Published:Updated:

புத்தம் புது காலை : ஆண்கள், பெண்கள் என எல்லோரும் ஏன் சென்ட், பெர்ஃப்யூம்களை விரும்புகிறார்கள்?

பெர்ஃப்யூம்

‘Per fumus’ என்றால் புகைக்குள் கலந்த பொருள் என்பது பொருள். பெர்ஃயூம்களின் மூலப்பொருள் எதுவென்றாலும், அவற்றின் நறுமணத்தைப் பொறுத்து, Fragrance wheel சக்கரத்தை அடிப்படையாகக் கொண்டு, டாப் நோட், மிடில் நோட், பேஸ் நோட் என்று தரம் பிரிக்கிறார்கள் வாசனை நிபுணர்கள்.

புத்தம் புது காலை : ஆண்கள், பெண்கள் என எல்லோரும் ஏன் சென்ட், பெர்ஃப்யூம்களை விரும்புகிறார்கள்?

‘Per fumus’ என்றால் புகைக்குள் கலந்த பொருள் என்பது பொருள். பெர்ஃயூம்களின் மூலப்பொருள் எதுவென்றாலும், அவற்றின் நறுமணத்தைப் பொறுத்து, Fragrance wheel சக்கரத்தை அடிப்படையாகக் கொண்டு, டாப் நோட், மிடில் நோட், பேஸ் நோட் என்று தரம் பிரிக்கிறார்கள் வாசனை நிபுணர்கள்.

Published:Updated:
பெர்ஃப்யூம்
ரோஜாவை நீ கொடுத்த கரத்தில் எப்போதும் அத்தர் நித்தியமாய் இருக்கிறது!
மௌலானா ஜலாலுதீன் ரூமி.

மனிதனின் ஐம்புலன்களில் ஒன்றாக இருப்பது நுகர்தல். உணவின் சிறப்பு, சுவை என்பது போல, சப்தங்களின் சிறப்பு, இசை என்பது போல, நுகர்தலின் சிறப்பு, வாசனையும் அதை நுகர்தலும்தான்.

உண்மையில் மனிதனின் மனநிலையை மாற்றுவதில் நறுமணங்களுக்கு முக்கியப் பங்குண்டு. ஒரு வாசனை திரவியமோ… ஏன், ஒரு ஊதுபத்தியோ அல்லது ரூம்-ஸ்பிரேவோ நமது அறையை கணப்பொழுதில் தெய்வீகம் நிறைந்ததாய், ரம்யமாய் மாற்றிவிடுகிறதல்லவா?

இப்படி புனிதத்தையும், தெய்வீகத்தையும் குறிக்கும் வாசனை திரவியங்களை முதன்முதலாக உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் எகிப்தியர்கள். கிமு 1500-களிலேயே தங்களது வழிபாடுகளில் மட்டுமன்றி இறந்தவர் உடலை சுத்தப்படுத்தவும், எம்பாமிங் (embalming) போன்ற மரணச் சடங்குகளிலும் எகிப்தியர்கள் வாசனை திரவியங்களை பயன்படுத்தியிருக்கின்றனர். பிற்பாடு இவை எகிப்திலிருந்து கிரேக்க, ரோமானிய மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கும், ஆசிய நாடுகளுக்கும் பரவியிருக்கிறது. உலகமெங்கும் பரவினாலும் இதை ஆராதித்தவர்கள் அரேபியர்கள்தான் என்பதால், அங்குதான் இந்த நறுமணத் தொழில் ஆரம்பத்தில் செழித்து வளர்ந்திருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

'அலெம்பிக்' எனும் பிரத்தியேக பீங்கான் பானைகளில், பூ இதழ்களையும், மூலிகை இலைகளையும், நறுமண வேர்களையும் கொதிக்க வைத்து, அவற்றின் நறுமண எண்ணெய்களைப் பிரித்தெடுக்கும் முறைகளையும் தோற்றுவித்ததோடு, இவர்கள்தான் அதனை வியாபாரமும் செய்திருக்கிறனர். அரேபியர்களுடன் இந்தியர்கள் பண்டமாற்று வியாபாரம் மேற்கொண்டதால், கிமு 600-களில் இவை இந்தியாவிற்கு வந்தது என்றும், இன்று நமது திருமண மற்றும் சுப காரியங்களில் முன்னிற்கும் ‘ரோஸ் வாட்டர்’ பூஜைகளின்போது பயன்படுத்தப்படும் சாம்பிராணி உருவானதும் அங்கிருந்துதான் என்கிறார்கள்.

