Published:Updated:

காபி, கோலா குடித்தால் முடி உதிர்வு அதிகரிக்குமா? - நிபுணர் விளக்கம்!

காபி, கோலா குடித்தால் முடி உதிர்வு???

நமது உடல் என்பது ஒரு இயந்திரத்தைப் போன்றது. அதில் தினமும் பல பயோகெமிக்கல் செயல்பாடுகள் நடக்கிறது. caffeine மற்றும் சர்க்கரை அதிகம் கலந்த பானங்களை நாம் அளவுக்குமீறி பருகும்போது நமது உடம்பில் நடக்கும் பயோகெமிக்கல் செயல்பாடுகள் பாதிப்பு அடையும்.

காபி, கோலா குடித்தால் முடி உதிர்வு அதிகரிக்குமா? - நிபுணர் விளக்கம்!

நமது உடல் என்பது ஒரு இயந்திரத்தைப் போன்றது. அதில் தினமும் பல பயோகெமிக்கல் செயல்பாடுகள் நடக்கிறது. caffeine மற்றும் சர்க்கரை அதிகம் கலந்த பானங்களை நாம் அளவுக்குமீறி பருகும்போது நமது உடம்பில் நடக்கும் பயோகெமிக்கல் செயல்பாடுகள் பாதிப்பு அடையும்.

Published:Updated:
காபி, கோலா குடித்தால் முடி உதிர்வு???

`உன் தலைமுடி உதிர்வதைக்கூட தாங்க முடியாது அன்பே...' என்ற பாடலைக் கேட்டிருக்கிறீர்கள்தானே... ஆம்! ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அவரவருக்கு தங்களது தலைமுடி மீது எப்போதும் தனிபிரியம் உண்டு. அது உதிர்வதை யாராலும் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.

தலைமுடி உதிர்வு
தலைமுடி உதிர்வு
மாதிரிப்படம்

`இந்த எண்ணெய் தேய்த்தால் தலைமுடி நன்றாக வளரும். இந்த ஷாம்பூ பயன்படுத்தினால் தலைமுடி பார்க்க பளபளவென இருக்கும்' என்றெல்லாம் நாம் பார்த்துப் பார்த்து வளர்க்கும் தலைமுடி, சோடா, ஜூஸ், காபி, டீ போன்ற பானங்கள் குடிப்பதால் உதிரும் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?

பீஜிங்கில் உள்ள Tsinghua பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தங்களது ஆய்வில் 30% ஆண்களுக்கு குறிப்பிட்ட சில பானங்களைக் குடிப்பதால் வழுக்கை ஏற்படுகிறது என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வு ஆண்களை மட்டுமே வைத்து நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வுக் கட்டுரை Nutrients என்னும் இதழில் வெளியிடப் பட்டுள்ளது.

உணவியல் நிபுணர் ஶ்ரீமதி வெங்கடராமன்
உணவியல் நிபுணர் ஶ்ரீமதி வெங்கடராமன்

இந்த ஆய்வு குறித்து பெங்களூரைச் சேர்ந்த உணவியல் ஆலோசகர் ஶ்ரீமதி வெங்கடராமன் விளக்குகிறார்...

Nutrients இதழில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரையைப் பொறுத்தவரை, அது வெறும் சர்வே தானே தவிர அறிவியல் ஆய்வு இல்லை. இந்த ஆய்வில் கலந்துகொண்ட 13 - 29 வயது உள்ள ஆண்களில் எத்தனை பேர் சோடா, ஜூஸ், ஸ்போர்ட்ஸ் மற்றும் எனர்ஜி டிரிங்க்ஸ் உள்ளிட்ட சர்க்கரை மற்றும் கஃபைன் மிகுந்த பானங்களைப் பருகுகிறார்கள் என்றும், அவர்களின் மரபியல், உடல் எடை, நோய்கள், உணவுப்பழக்கங்கள், புகைப்பழக்கம் ஆகியவற்றையும் சர்வே எடுத்துள்ளனர்.

பொதுவாக எனர்ஜி டிரிங்க் பருகும்போது அதிலுள்ள கஃபைன் மற்றும் அதிகமான சர்க்கரைதான் நமது எனர்ஜியைக் கூட்டுகிறது. அதிக சர்க்கரை மற்றும் அதிக கஃபைன் நமக்கு முடி உதிர்வை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. சாதாரண காபியைவிட எனர்ஜி டிரிங்க்ஸில் கஃபைன் அதிக அளவில் உள்ளது. கோலாவை எடுத்துக்கொண்டால், அதில் 27 கிராம் சர்க்கரை உள்ளது. ஒரு டீஸ்பூன் சர்க்கரை என்பது 5 கிராம் என்றால் 27 கிராம் என்பது எவ்வளவு அதிகம் என யோசியுங்கள்.

