Published:Updated:

Doctor Vikatan: பிரசவத்துக்குப் பிறகு குறைந்துபோன தாம்பத்திய ஆர்வம்; தீர்வு உண்டா?

Couple (Representational Image) ( Photo by Andrea Piacquadio from Pexels )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: பிரசவத்துக்குப் பிறகு குறைந்துபோன தாம்பத்திய ஆர்வம்; தீர்வு உண்டா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:
Couple (Representational Image) ( Photo by Andrea Piacquadio from Pexels )

குழந்தை பிறந்து 6 மாதங்கள் ஆகின்றன. பிரசவத்துக்குப் பிறகான தாம்பத்திய உறவு, முன்பு போல இல்லை. ஒவ்வொரு முறையும் வலியும் எரிச்சலும் அதிகமிருக்கிறது. இதற்கு என்ன காரணம்? இதற்கு பயந்துகொண்டே உறவைத் தவிர்க்கிறேன். கணவருடன் சண்டை வருகிறது. என்ன பிரச்னையாக இருக்கும்?

- பாரதி (விகடன் இணையத்திலிருந்து)

விஜயா கணேஷ்
விஜயா கணேஷ்

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவர் விஜயா கணேஷ்.

``குழந்தை பிறக்கும்போது பெண்ணின் வெஜைனா பகுதியானது சுருங்கி, விரிந்து, பலவித மாற்றங்களைச் சந்திக்கிறது. சிறிய பாதையின் வழியே குழந்தை வெளியே வரும்போது அந்தப் பகுதியில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பிறப்புறுப்புப் பாதை கிழிந்து போகலாம். அதை `வெஜைனல் டேர்' (Vaginal tear) என்று சொல்வோம். சில நேரம் மருத்துவர்கள் அந்தப் பகுதியைக் கீறி, டெலிவரி பார்க்க வேண்டியிருக்கலாம். அந்தக் காயங்கள் எல்லாம் ஆறுவதற்கு ஆறு மாதங்கள் ஆகலாம். அந்த நேரத்தில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வது அசௌகர்யமாக, வலி நிறைந்ததாக இருக்கலாம். பிரசவத்துக்குப் பிறகு குழந்தையைப் பார்த்துக்கொள்வது, தாய்ப்பால் ஊட்டுவது, தூக்கமில்லாதது எனப் பல காரணங்களால் உங்கள் உடல் களைத்துப் போயிருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதனால் தாம்பத்திய உறவில் ஆர்வமில்லாமல் போகலாம். மிக முக்கியமாக, குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதால் உங்கள் உடலில் ஏற்படும் சில ஹார்மோன் மாற்றங்களும் இந்த ஈடுபாடின்மைக்குக் காரணமாகலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முழுமையான, நிறைவான தாம்பத்திய உறவுக்கு, பெண்ணுறுப்புக் கசிவு மிக முக்கியம். மேற்குறிப்பிட்ட காரணங்களால் அந்தக் கசிவு இல்லாமல் வறண்டு போனாலும் உறவு வலிநிறைந்ததாக உணரப்படலாம்.

Woman (Representational Image)
Woman (Representational Image)
Photo by cottonbro from Pexels

பிரசவமாகி ஆறு மாதங்கள்தான் ஆவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். போகப் போக இந்தப் பிரச்னை உங்களுக்குச் சரியாகிவிடும். ஒருவேளை அப்படி ஆகாமல் தொடர்ந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism