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

Healthy food
Healthy food

உணவுப் பழக்கம் ரொம்ப முக்கியம்

சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு பச்சைக் காய்கறிகள், கீரைகள், வால்நட் போன்றவற்றைக் கொடுத்துப் பழக்க வேண்டும். பொன்னாங்கண்ணிக்கீரை, வைட்டமின் ஏ சத்துள்ள மஞ்சள் நிறக் காய்கறிகள், பழங்கள் கண்களின் ஆரோக்கியத்துக்கு அவசியமானவை.


- பார்ப்போம்

- ராஜலட்சுமி

பார்வை தொடர்பான உங்கள் கேள்விகளை எங்களுக்கு அனுப்புங்கள். பதில் சொல்லக் காத்திருக்கிறார் டாக்டர் வசுமதி வேதாந்தம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism