Published:Updated:

Doctor Vikatan: சிவப்பழகையும் இளமைத்தோற்றத்தையும் தருமா குங்குமாதி தைலம்?

Representational Image ( Photo by Mikhail Nilov from Pexels )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: சிவப்பழகையும் இளமைத்தோற்றத்தையும் தருமா குங்குமாதி தைலம்?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:
Representational Image ( Photo by Mikhail Nilov from Pexels )

ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும் குங்குமாதி தைலம் சருமத்தை சிவப்பாக்க உதவும் என்பது உண்மையா? அதை யார், எப்படி, எப்போது உபயோகிக்க வேண்டும்? சருமத்தை இளமையாக, பொலிவாக வைத்திருக்க ஆயுர்வேதத்தில் வேறு மருந்துகள் உள்ளனவா?

- ஶ்ரீவித்யா (விகடன் இணையத்திலிருந்து)

அ. முகமது சலீம்
அ. முகமது சலீம்

பதில் சொல்கிறார், கடையநல்லூரைச் சேர்ந்த தலைமை ஆயுர்வேத மருத்துவர் அ.முகமது சலீம்.

``யூடியூபை திறந்து குங்குமாதி‌ தைலம் என்று தேடினால் யூடியூப் யுனிவர்சிட்டியிலிருந்து தகவல்கள் கொட்டும். அதில் எது சரி, எது பொய் என்று கண்டறிவதுதான் மக்களுக்கான சவால்.

ஆட்டுப்பாலுடன் நல்லெண்ணெய், குங்குமப்பூ, கொம்பரக்கு, அதிமதுரம் போன்றவை அடங்கிய ஈரமான மூலிகை பேஸ்ட் , தாமரை, ஆல், மஞ்சட்டி, சந்தனம், வெட்டிவேர், பேய்ப்புடல் போன்ற மூலிகை குடிநீர் சேர்த்து ஆயுர்வேத தைலங்கள் காய்ச்சும் முறைப்படி தயாரிக்கப்படுகிற சக்திவாய்ந்த செறிவூட்டப்பட்ட ஒட்டுமொத்தமே குங்குமாதி தைலம். அழகுசாதன பொருள்களை அவற்றின் கவர்ச்சிகரமான லேபிளையோ பேக்கிங்கையோ வைத்து எடை போடக்கூடாது. ஆயுர்வேத மருந்து என்ற லைசென்ஸ் நம்பர் இல்லாத குங்குமாதி தைலம் முழுக்க போலியாகவே இருக்க வாய்ப்புள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அசல் குங்குமாதி தைலத்தைப் பயன்படுத்தினால் முகம், முழு நிலவுபோல மாறும் என்று யோகரத்னகர ஆயுர்வேத நூல் சொல்கிறது. பருக்கள், கரும்புள்ளிகள், மங்கு உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கும் குங்குமாதி தைலம் பலன் தருவதாக ஆயுர்வேத நூல்கள் குறிப்பிடுகின்றன. சரும நிறத்தையும் மேம்படுத்தும் என்று அஷ்டாங்க ஹிருதயம் ஆயுர்வேத நூல் சாட்சி சொல்கிறது. ஆனால், ஏழே நாள்களிலோ, இத்தனை நாள்களிலோ சிகப்பழகு என்றெல்லாம் மாய வார்த்தைகளை எல்லாம் இந்த மருந்தை ஆயுர்வேத நூல்கள் பரிந்துரைக்கவில்லை.

Skin care
Skin care
Representational Image

ஆயுர்வேதத்தின்படி, சரும ஆரோக்கியத்தையும் இளமையையும் ஈரப்பதத்தின் சமநிலை (சமநிலையில் உள்ள கபம் ), சருமத்தின் பல்வேறு ரசாயன மற்றும் ஹார்மோன் எதிர்வினைகளை ஒருங்கிணைக்கும் வளர்சிதை மாற்ற வழிமுறைகளின் செயல்பாடு (சமநிலையில் உள்ள பித்தம் ) மற்றும் சருமத்தின் வெவ்வேறு அடுக்குகளுக்கு ரத்தம் மற்றும் ஊட்டச்சத்துகளின் திறமையான சுழற்சி (வாதத்தின் சமநிலை) எனப் பல காரணிகள் தீர்மானிக்கின்றன.

குங்குமாதி தைலத்தைப் பயன்படுத்தும் முறையையும் பரிந்துரைக்கிறது ஆயுர்வேதம். அதன்படி,

- திரிபலா கஷாயம் கொண்டு முகத்தை நன்கு கழுவிய பின்னர் அதைப் பயன்படுத்தலாம்.
- துணை மருந்தாக நால்பாமராதி தைலம், ஏலாதி தைலம், தூர்வாதி தைலம் கலந்தும் பயன்படுத்தலாம்.

- குங்கிலிய வெண்ணெயுடன் கலந்தும் பயன்படுத்தலாம்.

- பித்த உடம்புக்கு மகா திக்த கிருதம் என்கிற நெய் மருந்துடன் பயன்படுத்தலாம்.
- தயிர் தெளிவு, ஆட்டுப்பால், பால் ஏடு போன்றவற்றுடன் கலந்தும் பயன்படுத்தலாம்.

- பொதுவாக, இரவு படுக்கைக்குச் செல்லும் முன் இந்தத் தைலத்தை ஐந்து துளிகள் எடுத்து முகத்தில் மசாஜ் செய்யலாம்.
- ஆயுர்வேத மருத்துவரை அணுகி, உங்கள் உடலின் தன்மை தெரிந்து பயன்படுத்துவது நல்லது.

- எல்லாவற்றையும்விட முக்கியமாகக் கலப்படமற்ற தைலமாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்க வேண்டியது மிக முக்கியம்.

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?