பெர்ஃப்யூம்
பெர்ஃப்யூம்

இன்று நாம் உபயோகிக்கும் உடலில் பூசத்தக்க வாசனை திரவியங்களை மெசபடோமியாவைச் சேர்ந்த தாபூத்தி ப்லேட்கலீம் என்ற பெண், பூக்கள் மற்றும் நறுமண எண்ணெய்கள் கொண்டு முதன்முதலாகத் தயாரித்ததாக குறிப்புகள் சொல்கின்றன. இந்திய ஆயுர்வேத மருத்துவத்திலும் ‘அத்தர்’ சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டதாக சுஷ்சுருத, சாரக சம்ஹிதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாசனை திரவியங்களை விற்கத் துவங்கிய அரேபியர்களிடமிருந்து ‘சில்க் ரோட்’ வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணித்து, பலநாடுகளை சென்றடைந்த இந்த திரவியங்கள், ஹங்கேரி வாட்டர், பெர்ஃப்யூம் கோர்ட் என்று ஐரோப்பாவின் அந்தஸ்து மிக்க வாசனை திரவியங்களாக மாற்றம் கொண்டது. இன்று பிரான்ஸ் போன்ற நாடுகள் வாசனை திரவிய விற்பனையாலேயே உயர்ந்திருப்பதோடு, ‘இம்பீரியல் மெஜஸ்டிக்’, ‘சேனல் 5’ என்று லட்சங்களில் விற்கும் பெர்ஃயூம்களையும் உருவாக்கி வருகின்றன.

பொதுவாக Perfume எனும் வாசனை திரவியங்களை, இவற்றைத் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களைக் கொண்டு ஃப்ளோரல், ஃப்ரூட்டி, ஓசியானிக், உட்டி, க்ரீன்ஸ், ஓரியன்ட்டல் என வகைப்படுத்துகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘Per fumus’ என்றால் புகைக்குள் கலந்த பொருள் என்பது பொருள். பெர்ஃயூம்களின் மூலப்பொருள் எதுவென்றாலும், அவற்றின் நறுமணத்தைப் பொறுத்து, Fragrance wheel சக்கரத்தை அடிப்படையாகக் கொண்டு, டாப் நோட், மிடில் நோட், பேஸ் நோட் என்று தரம் பிரிக்கிறார்கள் வாசனை நிபுணர்கள். இவற்றில் டாப் நோட் என்பது அடித்தவுடன் அதிக வாசனை வீசி, சற்று நேரத்தில் காணாமல் போவது. பேஸ் நோட் என்பது மெதுவாகத் தொடங்கி நீண்டநேரம் வரை நறுமணம் தரும் திரவியங்கள். இவை இரண்டிற்கும் இடைப்பட்டவை மிடில் நோட் திரவியங்கள்.

எனவே, ஸ்ப்ரே செய்யும்போது இருக்கும் வாசனை, ஸ்ப்ரே செய்து முடித்த சிறிது நேரத்தில் மாறக்கூடும் என்பதால் பெர்ஃப்யூம்களை வாங்கும்போது இந்த நோட்களை கவனித்து வாங்க வேண்டும் என்பதுடன், நமது தேவையைப் பொறுத்து இவற்றுள் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதற்கு சில வழிமுறைகளைக் கூறுகிறது வாசனை அறிவியல்.

பெர்ஃப்யூம்
பெர்ஃப்யூம்

இவற்றுள் பாரம்பரிய திரவியங்களில் பூக்கள், வேர்கள், மரங்களின் வாசனை தனியாகவோ அல்லது ஒன்றுசேர்ந்தோ இருக்க, நவீன பெர்ஃயூம்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவித வாசனைகளைத் தாங்கி வருகின்றன. ஆனால் இவை அனைத்திற்கும் மூலம் ஒன்றுதான். உண்மையில் வாசனை எண்ணெய்களுடன், ஆவியாகும் எத்தனால் (ஆல்கஹால்) மற்றும் தண்ணீர் சேர்க்கப்பட்டுத்தான் அனைத்து வாசனை திரவியங்களும் தயாரிக்கப்படுகின்றன என்பதால் இவற்றிலுள்ள வாசனை எண்ணெய்யின் செறிவு அளவைப் பொறுத்து இவை ஐந்து வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

இதில் முதலாவது ப்யூர் பெர்ஃப்யூம். இந்த ப்யூர் பெர்ஃப்யூம் என்பது 30% வரை நல்ல வாசனை செறிவுள்ளது என்பதுடன் இதன் அதிக மணம் காற்றில் கலந்து, அந்த இடத்தையே பல மணி நேரங்கள் பெர்ஃப்யூம் கோர்ட்டாக மாற்றிவிடும் வல்லமை கொண்டவை. இவற்றை எளிதாக அடையாளம் காண, கனமான பாட்டில்களில் perfume என்ற லேபிள்களுடன் இவை விற்கப்படுகின்றன.

மேற்சொன்ன ப்யூர் பெர்ஃப்யூம் நறுமணம் மிக்கது என்றாலும், சிலசமயம் இதன் கடினமான மணம் சிலருக்கு தலைவலியை உண்டாக்கும் என்பதால் சற்றே அதன் செறிவைக் குறைத்து, யூடி-பெர்ஃயூம், யூடி-கோலோன், யூடி-டாய்லெட், யூடி-ஃப்ரெய்ச் என்ற பெயர்களில் விற்பனை செய்து வருகிறார்கள்.