சர்க்கரை
சர்க்கரை

ஆரோக்கியமாக இருக்கும் ஒரு மனிதர் ஒரு நாளைக்கு 5 முதல். 12 டீஸ்பூன் சர்க்கரை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. ஆனால், தாகம் எடுக்கிறது என்று கோலா அல்லது செயற்கை ஜூஸை நாம் ஒரு நாளைக்கு ஒன்று குடித்தாலே, அதிலேயே 5 டீஸ்பூன் சர்க்கரை நமது உடலுக்குள் சென்றுவிடும்.

நமது உடல் இயந்திரத்தைப் போன்றது. அதில் தினமும் பல பயோகெமிக்கல் செயல்பாடுகள் நடக்கும். கஃபைன் மற்றும் சர்க்கரை அதிகம் கலந்த பானங்களை நாம் அளவுக்குமீறி பருகும்போது நம் உடலில் நடக்கும் பயோகெமிக்கல் செயல்பாடுகள் பாதிக்கப்படும். உதாரணமாக ஒருவர் கேக், டோநட், கோலா பானங்கள் என அனைத்தையும் சிறு சிறு இடைவெளியில் சாப்பிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். இவற்றில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அவருக்கு அதிகமான எனர்ஜியை கூட்டும். இதனால் அதிக பயோகெமிக்கல் செயல்பாடுகள் நடந்து அவர்களின் ஹார்மோன்கள் பாதிப்படையும்.

காபி, கோலா குடித்தால் முடி உதிர்வு அதிகரிக்குமா? - நிபுணர் விளக்கம்!

பொதுவாக ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று கப் காபி எடுக்கும்போது எந்த பாதிப்பும் ஏற்படாது. அந்த அளவு அதிகரிக்கும்போது வீக்கம், கொழுப்பு அதிகரித்தல், ஹார்மோன் பாதிப்புகள் ஆகியவை ஏற்படும். இந்த பானங்களை அறவே தவிர்த்துவிட்டு, பழங்கள், காய்கறிகள் மற்றும் இளநீர் போன்ற இயற்கை பானங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதிக சர்க்கரை உட்கொள்ளும்போது பல் சொத்தை, உடல் பருமன் ஆகியவையும் ஏற்படும். மேலும் நாம் அதிக சர்க்கரை அல்லது கஃபைன் உட்கொள்ளும்போது அடுத்த அரை மணி நேரத்துக்கு சற்று அதிக எனர்ஜியுடன் இருப்போம். ஆனால், அரை மணி நேரம் கழித்து உடனடியாக நமது எனர்ஜி இறங்கி மன அழுத்தம், சோர்வு ஆகியவை ஏற்படும். இதனால் இந்த பானங்களை முடிந்தளவு தவிர்த்துவிட வேண்டும்.

காபி, கோலா குடித்தால் முடி உதிர்வு அதிகரிக்குமா? - நிபுணர் விளக்கம்!

முடி வளர்ச்சிக்கு எனத் தனியாக எந்த பானமும் கிடையாது. தானியங்கள், புரதச் சத்துள்ள பருப்பு வகைகள், வேர்க்கடலை, ராஜ்மா, கொண்டைக்கடலை, முட்டை, மீன் போன்றவை நல்ல கொழுப்புள்ள உணவு வகைகள். நெய், கடுகு எண்ணெய், எள் எண்ணெய் என அனைத்து சத்துகளும் கலந்த உணவுகளை உண்ணும்போது முடி வளர்ச்சி நன்றாக இருக்கும். ஒரு வாரத்தில் ஒரே வகையான பழங்கள் அல்லது காய்கறிகளை உண்டுவிட்டு முடி வளர்ச்சி மற்றும் உடல் ஆரோக்கியத்தை எதிர்பார்க்கக் கூடாது. அனைத்து நிறங்களில் உள்ள பழங்கள், காய்கறிகள் மற்றும் உணவு வகைகளைக் கலந்து உண்ண வேண்டும். இதன்மூலம் ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சியைப் பெறலாம்" என்கிறார்.