Published:Updated:

Doctor Vikatan: தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் உயிரிழந்த இயக்குநர்; இதை எப்படிப் புரிந்துகொள்வது?

மனோகர்
News
மனோகர்

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் உயிரிழந்த இயக்குநர்; இதை எப்படிப் புரிந்துகொள்வது?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

மனோகர்
News
மனோகர்

பிரபல தமிழ் சினிமா இயக்குநர் ஆர்.என்.ஆர் மனோகர் கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந் திருக்கிறார். அவர் ஏற்கெனவே இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டவர். 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டால் உயிரிழப்பும், தொற்று தீவிரமாவதும் தடுக்கப்படும் என்றுதானே தடுப்பூசிக்கான விழிப்புணர்வு செய்கிறார்கள்..? தடுப்பூசி போட்டாலும் உயிரிழக்கலாம் என்பதை எப்படிப் புரிந்துகொள்வது?

- ஜீவன் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் விஜயலட்சுமி
மருத்துவர் விஜயலட்சுமி

``பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி.

கோவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதன் மூலம் ஒருவேளை தொற்று ஏற்பட்டாலும் அதன் தீவிரமும் இறப்பு அபாயமும் குறையும் என்பது உண்மைதான். ஆனால், இந்தப் பாதுகாப்பானது இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டதிலிருந்து இரண்டு வாரங்கள் கழித்தே சாத்தியம் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் அரிதாகச் சிலருக்கு முழுமையான எதிர்ப்பு சக்தி உருவாகாமல் போகலாம். வயதானவர்கள், கட்டுப்பாடற்ற சர்க்கரைநோய் உள்ளவர்கள், புற்றுநோயாளிகள், கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் உள்ளவர்கள், ஆட்டோஇம்யூன் பாதிப்புகள் உள்ளவர்கள் போன்றோரில் சிலருக்கு இப்படி நிகழலாம்.

இதைத் தவிர்க்கவே முடியாது. தடுப்பூசியானது எதிர்ப்பு சக்தியை உருவாக்க வேண்டும் என்றால் அதற்கேற்ப நம் நோய் எதிர்ப்பாற்றல் மண்டலம் இயங்க வேண்டும்.

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டது மட்டுமே தொற்றிலிருந்து 100 சதவிகிதம் நமக்குப் பாதுகாப்பு தரும் என்ற எண்ணத்தில் கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாமலிருப்பது தவறு. இன்னும் சில காலத்துக்கு முகக்கவசம் அணிவது, சானிடைசர் உபயோகிப்பது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது போன்றவற்றை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.

Covid-19 Vaccine
Covid-19 Vaccine
AP Photo

இன்னும் நம்மிடையே ஒரு டோஸ் தடுப்பூசிகூட போட்டுக்கொள்ளாதவர்கள் இருக்கிறார்கள். அனைத்து மக்களும் இரண்டு டோஸ் தடுப்பூசியையும் போட்டுக்கொண்டாலே, `ஹெர்டு இம்யூனிட்டி' எனப்படும் குழு எதிர்ப்பு சக்தி உருவாவதன் விளைவாக ரிஸ்க் வளையத்தில் உள்ளவர்களும் பாதுகாக்கப்படுவார்கள். அப்படி எல்லோரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவரை அதன் நோக்கமும் வெற்றியடையாது."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?