பெர்ஃப்யூம் தயாரிப்பில் புகழ்பெற்ற யூ (Eau) என்ற வார்த்தைக்கு பிரெஞ்சு மொழியில் தண்ணீரிலிருந்து என்று பொருளாகும். இதில் யூடி-பெர்ஃப்யூம் எனப்படும் நாம் அன்றாடம் உபயோகிக்கும் சென்ட் பாட்டில்களில் 15-20% வரை வாசனை எண்ணெயும், மீதம் ஆல்கஹால் மற்றும் தண்ணீரும் கலந்துள்ளது. இந்தவகை பர்ஃப்யூம்கள் மெல்லிய நறுமணத்தை 6-லிருந்து 8 மணி நேரம் வரை அளிக்குமாம்..

யூடி-டாய்லெட் எனப்படும் அடுத்தவகையைச் சேர்ந்தவை, 5-15% வாசனை எண்ணெய் கொண்டவை என்பதுடன், இவை லேசான நறுமணத்தை 2 முதல் 4 மணிநேரங்களுக்கு அளிக்குமாம். பொதுவாக யூடி-டாய்லெட் என்பது பகல் பொழுதிற்கானது என்றால், யூடி பெர்ஃயூம் என்பது இரவிற்கானது எனலாம்.

பெர்ஃப்யூம்
பெர்ஃப்யூம்

யூடி-கோலோன் என அழைக்கப்படும் திரவியங்களில் குறைந்த அளவு, அதாவது 2-4% வாசனை எண்ணெய் உள்ளது என்றும், அதேபோல யூடி-ஃப்ரெய்ச் என்ற ஸ்ப்ரேக்களில் 1-2% அளவு வாசனை எண்ணெய் மட்டுமே உள்ளது என்பதால் இவை இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே வாசனையை இழந்துவிடும் என்பதால் விலையும் குறைவாகவே இருக்கும்.

இப்படி வாசனை பெர்ஃப்யூம்களை வகைப்படுத்தியிருக்கும் மேற்கத்திய வாசனை நிபுணர்கள், அவற்றைப் பயன்படுத்தும் வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறார்கள். பெர்ஃயூம்களை உபயோகப்படுத்தும் போது, துணிகளில் கறைகளை ஏற்படுத்தலாம் என்பதால் நேரடியாக உடலில் பூசிக்கொள்வதும், அதிலும் குளித்தவுடன் ஈரம் காய்வதற்கு முன்னமே இந்த திரவியங்களை காதுகளுக்குப் பின்பக்கம், கழுத்திற்குப் பின்னால், மணிக்கட்டின் உட்பக்கம், முழங்கை மற்றும் முழங்கால் ஆகிய முக்கிய இடங்களில் பூசிக்கொள்வதும் முறை என்கிறார்கள்.

அதிலும் பூ வாசம் புறப்படும் பெண்கள், தங்களது மகிழ்ச்சியை வெளிக்காட்ட பொன் நகைகளை காட்டிலும் பெர்ஃயூம்களைத் தான் புன்னகையுடன் அணிந்து கொள்கின்றனர் என்றும், அதேபோல் ஒரு ஆணை ஜென்டில்மேன் ஆக்குவது தேர்ந்தெடுத்த பெர்ஃயூம்களே என்றும் கூறும் நவீன உலகம், இவற்றை அத்தியாவசிய அலங்காரப் பொருட்களில் ஒன்றாகவே சேர்த்துள்ளது.

புத்தம் புது காலை : ஆண்கள், பெண்கள் என எல்லோரும் ஏன் சென்ட், பெர்ஃப்யூம்களை விரும்புகிறார்கள்?

உண்மையில் வாசனை, நறுமணம், சுகந்தம் என்ற வார்த்தைகள் எப்போதும் மகிழ்வான தருணங்களுடனும், இனிய நினைவுகளுடனும் தொடர்புடையவை. இந்த வாசனைகளை நுகரும் ஆல்ஃபாக்ட்ரி திசுக்கள் அனைத்தும் நம் மனதோடு தொடர்புடையவை. அதனால்தான் நாம் நுகரும்போது, நமது மூக்கில் உள்ள ஆல்ஃபாக்ட்ரி திசுக்கள், ஆல்ஃபாக்ட்ரி நரம்புகளின் வழியாக வாசனைகளை மூளைக்கு எடுத்துச் செல்ல, நொடிப்பொழுதில் அவற்றை கிரகித்து, நமது உணர்ச்சிகளையும், மனநிலையையும் மாற்றிவிடுகிறது நம் மனமாகிய மூளை!

வாசனை திரவியங்களை வாங்கும்போது நாம் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் சேர்த்தே தான் வாங்குகிறோம் என்பது உண்மைதானே? யூடி-பெர்ஃயூம் தொடங்கி, யூடி-கோலோன் வரை, நம்மை, நமது நினைவுகளைக் கடத்திச் செல்லும் இந்த இனிய திரவியங்களுடன் மன மகிழ்ச்சி எனும் நறுமணமும் சேர்ந்தே பரவட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism